ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்று!
சாதி மறுப்பு திருமணங்களுக்கு பாதுகாப்பு வழங்கு!
சாதி வெறி படுகொலைகளுக்கு காரணமான சனாதனத்தை தாங்கிப் பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ் சங்க பரிவார் அமைப்புகளைத் தடை செய்!
சாதி வெறி சங்கங்களைத் தடை செய்! ஜனநாயகக் கூட்டரசை நிறுவுவோம்! சாதி ஒழிப்பை நோக்கி முன்னேறுவோம்!
தந்தை பெரியார் பிறந்த நாளில் மதுரை – கோவையில்
மாநில அளவில் கண்டன ஆர்ப்பாட்டம்
17.09.2025
காலை 11 மணி

மாநில அரசே!
சாதி தீண்டாமை பாகுபாட்டிற்கு உள்ளாகும் சாதிகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கு! தீண்டாமை குற்றம் புரியும் ஆதிக்க சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்!
சாதி வெறி சங்கங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்!
சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு கல்வி – வேலைவாய்ப்பில் தனிச்சலுகை மற்றும் முன்னுரிமை வழங்கு!
சாதி மறுப்பு – தீண்டாமை ஒழிப்புக்கென தனித்துறையை உருவாக்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வு பரப்புரை செய்!
உழைக்கும் மக்களே!
சொந்த சாதியில் மட்டுமே திருமணம் செய்வோம் என்பது அவமானம்! சாதி மறுப்பு திருமணமே பெருமிதம்!
ஒடுக்கப்பட்ட மக்களிடம் ஆண்ட பரம்பரை என சாதி திமிரை காட்டுது! அதிகார வர்க்கத்தின் முன் கூழைக்கும்பிடு போடுது!
பார்ப்பனியமே இந்து மதம்! சாதியமே அதன் உயிர் நாடி!
பெயருக்கு பின்னால் சாதியை போடாதே! சாதி இழிவை சுமக்காதே!
சாதியை பிடுங்கி எறி வேரோடு! சமத்துவ சமூகம் அமைக்கப் போராடு!
ஊரை கொள்ளையடிப்பவனுக்கு சாதி வேண்டும்! உழைப்பாளிக்கு வேண்டவே வேண்டாம்!
ஐயர், முதலியார், செட்டியார் தேவர், வன்னியர் எந்த கல்லூரியில் வாங்கிய பட்டம்!
கிராமங்கள் நகரங்களில் சமூக நல்லிணக்கக் குழுக்களை அமைப்போம்! சாதியக் கட்டமைப்புகளைத் தவிர்ப்போம்!
சாதி வெறியர்களுக்கு பதிலடி கொடுக்க நகரம், கிராமம் என அனைத்து இடங்களிலும் தற்காப்பு குழுக்களை கட்டுவோம்!

“சாதி தீண்டாமை பாகுபாட்டிற்கு உள்ளாகும் சாதிகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கு! தீண்டாமை குற்றம் புரியும் ஆதிக்க சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்!’
என்றொரு முழக்கத்தை முன்வைத்துள்ளீர்கள்.
சாதிப் பாகுபாடும், தீண்டாமைப் பாடகுபாடும் ஒன்றோடொன்று இணைந்தது. சாதியப் படிநிலை அமைப்பில் மேலிருந்து கீழ் வரை அல்லது கீழிருந்து மேல் வரை சாதிகளுக்கிடையில் பாகுபாடுகள் நிலவுகின்றன. அதேபோல தீண்டாமையும் வேறு வேறு அளவுகளில் நிலவுகிறது.
தீண்டத்தகாத சாதிகள் என்று பொதுவாக அறியப்படும் பள்ளர், பறையர், அருந்ததியர் சாதிகளுக்கு இடையிலும் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. அருந்ததியர் பையன் பள்ளர், பறையர் சாதிப் பெண்களை காதலித்து மணம் புரிந்தால் அதற்குக் கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது. காதலர்களைப் பிரிக்க பல்வேறு யுக்திகளைக் கையாளுகிறார்கள்
தீண்டத்தக்க சாதிகள் என்று அறியப்படும் பிற சாதிகளுக்கிடையிலும் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு வன்னியர் சாதிப் பையன் ஒரு வெள்ளாளக் கவுண்டர் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டால் அதற்கும் கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது. இங்கேயும் காதலர்களைப் பிரிக்க பல்வேறு யுக்திகளைக் கையாளுகிறார்கள்.
பார்ப்பனர்களைப் பொருத்தவரை மற்ற எல்லா சாதியினரும் தீண்டத்தகாதவர்கள்தான். இவர்கள் கடைபிடிக்கும் தீண்டாமைக்கு ஒரு எடுப்பான உதாரணம் கருவறைத் தீண்டாமை. பார்ப்பனர்களும் EWS பிரிவில் இட ஒதுக்கீட்டுச் சலுகையை அனுபவிக்கிறார்கள்.
இந்துமத சாதியப் படிநிலையில் ஆகக் கீழ்மட்டத்தில் உள்ள சாதியைத் தவிர மற்ற எல்லா சாதியினரும் ஒரு வகையில் தீண்டாமையைக் கடைப்பிடிப்பவர்கள்தான். ஒருவகையில் ஆதிக்கச் சாதிகள்தான்.
இப்பொழுது தங்களது முழக்கத்தின் இரண்டாவது வரியைப் பார்ப்போம்.
“தீண்டாமை குற்றம் புரியும் ஆதிக்க சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்!”
எல்லாச் சாதிகளுமே தீண்டாமைக் குற்றம் புரிவதால் அனைத்து சாதிகளுக்குமே இடஒதுக்கீட்டை இரத்து செய்ய முடியுமா? ஒரு சில குறிப்பிட்ட சாதிகள்தான் தீண்டாமைக் குற்றம் புரிகின்றன என்று கண்டறிவதற்கான வரையறை என்ன?
ஒருவேளை அப்படி ஒருசில சாதிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கான இடஒதுக்கீட்டை இரத்து செய்தால் அந்தச் சாதிகளில் பிறந்த குற்றத்திற்காக, அச்சாதிகளில் உள்ள தீண்டாமைக் குற்றம் புரியாத எண்ணற்றோரும் மற்றும் ஜனநாயக முற்போக்கு எண்ணம் கொண்டோரும் இடஒதுக்கீட்டுச் சலுகையை இழக்க வேண்டுமா? சாதி மறுப்புத் திருமணங்களை ஏற்றுக்கொண்ட எண்ணற்றோரும் இச்சாதிகளில் இருக்கவே செய்கின்றனர்.
இது குறித்து தங்களின் விளக்கம் என்ன?
தீண்டாமை குற்றம் புரியும் ஆதிக்கச் சாதியில் உள்ள குறிப்பிட்ட நபர்களுக்கு வேண்டுமானால் இடஒதுக்கீட்டுச் சலுகையை இரத்து செய்ய பரிந்துரைக்கலாம். அப்பொழுதும்கூட அவர் மீது குற்ற வழக்கு தொடுக்கப்படுவதால் அவர் அரசு வேலைக்குச் செல்லும் வாய்ப்பையும் தானாகவே இழந்து விடுகிறார்.
எனவே, இந்த முழுக்கத்தை விவாதத்திற்கு உட்படுத்தி, ஒன்று திருத்தி அமைக்க வேண்டும் அல்லது திரும்பப் பெற வேண்டும் என்பதே எனது கோரிக்கை.
“சாதி தீண்டாமை பாகுபாட்டிற்கு உள்ளாகும் சாதிகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கு! தீண்டாமை குற்றம் புரியும் ஆதிக்க சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்!’
என்றொரு முழக்கத்தை முன்வைத்துள்ளீர்கள்.
சாதிப் பாகுபாடும், தீண்டாமைப் பாடகுபாடும் ஒன்றோடொன்று இணைந்தது. சாதியப் படிநிலை அமைப்பில் மேலிருந்து கீழ் வரை அல்லது கீழிருந்து மேல் வரை சாதிகளுக்கிடையில் பாகுபாடுகள் நிலவுகின்றன. அதேபோல தீண்டாமையும் வேறு வேறு அளவுகளில் நிலவுகிறது.
தீண்டத்தகாத சாதிகள் என்று பொதுவாக அறியப்படும் பள்ளர், பறையர், அருந்ததியர் சாதிகளுக்கு இடையிலும் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. அருந்ததியர் பையன் பள்ளர், பறையர் சாதிப் பெண்களைக் காதலித்து மணம் புரிந்தால் அதற்குக் கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது. காதலர்களைப் பிரிக்க பல்வேறு யுக்திகளைக் கையாளுகிறார்கள்
தீண்டத்தக்க சாதிகள் என்று அறியப்படும் பிற சாதிகளுக்கிடையிலும் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு வன்னியர் சாதிப் பையன் ஒரு வெள்ளாளக் கவுண்டர் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டால் அதற்கும் கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது. இங்கேயும் காதலர்களைப் பிரிக்க பல்வேறு யுக்திகளைக் கையாளுகிறார்கள்.
பார்ப்பனர்களைப் பொருத்தவரை மற்ற எல்லா சாதியினரும் தீண்டத்தகாதவர்கள்தான். இவர்கள் கடைபிடிக்கும் தீண்டாமைக்கு ஒரு எடுப்பான உதாரணம் கருவறைத் தீண்டாமை. பார்ப்பனர்களும் EWS பிரிவில் இட ஒதுக்கீட்டுச் சலுகையை அனுபவிக்கிறார்கள்.
இந்துமத சாதியப் படிநிலையில் ஆகக் கீழ்மட்டத்தில் உள்ள சாதியைத் தவிர மற்ற எல்லா சாதியினரும் ஒரு வகையில் தீண்டாமையைக் கடைப்பிடிப்பவர்கள்தான். ஒருவகையில் ஆதிக்கச் சாதியினர்தான்.
இப்பொழுது தங்களது முழக்கத்தின் இரண்டாவது வரியைப் பார்ப்போம்.
“தீண்டாமை குற்றம் புரியும் ஆதிக்கச் சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்!”
எல்லாச் சாதிகளுமே தீண்டாமைக் குற்றம் புரிவதால் அனைத்து சாதிகளுக்குமே இடஒதுக்கீட்டை இரத்து செய்ய முடியுமா? ஒரு சில குறிப்பிட்ட சாதிகள்தான் தீண்டாமைக் குற்றம் புரிகின்றன என்று கண்டறிவதற்கான வரையறை என்ன?
ஒருவேளை அப்படி ஒருசில சாதிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கான இடஒதுக்கீட்டை இரத்து செய்தால் அந்தச் சாதிகளில் பிறந்த குற்றத்திற்காக, அச்சாதிகளில் உள்ள தீண்டாமைக் குற்றம் புரியாத எண்ணற்றோரும் மற்றும் ஜனநாயக முற்போக்கு எண்ணம் கொண்டோரும் இடஒதுக்கீட்டுச் சலுகையை இழக்க வேண்டுமா? சாதி மறுப்புத் திருமணங்களை ஏற்றுக்கொண்ட எண்ணற்றோரும் இச்சாதிகளில் இருக்கவே செய்கின்றனர்.
இது குறித்து தங்களின் விளக்கம் என்ன?
தீண்டாமை குற்றம் புரியும் ஆதிக்கச் சாதியில் உள்ள குறிப்பிட்ட நபர்களுக்கு வேண்டுமானால் இடஒதுக்கீட்டுச் சலுகையை இரத்து செய்யப் பரிந்துரைக்கலாம். அப்பொழுதும்கூட அவர் மீது குற்ற வழக்கு தொடுக்கப்படுவதால் அவர் அரசு வேலைக்குச் செல்லும் வாய்ப்பையும் தானாகவே இழந்து விடுகிறார்.
எனவே, இந்த முழுக்கத்தை விவாதத்திற்கு உட்படுத்தி, ஒன்று திருத்தி அமைக்க வேண்டும் அல்லது திரும்பப் பெற வேண்டும் என்பதே எனது கோரிக்கை.