ரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சஞ்சய் ரஸ்தோகி தலைமையில் குழுவை அமைத்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தீர்ப்பளித்த நீதிபதிகள், “நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை என்பது குடிமக்களின் உரிமை என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது. எனவே, விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட வேண்டும். இந்த விசாரணையை கண்காணிக்க ஒரு SIT குழு அமைக்கப்பட வேண்டும். ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இந்த SIT-யை வழிநடத்த வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி ஒரு வழக்கை விசாரிக்கும் போது, மதுரைக் கிளையில் வழக்கு நிலுவையில் இருந்தபோதும், மேலும் முதலமைச்சர் ஒரு நபர் ஆணையத்தை அமைத்திருந்த போதும், தனி நீதிபதி அதைத் தன்னிச்சையாக கையில் எடுத்து, எந்த ஆவண ஆதாரத்தையும் குறிப்பிடாமல் SIT அமைக்க உத்தரவிட்டது முறையானது அல்ல. தனி நீதிபதி, வழக்கில் இல்லாத கரூர் கூட்ட நெரிசல் பற்றி கருத்து தெரிவித்தார். இதில் தவெக வழக்கில் ஒரு தரப்பாகச் சேர்க்கப்படவில்லை. இருந்தபோதிலும், நீதிபதி தாமாக முன்வந்து எஸ்ஐடி அமைக்க உத்தரவிட்டார். இந்தக் கோரப்பட்ட விஷயங்கள் அவரது முன் இருந்த ரிட் மனுவில் இல்லை.

கரூர் வழக்கு மதுரைக் கிளையின் அதிகார வரம்பிற்குள் வருகிறது. அப்படியிருக்கையில், சென்னை தனி நீதிபதி இந்த வழக்கை ஏன் விசாரணைக்கு எடுத்தார் என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. அரசியல் கட்சிகளுக்கான செயல்பாட்டுக்கான நிலையான இயக்க நடைமுறைகளை உருவாக்குவது கிரிமினல் அதிகார வரம்பிற்குள் எவ்வாறு வரும் என்று உயர் நீதிமன்றம் விளக்கம் அளிக்க வேண்டும். இந்தக் காரணங்களுக்காகவே நியாயமான விசாரணை தேவைப்படுகிறது, உயர் நீதிமன்றத்தின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கவனித்து வருகிறோம்” என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினார்கள்.

கரூரில் தன்னை பார்க்க வந்த ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்திலிருந்து 42 பேரை பலி கொடுத்து தனது அரசியல் பயணத்தை தீவிரமாக துவங்கியுள்ள விஜய்தான் உண்மையான ’கம்யூனிஸ்ட்’ என்றே நாம் கூற முடியும். ஏனென்றால் இந்த படுகொலைக்கு காரணம் அரசு கட்டமைப்பு அதிலும் குறிப்பாக, திமுகவின் செந்தில் பாலாஜி இருவரின் சதித்திட்டம் தான் என்பதும், மதுரை மாநாட்டில் ”ஸ்டாலின் அங்கிள்” என்று தமிழகத்தின் முதலமைச்சர் பெயரை நேரடியாகவே அறிவித்ததன் மூலமும். கரூர் மரணத்திற்கு பின்னர் வெளியிட்ட வீடியோவில் கூட “சிஎம் சார் என்னை நேராக பழிவாங்குங்கள்” என்று வீடியோவில் முன் வைத்ததன் மூலம் எதிரியை துல்லியமாக கணித்து தாக்குதல் நடத்தியுள்ளார் என்ற முறையில் ‘கம்யூனிஸ்ட்’ ஆகியுள்ளார். விரைவில் சமகால கம்யூனிச குருமார்களின் ஆசியுடன் சிறந்த கம்யூனிஸ்ட் ஆகவும் மாறிவிடுவார் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

ஆனால் இத்தகைய படுகொலைகளை கண்டித்து கூட்டமைப்பு ஒன்றில் இணைந்து கொண்டு கையெழுத்து போட்டால் உடனே திமுகவின் சொம்பு 200 ரூபாய் ஓபி என்று இழிவு செய்து நக்கலடிக்கிறது ஆர்எஸ்எஸ் பாஜகவின் ட்ரோல் படை.

எப்போதுமே உண்மை என்று ஒன்றுதான் இருக்க முடியும். இரண்டு உண்மைகள் ஒருபோதும் இருக்க முடியாது. கரூர் படுகொலைக்கு காரணம் விஜய்தான் என்று சொல்லும் போது, “உடனே விஜயும் தான், அதே சமயத்தில் அந்த இடத்தில் கூட்டம் போடுவதை கண்காணித்து அதற்கு உரிய பாதுகாப்புகளை கொடுத்து, தண்ணீர் இல்லாமல் தவித்தவர்களுக்கு தண்ணீர் வசதி ஏற்பாடு செய்து கொடுத்து, நெருக்கடியில் ஓட முயற்சிக்கின்ற ரசிகர்களை கூட்ட நெரிசலில் ஒருவர் மீது ஒருவர் இடித்துக் கொண்டு ஓடக்கூடாது என்று அறிவுறுத்தியோ அல்லது குறைந்தபட்ச பலப்பிரயோகம் செய்தோ அவர்களை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும்” என்று இன்னொரு உண்மையை சொன்னால் மட்டும்தான் இதை போன்ற சிறந்த கம்யூனிஸ்ட் ஆக முடியும்.

42 பேர் படுகொலைக்கு நேரடியாக யார் காரணம் என்று கேள்வி கேட்டால் விஜய் அரசியல் பின்னணி, விஜயிடம் காணப்படும் வர்க்க உணர்வு, எந்த வர்க்கத்தின் பிரதிநிதி, ஏன் அரசியலுக்கு வந்தார் இவற்றையெல்லாம் நீளமாக ஆய்வு சொல்வதன் மூலம் தான், ஒவ்வொருவரின் கம்யூனிச உணர்வை அல்லது கம்யூனிஸ பிடிமானத்தை நிரூபிக்க முடியுமே தவிர சார்ட்டாக 42 பேர் படுகொலைக்கு விஜய் தான் முதல் குற்றவாளி என்று பேசுவது, திமுகவை பற்றி வாயே திறக்காமல் இருப்பது ஆகியவை அனைத்தும் உங்களது கம்யூனிச கொள்கை பிடிப்பின் மீது வைக்கப்பட்டுள்ள ‘சத்திய சோதனை’ என்று கூற முடியும்.

வட மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் பாஜக மற்றும் மோடியை விமர்சித்து திரைப்பட கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் அறிக்கைகள் வெளியிட்டால் உடனடியாக ஆர்எஸ்எஸ் பாஜகவிடம் கையேந்தி நிற்கின்ற கூலிப்படையினர் தனியாக ஒரு எதிர்ப்பு அறிக்கை விடுவதைப் போல, அதாவது உண்ணாவிரதம் இருக்கின்ற பந்தலுக்கு எதிராக உண்ணும் விரதம் நடத்துவது என்பதைப் போல தமிழகத்திலும் புதிய வகை பண்பாடு துவங்கி உள்ளது.

எனினும், இது ஒரு நல்ல வகையிலான முன்னேற்றம் தான். ஏனென்றால் இத்தகைய அறிக்கைகளில் கையெழுத்து போடுபவர்களை குறித்து வைத்துக் கொள்வதற்கும், எதிர்காலத்தில் உரிய ’சன்மானங்களை’ வழங்குவதற்கும் தயாராக வேண்டும். கையெழுத்தே போடாமல் மனதிற்குள் பூணூலை மாட்டிக் கொண்டு நாடகம் ஆடுகின்ற அறிவு பிழைப்புவாதிகளையும் குறித்து வைத்துக் கொள்வதற்கு இத்தகைய அறிக்கைகள் நமக்கு உதவும். அல்லது ‘தோழர் விஜயைப்’ போல தைரியமாக எதிரிகளை பெயர் சொல்லி அழைப்பதற்கும் நேரடியாக தாக்குதல் தொடுப்பதற்கும் கற்றுக்கொள்ள இத்தகைய அறிக்கைகள் நமக்கு உதவலாம்.

படிக்க: 

 கிரிமினல் விஜய்: தமிழக அரசியலில் முளைத்துள்ள புதிய விசச் செடி!

 பனையூர் பண்ணையாரின் வீட்டை முற்றுகையிடுவோம்!

கரூர் படுகொலைகளுக்கு விஜய் தான் காரணம் அவர்தான் முதல் குற்றவாளி என்று நாமும் வேறு பலரும் சொன்னாலும், திமுக அரசு அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இரண்டாம் மட்ட தலைவர்களின் மீது வழக்கு பதிவு செய்ததை வைத்துக் கொண்டு, ’திமுகவின் அட்டகாசமான மூவ்’, ’திறமையான டேக்டீஸ்’ என்றெல்லாம் பிதற்றிக் கொண்டிருந்த திமுகவின் ஆதரவு யூடியுபர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் முகத்தில் உச்ச நீதிமன்றம் கரியை பூசி உள்ளது.

தமிழக அரசு நியமித்த அருணா ஜெகதீசன் ஆணையம், தமிழக உயர் நீதிமன்றம் நியமித்த அஸ்ரா கார்க் தலைமையிலான விசாரணைக் குழு ஆகியவை அனைத்துக்கும் தடை விதித்து நேரடியாக சிபிஐ இந்த வழக்கை விசாரிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நாட்டில் செயல்படும் அரசு கட்டமைப்பு ஏதோ நீதி நடுநிலைமை தவறாத ஜனநாயக அமைப்புகள் என்பதைப் போலவும், இந்த அமைப்புகளின் கீழ் முறையான விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதைப் போலவும், கம்யூனிச அமைப்புகளுக்கு எதிராக களமாடிய பல்வேறு கருத்து கந்தசாமிகள், ”அரசே குற்றவாளி என்பதை கம்யூனிஸ்டுகள் சொல்லவில்லை. மாறாக விஜய் குற்றவாளி என்று கூறுவதன் மூலம் தனது வர்க்கப் பார்வையில் இருந்து நழுவி விட்டார்கள்” என்றெல்லாம் சண்டமாருதம் செய்து பதிவு போட்டுக் கொண்டிருந்தார்கள்.

தற்போது உச்ச நீதிமன்றம் அரசே குற்றவாளி என்ற கோணத்தில் உத்தரவிட்டுள்ளபடி சிபிஐ விசாரணை நடத்தப்பட்டால் கரூர் சம்பவத்தில் உண்மையாக நடந்த சதி திட்டங்கள் அல்லது படுகொலைகள் பற்றிய பின்னணி ஆகியவை வெளிவந்து விடும் என்று நம்மை நம்பச் செல்கிறார்கள்.

விஜயின் அரசியலை வர்க்க ஆய்வு செய்து அது எந்த கண்ணோட்டத்தில் நடத்தப்படுகிறது என்பதை முன் வைப்பது வேறு! ஆனால் குறிப்பான தருணத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளை சுட்டிக்காட்டி தண்டிக்கப்பட வேண்டும் என்று கோருவது வேறு.

எனினும் 42 பேர் படுகொலையை நடத்திவிட்டு தைரியமாக மீண்டும் ’நீதி வெல்லும்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கின்ற விஜய் போன்ற ’திடீர் கம்யூனிஸ்டுகளின்’ நேர்த்தியான அரசியல் நமக்கு கை கூடி வராது தான்.

என்ன செய்வது?

மருது பாண்டியன்.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here