பாலுக்கும் கஞ்சிக்கும் வரிவலை
விலையின் உயரமோ எரிமலை
உம் கரங்கள் இரக்கமற்ற இதயம்
எம் வாழ்க்கை இறக்கின்ற தருணம்
போடாங்…

உழைப்பின் அழுத்தமோ சரவெடி
கிடைக்கும் ஊதியம் சிறுபொரி
உம் கரங்கள் கொளுத்துகின்ற மரணம்
எம் வாழ்க்கை எரிகின்ற சடலம்
போடாங்…

கனவின் விருப்பமோ விடுதலை
நனவின் வழக்கமோ படுகொலை
உம் கரங்கள் வன்புணர்ந்த கோரம்
எம் வாழ்க்கை சிதைந்துபோன தேகம்
போடாங்…


இதையும் படியுங்கள்: தாய் தலைமையே வழிநடத்து – புதியவன்


நீ இலாபவெறி பிடித்த மிருகம்
பூணூல் குடும்பி உன்னை வணங்கும்
கழுத்தை பிடிகொடுத்த உலகம்
மரண ஓலத்தில் கதறும்
போடாங்…

மூச்சிழந்தவர் அடிவயிற்றில் சிக்கிப்போனது அந்த வார்த்தை
உன்னை திட்டித்தீர்க்க முடியவில்லை

கிடைத்தவர் உதவுங்கள்
ஆகப்பெரிய
கெட்ட வார்த்தையால் திட்டித்தீர்க்க வேண்டும்.

  • புதியவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here