UGC -யின் புதிய சமத்துவ விதிகளுக்குத் தடை! இன்னும் எத்தனை ரோகித் வெமுலாக்கள் சாக வேண்டும்? என்ற முழக்கத்தின்கீழ் நேற்று (08/02/2026) மாலை 5 மணி அளவில் அரும்பு நிலையம் பாரதி புத்தகாலயம் அரங்கத்தில் நடைபெற்ற அரங்கக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சட்டக்கல்லூரி பல்கலைகழக மற்றும் பள்ளி மாணவர்கள் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.
கூட்டத்தில் அனைத்து பேச்சாளர்களும் கலந்து கொண்டு உயர் கல்வி நிறுவனத்தில் நடக்கும் மாணவர்களுக்கு மாணவர்களுக்கு நடக்கும் சாதி மதம் பாலினம் மொழி இனம் ரீதியாக நடக்கும் வன்முறைகளை கண்டித்தும் மாணவர் படு(தற்)கொலைகளின் துயரத்தை அவளங்களையும் பார்ப்பனியத்தின் கொடுங்கொண்மைகளையும் அம்பலபடுத்தி இதற்கு துணை போகின்ற ஆர்எஸ்எஸ் பிஜேபி சங்க பரிவார கும்பல்களையும் சங்கித்தனமாக செயல்படும் கல்வியாளர்கள் துணைவேந்தர்களின் நடவடிக்கைகளையும் கண்டித்து பேசினர்.
மேலும் யுஜிசி புதிய விதிகளுக்குத் தடை விதித்த உச்சநீதிமன்றத்தின் ஆர்எஸ்எஸ் சார்பான நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்தினர்.
- யுஜிசி புதிய விதி அமுல்படுத்த வேண்டும்.
- எஸ்சி எஸ்டி ஓபிசி மாணவர்களை பாதுகாக்க வேண்டும்.
- ரோகித் வெமுலா சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும்.
- தமிழ்நாட்டில் மாணவர் சங்க தேர்தல் நடத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசப்பட்டது.

தகவல்:
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சென்னை தமிழ்நாடு
தொடர்புக்கு: +91 9788149252






