ஒருவர் பட்டியல் சாதியில் பிறப்பதால் அதிகம் பாதிக்கப்படும் முதல் 10 மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருக்கிறது. படத்தில் இருப்பது 2014 ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரம். 2020 ஆம் ஆண்டுக்கான என்சிஆர்பி அறிக்கை அது மேலும் மோசமடைந்திருப்பதைக் காட்டுகிறது.
2020ஆம் ஆண்டில் எஸ்சி மக்கள்மீது 1274 தாக்குதல்கள் நடந்திருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 1237. அதில் பாதிக்கப்பட்டவர்கள் 1377 பேர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2020 ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 68 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இது தென்னிந்திய மாநிலங்களிலேயே மிக அதிகமாகும். 123 தலித் பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். அதில் 88 பேர் சிறுமியர்.
ஒட்டு மொத்த இந்தியாவில் தலித் படுகொலைகளிலும், தலித் சிறுமியர் கற்பழிக்கப்பட்டதிலும் தமிழ்நாடு 5 ஆவது இடத்தை வகிக்கிறது.
இப்போது பொறுப்பேற்றுள்ள அரசு இந்த கேடுகெட்ட நிலையை மாற்றும் என உறுதியாக நம்புகிறேன்.
நன்றி: முகநூல் பதிவு
திரு.ரவிக்குமார் MP
விடுதலை சிறுத்தைகள் கட்சி