
2018 மார்ச் 7ந் தேதி மாலை திருச்சி துவாக்குடி பகுதியில் தஞ்சையில் இருந்து இருசக்கரவாகனத்தில் வந்த ராஜா – உஷா தம்பதிகளிடம் ஹெல்மெட் சோதனை செய்த காவல் ஆய்வாளர் காமராஜ் விரட்டி சென்று கணேசா ரவுண்டானா அருகே அவர்களை எட்டி உதைத்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். படுகாயத்துடன் கணவர் ராஜா உயிர் தப்பிய நிலையில் மனைவி உஷா பின்னந்தலையில் பாதிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.
எடப்பாடி அரசில் காவல் துறையின் கட்டாய வசூலை கண்டித்தும் போக்குவரத்து ஆய்வாளர் காமராஜை கண்டித்தும் அன்று பலமணி நேரம் திருச்சி – தஞ்சை தேசிய நெடு சாலையில் முற்றுகை போராட்டம் நடந்தது.
தமிழ்நாடு முழுவதும் நடந்த போராட்டங்களின் தீவிரம் கூர்மை அடைந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் முற்றுகையாக மாறியது.
முன்னணியாக போராடிய பொது மக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள், மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். பொய் வழக்கும் பதிவு செய்தனர். வழக்கறிஞர்கள் ஆதிநாராயணன், சங்கர் உள்ளிட்ட சுமார் 33 க்கு மேற்பட்டவர்கள் கைது செய்து சிறை வைக்கப்பட்டனர். பாய்லர்தொழிற்சாலை, திருவரம்பூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட பொய் வழக்குகளை எதிர்த்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் தோழர் முருகானந்தம் நடத்தி வருகிறார். ஒரு வழக்கில் விடுதலை பெற்றாலும் இரண்டு வழக்குகள் நீதிமன்றத்தில் விசாணை நடந்து கொண்டிருக்கிறது.
கர்ப்பிணி பெண் உசா மரணத்திற்கு நீதி கேட்டு ஆய்வாளர் காமராஜ் மீது அரசு தரப்பில் பதியப் பட்ட வழக்கில் சாட்சிகள் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இவ்வழகை சீர்குலைக்க நடந்த முயற்சிகளை தடுத்து மக்கள் அதிகாரம் சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞராக பவானி பா.மோகன் அவர்களை நியமிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளரும் மூத்த வழக்கறிஞருமான தோழர் வாஞ்சிநாதன் தலைமையில் வழக்கு நடத்தி அனுமதி பெற்றோம். திருச்சி மாவட்ட ஆட்சியர் மூலம் சிறப்பு அரசு வழக்கறிஞராக தோழர் பவானி பா.மோகன் அவர்களை நியமித்தார். வழக்கு விசாரணை விரைந்து நடைபெறுகிறது.

கடந்த 12.01.2026 அன்று அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை நடைபெற்ற போது எதிரி காமராஜ் குற்றத்திலிருந்து தப்பிக்க வைக்கும் வகையில் அரசு சாட்சிகளே பிறல் சாட்சிகளாக மாறி வாக்குமூலம் அளித்தனர். கடந்த விசாரணையின் போதும் காவல்துறையின் சாட்சியங்கள் மூவர் “எனக்கு எதுவும் தெரியாது ” என கழண்டு கொண்டதை கண்டித்த அரசு தரப்பு வழக்கறிஞரான தோழர் பவானி பா. மோகன் அவர்கள் தற்சமயம் விசாரணையில் காவலர்களை கண்டித்து “நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்” என எச்சரித்தார்.
2018 மார்ச் 7ம் தேதி ஹெல்மெட்டுக்கு எதிராக மட்டுமல்ல காவல்துறையினரின் கட்டாய வசூலை கண்டித்தும் மக்கள் நடத்திய போராட்டத்தை மீண்டும் ஞாபகப்படுத்தினார். எளியமக்களின் உயிரை பறிப்பதற்கு யார் அதிகாரம் கொடுத்தது ? எப்படி மாற்றி பேசுகிறீர்கள்? என கேள்வி எழுப்பி அதிகார வர்க்கத்தின் மமதையை அங்கேயே சாடினார்.
சம்பந்தபட்ட ஸ்டேசன் ஆய்வாளர்கள் இவ்வழக்கின் அரசு சிறப்பு வழக்கறிஞரான பவானி பா.மோகன் அவர்களை சந்திக்கவோ, சாதக பாதக விசயங்களை பேசவே இல்லை. என்பதை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை (SP) சந்தித்து கூறியும் இதுவரை சந்திக்கவே இல்லை என்ற நிலையில் …. அடுத்த விசாரணை 7/2/2026ல் வருகிறது.
கர்ப்பிணி பெண் உஷாவுக்கு நீதி வேண்டும் … காவல் துறையினர் மனிதாபிமானத் தோடு நேர்மையோடு நடந்து கொள்வார்களா… என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்…..
இந்த வழக்குகளை பொறுப்பெடுத்து மக்கள் அதிகாரம் தோழர் ராஜா மற்றும் , மாநில செயலாளர் திருச்சி செழியன் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார்கள்.
தகவல்
மக்கள் அதிகாரம் திருச்சி மாவட்டம்.
போன். 94454 75157






