நெல்லை கவினின் சாதி ஆணவப்படுகொலைக்கு முடிவுகட்டுவோம்!
தமிழக அரசே!
ஆணவப்படுகொலைக்கு உடனடியாக சிறப்பு சட்டம் இயற்று!
அதில்…

  • ஆணவப்படுகொலை செய்கின்ற நபரை தூக்கில் போடு!
  • ஆணவப்படுகொலைக்கு உடந்தையாக இருப்பவர்களை சாகும் வரை சிறையில் அடை!
  • சாதி சங்கங்களை தடை செய்!
  • பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் சாதி மத அடையாளங்களுடன் வருவதை தடை செய்!
  • இணைய தளங்களில் தனது சாதியை உயர்திப்பிடிக்கும் பிறர் சாதியை கொச்சைப்படுத்தி பேசும் நபர்களை உடனடியாக கைது செய்!
  • சாதி, மத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்!
  • உழைக்கும் மக்களே!
    உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைவோம்!
    சாதி, மதமற்ற பொதுவுடமை சமூகத்தை படைப்போம்!

என்ற கோரிக்கை முழக்கத்தினை வலியுறுத்தி….

திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக கூட்டமைப்புகளுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 04.08.2025 அன்று காலை 11.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு…..

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர்.லதா அவர்கள் தலைமை தாங்கினார்.

முதல் நிகழ்வாக நெல்லை கவின் ஆணவப்படுகொலையை கண்டித்தும் சிறப்பு சட்டம் இயற்ற தமிழக அரசை வழியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கண்டன உரைகள் :

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா,
மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் சீனிவாசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் கோவன்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட இணைச் செயலாளர்
தோழர் மணலிதாஸ்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் கடலூர் மாவட்ட செயலாளர் தோழர் பால்ராஜ்,
மக்கள் அதிகாரம் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தோழர் காவிரிநாடான்
ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கண்டன உரையாற்றிய கூட்டமைப்புகள்:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாநகர செயலாளர் தோழர் புல்லட் லாரன்ஸ்,
ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் சம்சுதீன்,
சமூக நீதிப் பேரவை நிறுவனர் தோழர் ரவிக்குமார்,
மக்கள் உரிமை மீட்பு இயக்கம் நிறுவனர் தோழர் பஷீர்,
திராவிடர் விடுதலை கழகம் மாவட்ட செயலாளர் தோழர் புதியவன்,
தமிழ்த் தேச மக்கள் முன்னணி வழக்கறிஞர் தோழர் கென்னடி,
ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

முன்னிலை வகித்த அமைப்புகள்:

மக்கள் அதிகாரத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் செழியன்,
மாவட்ட செயலாளர் தோழர் கார்க்கி,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர் பரத்,
மக்கள் உரிமை கூட்டணி மாவட்ட செயலாளர் தோழர் காசிம்,
ரெட் பிளாக் கட்சியின் தலைவர் தோழர் ஏ.சி.ராமலிங்கம்,
தமிழ் தேச விடுதலை இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் உதயகுமார்.

இறுதியாக நன்றியுரை:

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட தலைவர் தோழர் செந்தில்.

ஆர்ப்பாட்டத்தில் ஆதிக்க சாதி ஆணவப்படுகொலையை அம்பலப்படுத்தியும் கண்டித்தும் முழக்கப் பதாகைகள் வைக்கப்பட்டது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

படிக்க: நெல்லையில் மென்பொறியாளர் கவின் ஆணவப் படுகொலை! என்றுதான்டா அடங்கும் உங்கள் ஆதிக்க சாதிவெறி? மிருகங்களா!

இவ்வார்ப்பட்டத்தில் புரட்சிகர அமைப்புகள் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் நிர்வாகிகள் தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.

இவண்:
ம.க.இ.க
பு.ஜ.தொ.மு
திருச்சி மாவட்டம்.
தொடர்புக்கு: 8056905898,
8098604347.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here