பெட்ரோல், டீசல் விலை: மோடியின் “தேர்தல் சலுகை” முடியப்போகிறது!
மோடி தலைமையிலான பா.ஜ.க. கும்பல் இந்தியாவில் ஆட்சி பொறுப்புக்கு வந்ததிலிருந்து, அதாவது 2014-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை சுமார் ரூபாய் 7 லட்சம் கோடி மதிப்பிலான கார்ப்பரேட்டுகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, குஜராத் தொழிலாதிபர்களின் வங்கி மோசடிகளும், பார்ப்பனர்களின் பங்குச்சந்தை ஊழல்களும் வெளியே கசிந்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன.
கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை, கடன் தள்ளுபடி, வரி குறைப்பு, வராக்கடன் போன்றவற்றால் ஏற்படும் நிதிச்சுமையை அப்படியே பரந்துபட்ட மக்களின் தலையில் ஏற்றிவரும் மோடி கும்பல் ஐந்து மாநில தேர்தல்களையொட்டி இந்திய மக்களுக்கு ஒரு குறுகியகால சிறப்பு சலுகையை அளித்துவந்தது.
அதுதான் நிலையான எரிபொருட்கள் விலை. தற்போது அந்தத் தேர்தல்கள் முடிவுக்கு வந்துள்ளதால் மோடி கும்பலின் சிறப்பு சலுகையும் முடிவுக்கு வர இருக்கிறது. இதைத்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே சொல்லியும் விட்டார்.
फटाफट Petrol टैंक फुल करवा लीजिए।
मोदी सरकार का ‘चुनावी’ offer ख़त्म होने जा रहा है। pic.twitter.com/Y8oiFvCJTU
— Rahul Gandhi (@RahulGandhi) March 5, 2022
சாதாரண நாட்களிலேயே ஈவு இரக்கமற்ற முறையில் எரிபொருட்களின் மீதான வரியை உயர்த்தி மக்களை கொள்ளையடிக்கும் மோடி கும்பல் தற்போது உக்ரைன்-ரசியா போரினால் சர்வதேச அளவில் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையேற்றத்தையும் மக்களின் தலையில் கட்டப்போகிறது.
ஏறக்குறைய ரூ. 15 முதல் ரூ. 22 வரை ஒரு லிட்டருக்கான பெட்ரோல், டீசல் விலை ஏறக்கூடும் என Business Standard என்ற பத்திரிக்கை கணிக்கிறது.
ஒரு பேரல் கச்சா எண்ணெய் 40 டாலராக இருக்கும்போதே பெட்ரோல்/டீசல் மீதான வரிகளை உயர்த்தி ரூ. 45-க்கு விற்கப்படவேண்டிய ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ. 97-100 ஆக உயர்த்திய இந்த மோசடி கும்பல் தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் 140 டாலராக உயர்ந்துள்ள நிலையில் எந்தளவு எரிபொருட்களின் விலையை ஏற்றி மக்களின் தலையில் இடி இறக்கப்போகிறதோ என்று மக்கள் அஞ்சிக்கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு முறையும் எரிபொருட்களின் விலை ஏறும்போது அதில் அரசின் தலையீடு இல்லவே இல்லை, விலையேற்றம் என்பது மொத்தமும் அந்தந்த பெட்ரோலிய நிறுவனங்களின் சொந்த முடிவு என்று ஒரு மாமூலான கதைவிடுவார்கள் சங்கிகள்.
ஐந்து மாநில தேர்தல்களில் ஆளும் பா.ஜ.க.-வின் வெற்றிவாய்ப்பை பாதிக்கும் என்று எரிபொருட்களின் விலையை அந்நிறுவனங்கள் நிலையாக வைத்திருப்பது அரசின் தலையீடு இல்லாமலா?
ஊடகங்களிலும் சரி, தொலைகாட்சி விவாதங்களிலும் சரி எரிபொருட்களின் விலையேற்றம் என்பது ஒரு தனிப்பட்ட பொருளின் விலையேற்றம் என்பதுபோல சுருக்கிக் கூறுகிறார்கள். ஆனால் இப்பொருட்களின் விலையேற்றம் அனைத்து பொருட்களின் விலைகளை அதிகரிக்கச் செய்வதோடு மக்களின் வாங்கும் திறனையும் வெகுவாகக் குறைத்துவிடுகிறது.
ஒரு சாதாரண குடும்பத்தில் சுமார் ரூ. 3000 முதல் ரூ. 5000 வரை மாதச்செலவு கூடுகிறது என்பதுதான் உண்மை. ஏற்கனவே பணவீக்கம் குறிக்கப்பட்டிருந்த இலக்கை தாண்டி சென்று விட்டதாக ரிசர்வ் வங்கியின் ஜனவரி மாத அறிக்கை தெரிவிக்கிறது.
பெரும்பான்மையான மக்களின் மீது கிஞ்சித்தும் அக்கறையில்லாத கைதேர்ந்த கார்ப்பரேட் கூலி கும்பல் தனது பட்டவர்த்தமான பொருளாதார மோசடிகளையும், தோல்விகளையும் மக்களிடமிருந்து மறைக்கத் திட்டமிட்டே “இந்துக்களுக்கு ஆபத்து” என்று மதப்பிரச்சினைகளைத் தூண்டி திசை திருப்பி வருகிறது.
இத்தகைய பாசிச கும்பலிடமிருந்து நாடும், நாட்டு மக்களும் தற்காத்துக்கொள்ள வேண்டுமென்றால் தேர்தல்களில் அவர்களைத் தோற்கடிப்பதோடு நிற்காமல், அனைத்து அம்சங்களிலும் பாசிச கொடூர கரங்களை வெட்டி வீழ்த்துவதற்கு வீதியில் இறங்கிப் போராடுவதுதான் தீர்வு. அதன் மூலம்தான் ஆர்எஸ்எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பலை ஆட்சிஅதிகாரத்திலிருந்து மட்டுமல்லாமல் நாட்டிலிருந்தும் நிரந்தரமாக விரட்டியடிக்க முடியும்.
- ஜூலியஸ்
ஆதாரம்: