டந்த ஜூன் 4, 2026 அன்று திரு. மனோஜ் அவர்களின் யூட்யூப் பக்கத்தை யூட்யூப் தளத்தில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக யூட்யூப் நிர்வாகம் அறிவித்துள்ளது. பெரியாரியச் செயற்பாட்டாளராகவும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில மாணவர் அணிச் செயலாளராகவும் இயங்கி வருபவர் திரு மனோஜ். அதர்மம் பக்கம் சமூக அரசியல் சிக்கல்கள் குறித்துப் பேசுகின்ற பக்கமாக இயங்கிவந்துள்ளது. அதில் மனோஜ் அவர்களுடன் பலரும் பங்களித்துள்ளனர். அவரது யூட்யூப் பக்கம் முடக்கப்பட்டதற்கு Violations of Harassment Policy என்று அதற்கு மட்டும் காரணம் தெரிவிக்கப்படுகிறது.

அதே போல கடந்த சில வாரங்களுக்கு முன் திரு. மைனர் அவ ர்களின் Facebook பக்கத்தை மெட்டா நிறுவனம் இந்தியாவிற்குள் தடை செய்துள்ளது. திரு. மைனர் அவர்களும் தொடர்ந்து பெரியாரியச் செயற்பாட்டாளராகவும் சமூக அரசியல் குறித்துப் பேசும் கருத்துரையாளராகவும் செயல்பட்டு வருபவர். அவரது முகநூல் பக்கமும் இதேபோன்ற விளக்கங்கள் கோராமலேயே முடக்கப்பட்டுள்ளது.

இருவருமே தொடர்ந்து கூகுள் மற்றும் மெட்டா நிறுவனங்களிடம் பேச முயற்சித்தும் அவர்களது கருத்துகள் தொடர்ந்து புறக்கணிக்கின்றன கார்ப்பரேட்கள்.

யார் ஒருவருடைய யூட்யூப் பக்கமாக இருந்தாலும் அதன்மீது புகார் எழுந்தால், அது என்ன புகார் என்று கூடத் தெரிவிக்காமல், எந்தக் காணொளியில் எந்தப் பகுதி சர்ச்சையாக உள்ளது என்று கூடத் தெரிவிக்காமல், அவற்றைச் சரி செய்யும், நீக்கும், யூட்யூப் நிர்வாகத்துடன் விவாதிக்கும் வாய்ப்பே வழங்காமல், blanket ban எனப்படும் வகையில் மொத்தமாக அந்தப் பக்கமே நிரந்தரமாக நீக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுபோன்ற செயல்களை தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்த வகையில் தொடர்ந்து பல்வேறு ஊடகங்களும் சுதந்திர ஊடகவியலாளர்களும் பாதிக்கப்படுவது தொடர்கதையாகிவிட்டது. “audi alteram partem (the right to be heard)” என்பது நீதிமன்றங்கள் மட்டுமல்ல ஜனநாயகத்தில் அடிப்படையாகப் பின்பற்றப்படும் கொள்கை. முழுமையான தடை என்பது இயற்கையான நியதிக்கும், குறிப்பாக ‘மறுதரப்புக் கருத்தையும் கேட்டல்’ (audi alteram partem) எனும் அடிப்படை விதியையும் மீறுவதாக அமைகிறது. நீதிமன்றங்கள் இதனைப் பல்வேறு வழக்குகளில் அரசுகளுக்குச் சுட்டிக்காட்டியுள்ளன. ஒரு நாட்டுக்குள் செயல்படும் ஒரு நிறுவனம் அக்குடியரசுக் கோட்பாடுகளுக்கு உட்பட்டே செயல்பட முடியும் எனும்போது அதற்கு மாறான ஒரு நியதியை இந்தியாவிற்குள் இந்த யூட்யூபும் மெட்டாவும் எப்படித் துணிச்சலாகச் செயல்படுத்துகின்றன?

மெட்டாவின் Facebook, இன்ஸ்டாகிராம் தளங்களில் வரும் பதிவுகளை முடக்கவும் பக்கங்களை நீக்கவும் ஒன்றிய அரசுடன், மாநில அரசுகளின் உத்தரவுகளையும் சேர்த்தே செயல்படுத்துவதாகவும் சமீபத்தில் இவ்வகைத் தடைகள் மிகப்பெரிய அளவிலே அதிகரித்து வருவதாகவும் ‘தி வயர்’ இணையதளம் சுட்டிக்காட்டுகிறது. மேலும், “இந்தியா இப்போது Facebook மற்றும் Instagram உள்ளூர் சட்டங்களின் அடிப்படையில் அதிகமாக பதிவுகளைத் தானாகவே தடை செய்யும் நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளது என்று Meta நிறுவனத்தில் உள்ள ஒரு Source மூலம் ‘தி இந்து’ உறுதிப்படுத்தியுள்ளது.

படிக்க:

 ஊடகவியலாளர் இசை செல்வி மீதான தாக்குலை கண்டிக்கிறோம்!

 ஊடகங்களின் கழுத்தை நெரிக்கும் பாசிச பாஜக அரசு!

இதற்கு காரணம் இந்தியாவின் Sahyog போர்டல் — மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த இணையதளம், சமூக வலைதள நிறுவனங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் பெருவாரியான பதிவுகளை நீக்குவதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்கவும், ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுக்கவும், சமூக வலைதள நிறுவனங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும் ஒரு வலை இணைப்பை வழங்குகிறது. இது பெரும்பாலும் அரசியல் விமர்சனங்களையும் கேலிச்சித்திர உள்ளடக்கங்களையும் குறிவைக்கிறது, அதே சமயம் எந்தவொரு சுதந்திரமான மறுஆய்வு செயல்முறையையும் வழங்குவதில்லை..

இது IT சட்டத்தின் Section 79(3)(b) கீழ் செயல்படுகிறது — இதன்படி, இணங்காத நிறுவனங்கள் “safe harbour” பாதுகாப்பை இழக்க நேரிடும்.” என்றும் அக்கட்டுரை தெரிவிக்கிறது.

திருப்பரங்குன்றம் ஆவணப்படத் திரையிடலை தமிழ்நாடு காவல்துறை தடுத்தது, அதுகுறித்து திவிக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் அறிக்கையை ‘சட்டப்பூர்வ கோரிக்கை’ என்று சொல்லி Facebookகில் மெட்டா நிறுவனம் தடை செய்தது, இதுபோன்ற செய்திகளைத் தொடர்ந்து பேசி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் யூ2ப்ரூட்டஸ், அதர்மம் போன்ற சேனல்களைத் தடை செய்வது என்று இந்திய ஜனநாயக நாட்டில் கருத்துரிமைக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டைகள் வந்துகொண்டே உள்ளன.

தமிழ்நாடு தவெக அரசே, இந்திய பிஜேபி அரசே, இந்தியாவில் கருத்துச் சொல்லும் உரிமை உண்டா இல்லையா? தனியார் கார்ப்பரேட்டுக்கு இந்திய விதிகள் பொருந்துமா? பொருந்தாதா? அரசு ஆதரவோடு நடக்கும் கார்ப்பரேட் நிறுவன மிரட்டல் போக்கு தான் இந்தியாவின் புதிய எதார்த்தமா?

முற்போக்கு அமைப்புகள் ஜனநாயக சக்திகள் இதுபோன்ற சுதந்திர ஊடகங்களை முடக்கும் பிரச்சனையில் கவனம் செலுத்தி சுதந்திர ஊடகங்களுக்கு அரணாக இருக்க வேண்டும்., அரசிடம் இருந்து உரிய பதிலைப் பெற உரிய வகையில் அழுத்தம் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம்

tndjumail@gmail

1 COMMENT

  1. அதர்மம் மனோஜ் இணையதளம் முடக்கம் கூறித்து மெட்டா நிறுவனத்திற்கு சுட்டி காட்டிய இந்த விமர்சனம் சரியே
    டிஜிட்டல் ஊடகங்கள் ஒன்று சேர்ந்து இதற்கு எதிராக போராட்டத்தை கட்டி அமைக்க வேண்டும் என கட்டுரை சுட்டி காட்டுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here