
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் ஒன்பது சதவீத பங்களிப்பையும், ஆண்டுக்கு சுமார் 12,000 கோடி வருவாயையும் ஈட்டித் தருகின்ற காஷ்மீர் சுற்றுலா பயணம் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட திடீர் தாக்குதலால் சிக்கலுக்குள்ளாகியுள்ளது.
இந்த சுற்றுலா வருமானத்தின் மூலம் காஷ்மீர் மக்களின் பொருளாதார வாழ்நிலையும் ஓரளவுக்கு ஈடுகட்டப்படுகிறது என்ற சூழலில் சுற்றுலாவிற்கு வந்த பயணிகளை படுகொலை செய்வது சுய பொருளாதாரத்தை முற்றாக ஒழித்துக் கட்டிவிடும் என்பதை காஷ்மீர் மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர் என்பதை இரண்டு தினங்களாக அங்கிருந்து வரக்கூடிய பல்வேறு செய்திகள் மற்றும் காணொளிகள் நமக்கு காட்டுகின்றன.
ஆனால் இதற்கு நேர் மாறாக காஷ்மீர் மக்கள் தீவிரவாதத்தை ஊக்குவிப்பவர்கள் என்பதைப் போலவும், அங்குள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதத்திற்கு துணை போகின்றவர்கள் என்ற வகையிலேயே ஆர்எஸ்எஸ் பாஜகவினர் கருத்தை பரப்பி வருகின்றனர்.
இதற்கு உதவுகின்ற வகையில் “இதன் பின்னணியில் பாகிஸ்தான் அடைக்கலத்தில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் ஒரு பிரிவான தி ரெசிஸ்டன்ட் ஃபிரண்ட் தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. என்றும், இவ்வாறு பயங்கரவாதிகள் அத்துமீறல் சம்பவங்களுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பது அதிர்ச்சியளித்து வருகிறது என்றும், ரா, ஐபி உள்ளிட்ட இந்திய உளவு நிறுவனங்களும், இந்திய ஒன்றிய அரசாங்கமும் தொடர்ச்சியாக கூறி வருகின்றன”. ஆனால் இதனை அவர்கள் மறுத்துள்ளார்கள்.
இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியை மூடுவது, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வது போன்றவற்றின் மூலம் பாகிஸ்தானுக்கு பொருளாதார ரீதியாக பதிலடி கொடுத்துள்ளதாகவும், சிந்து நதியின் நீர் இல்லாமல் பாகிஸ்தான் அழிந்து போகட்டும் என்று இந்திய ஒன்றியத்தின் சேர்ந்த எம்பியான ஒருவர் கொக்கரிக்கின்ற அளவிற்கு சென்றுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இந்திய ஒன்றிய அரசாங்கமான ஆர்எஸ்எஸ் – பாஜக அரசு, குறிப்பாக பிரதமரான மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்றவர்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்து வருகிறது.
இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் பாதுகாப்பு ஏன் பலவீனமானது என்று கேள்வி எழுப்புகின்ற பத்திரிக்கையாளர்கள் ஆர்எஸ்எஸ் – பாஜக குண்டர் படையினால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாகிஸ்தானில் இருந்து பஹல்காம் பகுதிக்கு வருவதற்கு மூன்றரை நாட்கள் ஆகின்ற சூழலில் தீவிரவாதிகள் ஊடுருவி விட்டார்கள் என்பதை எவ்வாறு நம்புவது என்று கேள்வி அனுப்பினால் அவர்களின், ‘தேச பக்தி’ மீது அவதூறுகளும், சந்தேகமும் எழுப்பப்படுகிறது.
காஷ்மீர் தாக்குதலை ஒட்டி கருத்துக்கள் கூறப்படுகின்ற முகநூல் பக்கங்கள், வாட்ஸ் அப் செய்திகள், இன்ஸ்டாகிராம், எக்ஸ் பக்க செய்திகள் போன்றவை அனைத்தும் கண்காணிப்பு குழுக்களால் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
காஷ்மீரில் சுற்றுலா பயணம் சென்றவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கண்டன அறிக்கை வெளியிடாதவர்கள், ‘தேசத் துரோகிகள்’ என்றும் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்றும் பிரச்சாரம் மீண்டும் மீண்டும் பொதுப் புத்தியில் திணிக்கப்படுகிறது.
தாங்க முடியாத கோடை வெப்பத்தை தணிப்பதற்கு சாணியால் சுவரை மொழுக வேண்டும் என்கின்ற டில்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள லட்சுமிபாய் கல்லூரியின் முதல்வர் பிரதியுஷ் வத்சலா சுதந்திரமாக செயல்படுகின்ற நாட்டில் சொல்லிக் கொள்ளப்படும் பகுத்தறிவுக்கோ அல்லது பார்ப்பன மத வெறியர்கள் உருவாக்குகின்ற கருத்துக்கு எதிராக பேசுகின்ற குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளோ கிடையாது என்பதை தான் இரண்டு தினங்களாக நடந்து வரும் பல்வேறு தாக்குதல்கள் நிரூபித்து வருகின்றன.
படிக்க:
♠ காசா முதல் காஷ்மீர் வரை ஊடகவியலாளர்களின் செயல்பாடு?
♠ காஷ்மீர்: காங்கிரஸ் கூட்டணி வெற்றி! ஆனால் அதிகாரம் ஆளுநரிடம்!
விதிவிலக்காக தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் இது பற்றி குறைந்தபட்சம் எதிர் கருத்து அல்லது கேள்வி கேட்பதற்கான உரிமையாவது உள்ளது.
இதுதான் திமுகவிற்கும் பாஜகவிற்கும் உள்ள வேறுபாடு என்றால், ‘அதிதீவிர இந்துத்துவ எதிர்ப்பாளர்கள்’ சாமியாடுகிறார்கள். இது வேறொரு சந்தர்ப்பத்தில் விவாதிக்கப்பட வேண்டிய அம்சம் என்பதால் இதற்கு மேல் அதற்குள் செல்லவில்லை.
ஆனால் தேசிய ஊடகங்களிலும், ஆர்எஸ்எஸ் – பாஜக நடத்துகின்ற சமூக வலைதளங்கள் மற்றும் கூலிக்கு அமர்த்தப்பட்டுள்ள இணையப் போராளிகள், தகவல் தொழில்நுட்ப அறிஞர்கள் குழாம், நாடு முழுவதும் இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்புணர்ச்சியை திட்டமிட்டு அதிகரித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை பயன்படுத்திக்கொண்டு காஷ்மீரில் உள்ள மசூதிகளின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் கண்டன குரல்களும், நீதிமன்றத்தின் கண்டன நடவடிக்கைகளும் ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பலுக்கு கடுமையான கோபத்தையும், வெறியையும் கிளப்பியுள்ளது என்றே நாம் அவதானிக்க முடிகிறது. இத்தகைய சூழலில் பஹல்காம் தாக்குதல் நடைபெற்றுள்ளது என்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
தனது தேர்தல் வெற்றிக்காக புல்வாமா தாக்குதலை நடத்திய ஈனப்பிறவிகள் தான் ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல் என்பதை அப்போதைய காஷ்மீர் கவர்னராக இருந்த சத்யபால் மாலிக் அம்பலப்படுத்தினார்.
இன்று அதே பாணியில் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சூழலையும், தேசிய பொருளாதரத்தில் பங்கு சந்தை தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருகின்ற சூழலையும் இணைத்துப் பார்க்கும்போது இந்த தாக்குதல் மீது சந்தேகத்தை எழுப்ப வேண்டியுள்ளது.
சுற்றுலாவிற்காக ‘இந்தியாவின் சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படும் காஷ்மீர் மாநிலத்திற்கு சென்றதாலேயே தனது இன்னுயிரை இழந்த 26 பேரின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்துவோம்.
ஆனால் இதனை வெறும் தீவிரவாத தாக்குதல், பயங்கரவாத தாக்குதல், பாகிஸ்தானின் சதி என்று மட்டுமே பரப்பப்படுகின்ற செய்திகளை கேள்விக்குள்ளாக்குவோம்.
இது போன்ற சூழலில் கண்ணை மூடிக்கொண்டு தீவிரவாதம், பயங்கரவாதம் என்று கூச்சல் எழுப்புவது தான் உண்மையான தேசபக்தி என்று முன்வைக்கப்படுகின்ற தேசிய வெறியை எதிர்த்து நிற்போம்.
- மாசாணம்







காஷ்மீர் பஹல்காம் சம்பவத்தில் பாசிச BJP மோடி அமித்ஷா வின் தேசிய வெற்றியை தூண்டுவதை அம்பலப்படுத்துவோம்