மெரிக்காவை சார்ந்த ஹிண்டன்பர்க் என்ற நிறுவனம், இரண்டாண்டுகள் அதானி குழுமத்தை பற்றி ஆய்வு செய்து அதன் மோசடிகளை ஆதாரங்களுடன் கடந்த ஜனவரி 24 அன்று அறிக்கை வெளியிட்டது. உலகின் மாபெரும் கார்ப்பரேட் கொள்ளையன் என அதானியை வரையறுத்தது; 88 கேள்விகளை கேட்டு அம்பலபடுத்தியது.
இந்த அறிக்கை வெளியானதன் விளைவாக உலக பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்திலிருந்த அதானி 17 வது இடத்திற்கு தள்ளப்பட்டார். அதானியின் பங்கு மதிப்பு சரிந்து பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எல்.ஐ.சி ஸ்டேட் பாங்க் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களிடம் சுமார் ஒரு லட்சம் கோடிக்கு மேல் அதானி கடன் வாங்கி உள்ளார். 2014 -ல் வெறும் 8 பில்லியன் டாலராக டாலராக இருந்த அதானியின் சொத்து மதிப்பு 2023 -ல் 140 அதிகரித்தது எப்படி? அதாவது 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கும் அதிகமாக சொத்து குவித்துள்ளார்.

ஹிண்டன்பர்க் அறிக்கை எழுப்பிய எந்த கேள்விக்கும் உரிய பதிலை அதானி நிறுவனம் தரவில்லை. மாறாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டியது. நாங்கள் சொல்லியது தவறு என்றால் “எங்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு போடு” என சவால்விட்டது ஹிண்டர்பர்க் நிறுவனம்.
மூக்குடைப்பட்ட அதானி தேசத்தின் மீதான தாக்குதல் என தேசிய கொடியின் முன்நின்று நாடகமாடினார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இதையே சொல்லியிருக்கிறது. பா.ஜ.க மோடியின் நெருங்கிய நண்பர் அதானி. ஒன்றிய அரசின் அனைத்து நிறுவனங்களும் நீதித்துறை உள்பட அதானிக்கு அடியாள் வேலை பார்த்துள்ளது. அதானியின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சி என கதைகட்டிய சங்கி கூட்டம் இன்று வாய் திறக்க மறுக்கிறது. துறைமுகங்கள், நிலக்கரி சுரங்கம், பவர் ஜெனரேசன், காஸ் விநியோகம், விமான நிலையங்கள், தொலை தொடர்பு, எண்ணெய் விநியோகம் எனப் பல தளங்களில் அதானி குழுமம் கால் பதித்து கோலோச்சி வருகிறது. அதானியின் இந்த மோசடி அறிவுதளங்களில் மட்டுமே மிக கடுமையாக விவாதிக்கப்படுகிறது. நாட்டின் எதிர்காலத்தை நாசமாக்கும் இத்தகைய அதானி அம்பானிகளின் பொருளாதார மோசடிகள் பற்றி மக்கள் மன்றங்களில் கீழே எடுத்து செல்ல வேண்டும். அந்த பணியை நாம் மூன்று மாதம் இயக்கமாக எடுத்து செல்ல இருக்கின்றோம்.

2002 குஜராத் இனக்கலவரம் தொடர்பாக லண்டனை சேர்ந்த பிபிசி நிறுவனம் சமீபத்தில் இரண்டு பாகங்களாக ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டது. அதை ஒலிபரப்ப கூடாது என பா.ஜ.க அரசு தடை விதித்துள்ளது. ஆவணப்படத்தில் உள்ள செய்திகள் நிகழ்வுகள் அனைத்தும் பல்வேறு வடிவங்களில் இந்தியாவில் ஏற்கனவே வெளிவந்தவைதான். இன்றைய தலைமுறைகளுக்கு குஜராத் இனப்படுகொலை பற்றி தெரியாது. 2500 இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். 100 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார்கள். ஒரு லட்சத்திற்கும் அதிமான இஸ்லாமிய மக்கள் சொந்த நாட்டில் அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு அகதிகளாக்கபட்டார்கள். இந்த படுகொலை அநீதிகள் தெகல்கா உள்பட பல்வேறு ஊடகங்கள் மூலமாக வெளிவந்தவைதான். எனினும் பிபிசியின் ஆவணப்படம் வேறு ஒரு நாட்டின் (இங்கிலாந்து) வெளியுறவுத்துறை நடத்திய‌ ஆய்வுகளின் அடிப்படையிலானது என்பது இதன் முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது.

குஜராத்தில் 2002-ல் மோடி முதல்வராக இருந்த போது காவல்துறை இந்த இனப்படுகொலையை தடுக்காமல் வேடிக்கை பார்த்தது. சங்பரிவார் அமைப்புகள் திட்டமிட்டு அனைத்து கொடூரங்களையும் செய்து முடிக்கும் வரை போலீசார் வேடிக்கை பார்த்தால் போதும் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என அன்றைய குஜராத் முதல்வர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்திரவிட்டனர் என்பது மறைக்க முடியாத உண்மை. குஜராத் இனப்படுகொலைக்கு எதிராக போராடிய குஜராத் காவல் துறை அதிகாரிகள் சஞ்சீவிபட், ஸ்ரீகுமார், மற்றும் பாதிக்கபட்டவர்களுக்காக வழக்கு நடத்திய தீஸ்தா சேதல்வாத் போன்றோர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். குஜராத் படுகொலையில் மோடி அரசுக்கு எதிராக தீர்ப்பளித்த பல நீதிபதிகள் பழிவாங்கப்பட்டனர். இத்தகைய உண்மைகளை மீண்டும் பேச வேண்டும். தற்போது மோடி அரசு பிபிசி ஆவணப்படத்திற்கு சமூக ஊடகங்களில் தடை விதித்தும், பிபிசியின் இந்திய அலுவலகத்தின் வருமான வரித்துறை சோதனையை ஏவியும் பாசிச தாக்குதலை தொடுத்துள்ளது.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை! நீதிக்காக போராடிய வழக்கறிஞர் தீஸ்தா, டி.ஜிபி சிறீகுமார் கைது ! காவி பாசிசத்தின் பிடியில் நீதித்துறை !

2014 க்கு முன்பு அன்னா ஹசாரவின் ‘ஊழலுக்கு’ எதிரான இயக்கத்தை ஊதிப் பெருக்கிய இந்திய கார்ப்பரேட் ஊடகங்கள் இன்று கள்ள மவுனம் காக்கின்றன.

ஹிண்டன்பர்க் அறிக்கை, பிபிசி ஆவணப்படத்திற்கு தடை – இந்தியாவில் தற்போது கார்ப்பரேட்-காவி பாசிச ஆதிக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இந்திய நாட்டின் எதிர்காலம் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளது. இதில் இருந்து மீள நாம் என்ன செய்ய வேண்டும்?

இவை பற்றி தெரிந்துகொள்ள, நிறைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள, இலக்கை நோக்கி நகர விவாதங்களை, பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான‌ தொடக்கமாக இந்த கருத்தரங்கம் அமையும் என கருதுகிறோம்.

கருத்தரங்கம் நேரலையில் நமது மக்கள் அதிகாரம் இணையதளத்தில்  ஒளிப்பரப்படும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here