டந்த 10 ஆண்டுகளாக ‘வளர்ச்சியின் நாயகன்’ திருவாளர் மோடி உலகம் சுற்றத் செல்லும் பொழுதெல்லாம் இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக, இந்தியாவின் நன்மைக்காக மோடி உலகம் சுற்றிக் கொண்டிருப்பதாக தான் சங்கிகள் முன்பு பிதற்றிக் கொண்டிருப்பது வழக்கம்.

அப்பொழுதெல்லாம் மனிதப் பிறவியான நரேந்திர தாமோதர தாஸ் மோடி தன்னை தெய்வக் குழந்தையாக உணர்ந்ததில்லை. எனவேதான் நரவேட்டை நாயகன் மோடியை வளர்ச்சியின் நாயகன் என்றும் விஸ்வ குரு (அதாவது உலக ஆசான்) என்றும் அடையாளப்படுத்துவதோடு சங்கிகள் நிறுத்திக் கொண்டார்கள் போலும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தன்னை உயிரியல் ரீதியாகப் பிறக்காதவர் என்றும் தனது திறமைகள் அனைத்தும் தெய்வத்தால் நேரடியாக வழங்கப்பட்டதாகவும் பாசிச மோடி கண்டுபிடித்து உலகத்திற்கு அறிவித்து விட்டதால், உலக நாடுகளின் போரை தடுத்து நிறுத்தும் புதிய அவதாரத்தை, சங்கிகள், மோடிக்கு கொடுத்து விட்டார்கள்.

தற்போது மோடி ரஷ்யாவிற்கு செல்லும் பொழுது, ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்தி அமைதியைக் கொண்டு வருவதற்காகத்தான் மோடி ரஷ்யா செல்வதாக சங்கிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தியாவில் ‘வளர்ச்சியை’ கொண்டு வந்த மோடி இந்தியாவை தாண்டி உலக அளவில் பெரும் ‘பேரோடும் புகழோடும்’ இருக்கும் மோடி, ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்தி அமைதியை கொண்டு வருவதற்கான புதிய அவதாரத்தை எடுத்துள்ளதாக சங்கிகள் கதை அளந்து கொண்டிருந்தனர்.

மோடி ரஷ்யா சென்றிருந்த பொழுது, ரஷ்ய அதிபர் புடினும் தெய்வக் குழந்தையாக பிறந்த மோடியும் ஆரத் தழுவிய பொழுதும் கூட ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதும் அதற்கு பதிலடியாக உக்ரேனின் பள்ளி மீது ரஷ்யா பதில் தாக்குதல் நடத்தியதும் நடந்து கொண்டு தான் இருந்தன. தெய்வத்தால் மாபெரும் சக்தியுடன் படைக்கப்பட்டதாக பொதுவெளியில் உளறிக் கொண்டிருக்கும் மோடி இந்த தாக்குதல் குறித்து வாயே திறக்கவில்லை.

இரு நாடுகளுக்கு இடையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தான் வந்திருக்கும் பொழுதே தாக்குதலை தொடர்வது என்பது தன்னை அவமதிக்கும் செயல் என்று மோடி பொங்கி இருக்க வேண்டுமே, ஏன் பொங்கவில்லை? என்று மோடியின் அப்பாவி விசுவாசிகள் மனதிற்குள் ஆதங்கப்பட்டு இருக்க வாய்ப்புண்டு.

மோடி ரஷ்யா சென்றது ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்தி அமைதியை ஏற்படுத்துவதற்காக அல்ல என்ற உண்மையை புரிந்து கொள்ள அத்தகைய அப்பாவிகள் கீழ்காணும் விவரங்களை சேர்த்து பார்க்க வேண்டும்.

“அமைதிப்படை”யின் நாயகனாக செயல்பட்டு மணிப்பூரை பற்ற வைத்து நூற்றுக்கணக்கான பேர் கலவரத்தில் சாவதற்கு காரணமான மோடி அமைதியை ஏற்படுத்த ஒரு முறை கூட மணிப்பூருக்கு செல்லவில்லை. ஆனால் 2014 -18 காலகட்டத்தில் குஜராத்திற்கு 33 முறையும் உத்தரப்பிரதேசத்திற்கு 49 முறையும் சென்று வந்த மோடி, கடந்த 10 ஆண்டு காலத்தில் உலக நாடுகளுக்கு எல்லாம் சென்று வந்த மோடி, ஒரு முறை கூட பற்றி எரியும் மணிப்பூருக்கு செல்லவில்லை. இந்த விசயங்களை சேர்த்து பரிசீலிக்கும் போது தான் ஒருவரால் மோடியின் ரஷ்யப் பயணத்தைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.

இந்தியா – ரஷ்யா இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவதன் மூலம் தனது கார்ப்பரேட் நண்பர்களின் சொத்து குவிக்கும் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் மோடி ரஷ்யா சென்றாரே ஒழிய அமைதியை ஏற்படுத்துவதற்காக அல்ல என்பதால் ரஷ்யாவில் இவ்வளவு நடந்த பொழுதும் ஒருவாறு தன்னை சுதாகரித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு ஆஸ்திரியா நாட்டிற்குச் சென்றார் மோடி.

இந்த ஆஸ்திரியா, ஐரோப்பா கண்டத்தில் ஜெர்மனி மற்றும் இத்தாலி நாடுகளுக்கு அருகில் உள்ள ஒரு சின்னஞ்சிறிய நாடு. ஆஸ்திரியாவும் ஆஸ்திரேலியாவும் வெவ்வேறு நாடுகள். ஆஸ்திரேலியா என்பது ஒரு தனி நாடு மட்டுமல்ல; அது ஒரு தனி கண்டமும் கூட. இந்த நிலையில் ஆஸ்திரியா நாட்டு மக்கள் மத்தியில் பேசிய ஒரு கூட்டத்தில் அந்த நாட்டை ஆஸ்திரேலியா என்று விஸ்வகுரு கூறியுள்ளார். இது “ஆஸ்திரேலியா” இல்லை “ஆஸ்திரியா” என்று நூற்றுக்கணக்கான மக்கள் குரல் எழுப்பி மோடியின் தவறை திருத்தியுள்ளனர்.

அந்த நாட்டின் ச்சான்ஸ்லர் (நம் நாட்டில் பிரதமர் போன்ற பதவி) ஆக உள்ளவர்
கார்லர் நெகம்மர். இவரும் நமது விஸ்வகுருவும் இணைந்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தியுள்ளனர். (இந்த முறை பத்திரிக்கையாளர்களை பார்த்து பாசிச மோடி “ஓ கடவுளே” என்றெல்லாம் பயப்படவில்லை.) அந்த சந்திப்பின் பொழுது கார்லர் நெகம்மர் அவர்கள் தங்கள் ஆஸ்திரியா நாடு இறையாண்மை கொண்ட சுதந்திர நாடாக உருவாவதற்கு நேரு மிகப்பெரிய பங்காற்றியுள்ளார் என்று
நேருவைப் பற்றி ஆகா.. ஓகோ.. என்று புகழ்ந்து தள்ளிவிட்டார்.

படிக்க:ரஷ்யாவிலிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி: லாபத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் மோடி அரசு!

அப்படிப் புகழும் பொழுது, ஆஸ்திரியா நாடு இரண்டாம் உலகப் போருக்கு முன்பு பாசிச ஹிட்லரின் ஜெர்மனிக்கு அடிமைப்பட்டு கிடந்ததையும் இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி தோற்கடிக்கப்பட்ட பின் அந்நாடு நேச நாடுகளின் பிடிக்குள் சென்றதையும் நெய்மர் நினைவு கூர்ந்து உள்ளார்.

மேலும் இந்தியாவின் பிரதமராக இருந்த நேரு இங்கிலாந்துக்கு சென்றிருந்த தருணத்தில் அந்த நாட்டில் நேருவை சந்தித்த ஆஸ்திரிய நாட்டின் வெளியுரவுத் துறை அமைச்சர் தங்கள் நாடு சுதந்திரம் பெறுவதற்கு உதவி செய்ய வேண்டும் என்று நேருவை கேட்டுக் கொண்டதாகவும், ஆஸ்திரியா நாட்டின் வேண்டுகோளுக்கு இணங்க நேரு ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி தங்கள் நாடு இறையாண்மை பெற்ற சுதந்திர நாடாக மலர்வதற்கு உதவி செய்ததாகவும் தேதி மற்றும் ஆண்டு வாரியாக வரலாற்று விவரங்களையும் விரிவாக அடுக்கியுள்ளார்.

இந்தியாவில் நேருவை வசைபாடியே தனது தவறுகளை மறைக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் மோடிக்கு, அந்நாட்டு ச்சான்ஸ்லரின் (பிரதமரின்) பேச்சு எப்படி எரிச்சலையூட்டி இருக்கும் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இந்தியாவில் உள்ள சங்கிகளுக்கும் இது எரிச்சலை ஏற்படுத்தி இருக்கும்.

ஆனால் காவிபாசிஸ்டுகள் மிகவும் திறமையானவர்கள். தங்களின் தோல்விகளை அவமானங்களை ஜீரணித்துக் கொள்வதற்கும் வெளியே தெரியவந்து நாறினாலும் அது குறித்து கவலைப்படாமல் தமது பாசிச வேலையை தொடரும் அளவிற்கு பக்குவமும் பெற்றவர்கள்.

குமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here