உலக வரைபடத்தில் இத்தனை நாளாக இருந்த பித்தலாட்டத்தை இப்பொழுதுதான் சரி செய்து ஐநா சபை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த தீர்மானத்திற்கு உலக நாடுகள் அனைத்தும் ஒப்புக்கொண்ட நிலையில் ஒரே ஒரு நாடு மட்டும் எதிர்த்து வாக்களித்தது. வேற யார் நம்ம பெரியண்ணன் அமெரிக்கா தான். அமெரிக்கா ஈரான் போரில் தலையிட்டு மூக்கு உடைபட்டு ஏற்கனவே உலக அரங்கில் தனிமைப்பட்டு போயிருந்த நிலையில் ஐநா சபையில் இந்த தீர்மானத்தின் மூலம் முற்றிலும் அம்பலப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இது தொடரும் என்று நினைக்கிறேன்
உலக மேப் கதைக்கு வருவோம். பூமி உருண்டையாக இருப்பதால், அதை ஒரு தட்டையான காகிதத்தில் வரையும்போது நிலப்பரப்புகளின் அளவில் சில சிதைவுகள் (Distortion) ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இது 1569ஆம் ஆண்டு ஜெரார்டஸ் மெர்கேட்டரால் கடல்வழிப் போக்குவரத்திற்காக உருவாக்கப்பட்டது. இதில் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள நாடுகள் சிறியதாகவும், துருவப் பகுதிகளுக்கு அருகில் உள்ள நாடுகள் (எடுத்துக்காட்டாக, கிரீன்லாந்து, ஐரோப்பா, வட அமெரிக்கா) அவற்றின் உண்மையான அளவை விடப் பெரியதாகவும் தோற்றமளிக்கின்றன. உண்மையில் ஆப்பிரிக்கா கண்டமானது கிரீன்லாந்தை விட 14 மடங்கு பெரியது என்றாலும், இந்த வரைபடத்தில் இரண்டும் ஒரே அளவில் காட்சியளிக்கின்றன
பழைய வரைபடத்தின் பிழைகளைத் திருத்தி, கண்டங்களின் உண்மையான பரப்பளவைச் சரியாகக் காட்டும் வகையில் 2018-ல் வரைபட நிபுணர்களால் Equal Earth Projection முறை உருவாக்கப்பட்டது. காலனித்துவ காலத்து மெர்கேட்டர் வரைபட முறைக்கு விடை கொடுத்துவிட்டு, நாடுகளின் சரியான நிலப்பரப்பை வெளிப்படுத்தும் ‘ஈகுவல் எர்த்’ புதிய உலக வரைபடத்தை அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்த ஐநா பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 164 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன; அமெரிக்கா மட்டும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது
படிக்க:
♦ உலகப் போலீஸ் ரவுடி அமெரிக்க ட்ரம்ப்-பின் அடாவடித்தனம்…!
♦ அமெரிக்காவின் படுகொலையும், மோடியின் அடிமைத்தனமான மவுனமும்!
இது ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்றால் பழைய மெர்கேட்டர் (Mercator) வரைபடம் வெறும் புவியியல் வழிகாட்டி மட்டுமல்ல, அது பல நூற்றாண்டுகளாக உலக மக்களிடம் ஆழமான உளவியல் தாக்கங்களையும், தவறான உலகப் பார்வையையும் ஏற்படுத்தியுள்ளது. மனித மனம் இயல்பாகவே வரைபடத்தில் பெரிதாகத் தெரியும் நாடுகளை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாகப் பலமிக்கதாகவும் கருதுகிறது. மெர்கேட்டர் வரைபடத்தில் வடக்கு அரைக்கோளத்தில் உள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அவற்றின் உண்மையான அளவை விடப் பிரம்மாண்டமாகக் காட்டப்பட்டதால், அவை இயற்கையிலேயே உலகை ஆளும் ஆதிக்கம் கொண்டவை என்ற பிம்பம் உருவாக்கப்பட்டது.

ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் தென் அமெரிக்கா போன்ற பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள பகுதிகள் மெர்கேட்டர் வரைபடத்தில் மிகச் சிறியதாகக் காட்டப்பட்டன. இதனால், தலைமுறை தலைமுறையாகப் பள்ளிப் பாடப்புத்தகங்கள் வழியாக இந்த வரைபடத்தைப் பார்த்து வளர்ந்த வளரும் நாட்டுச் சிறுவர்களிடம், தங்கள் நாடுகள் உலக அரங்கில் சிறியவை, முக்கியத்துவமற்றவை மற்றும் பிற்படுத்தப்பட்டவை என்ற அறியாமையான தாழ்வுமனப்பான்மை (Cognitive Bias) உள்மனதில் விதைக்கப்பட்டது
ஆப்பிரிக்கக் கண்டம் உண்மையில் அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவின் பெரும்பகுதியைத் தன்னுள் அடக்கும் அளவுக்குப் பெரியது. ஆனால் பழைய வரைபடத்தில் அது வெறும் கிரீன்லாந்து தீவின் அளவிற்குச் சிறியதாகக் காட்டப்பட்டதால், அதன் பரந்த இயற்கை வளங்கள், மனித ஆற்றல் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் உலகப் பொருளாதார அரங்கில் மிகக் குறைவாகவே மதிப்பிடப்பட்டன.
ஆப்பிரிக்கப் பேராசிரியர் Ntuli புதிய ஐநா வரைபடத் தீர்மானம் குறித்துக் கூறும்போது “வரைபடம் என்பது வெறும் புவியியல் அல்ல; அது எந்த இடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நமது கண்களுக்குக் கற்றுக்கொடுக்கும் அதிகாரத்தின் பாடத்திட்டம். புதிய வரைபடத்தின் மூலம் ஒரு வளரும் நாட்டு குழந்தை தனது தேசத்தை உண்மையான அளவில் பார்க்கும்போது, தன் நாடு உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் சிறிய பகுதியல்ல, மாறாக அது ஒரு பிரம்மாண்டமான வரலாற்று மற்றும் அறிவுசார் இருப்பு என்பதை உணரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிய வரைபடம் என்பது வெறும் காகித மாற்றம் அல்ல; அது உலக நாடுகளைப் பற்றிய மக்களின் மனப் பார்வையைத் (Cognitive Map) திருத்திச் சீரமைக்கும் ஒரு உளவியல் புரட்சி
முகநூல் பகிர்வு







