ஆதிக்கசாதி வெறியாட்டங்களை எதிர்த்து நிற்பதை சாதாரண விடயம் போல கடந்து போக முடியாது. தலைவெட்டி கூட்டங்களிடமிருந்து மிரட்டல்கள், சாதிய பிழைப்புவாத தலைவர்களிடமிருந்து எச்சரிக்கைகள், நண்பர்கள், உறவினர்கள் நல்லெண்ண விரும்பிகள் மத்தியில் இருந்து கனிவான ஆலோசனைகள்
அனைத்தையும் மீறி உண்மையை நிலைநாட்டவும், நீதியை வளையாமல் பாதுகாக்கவும், ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்களின் உள்ளக் குமுறலுக்கு குறைந்தபட்ச தீர்வைத் தேடுவதற்கும், வழக்கறிஞர்கள் என்ற முறையில் நெஞ்சுரம் வேண்டும்.
படிக்க:
♦ கோகுல்ராஜின் ஆணவக் கொலை வழக்கு – சில குறிப்புகள்.
கிரிமினல் குற்றக் கும்பல்களின் எடுபிடிகளாக, பெயில் பெட்டிஷன் போடுகின்ற சாராய வியாபாரிகள், பொறுக்கிகள், ரவுடிகள், சமூக விரோதிகளை பாதுகாக்கின்ற “தொழில் உரிமை” பேசுகின்ற வழக்கறிஞர்கள் மத்தியில் விலகி நின்று உரிமைக்காக போராடுவது அதையும் தனது சமூக கடமை என்று பறைசாற்றிய தோழர் ப.ப. மோகன் போன்றவர்கள் சமுதாயத்தை இன்னமும் நம்பிக்கையுடன் அணுகுவதற்கு முன்னோடிகளாக உள்ளனர்.
அந்த வகையில் அவருக்கு நன்றி தெரிவித்து ஓவியர் முகிலன் வரைந்த ஓவியத்தை நாங்களும் வழி மொழிகிறோம்.
ஆசிரியர் குழு
மக்கள் அதிகாரம்