SAVE JOURNALISTS! SAVE DEMOCRACY! ஊடகவியலாளர்கள் நடத்தும் கண்டன பொதுக்கூட்டம்

SAVE JOURNALISTS! SAVE DEMOCRACY! ஊடகவியலாளர்கள் நடத்தும் கண்டன பொதுக்கூட்டம்
நமது சகோதரர்களை ஒடுக்க நினைக்கும் கரங்களை ஒடுக்கிட, நமது உரிமைகளை முழங்கிட, ஜனநாயகம் வென்றிட ஒன்றிணைய வாருங்கள்!

நண்பர்களே, தோழர்களே,

ஒன்றிய பாஜக அரசு தனது மாநில அரசுகளின் மூலமும் காவல், CBI, IT, ED உள்ளிட்ட அமைப்புகளின் மூலமும் பத்திரிகையாளர்களைத் தொடர்ந்து ஒடுக்குமுறைக்கு ஆளாக்கி வருகிறது.

The Wire இதழின் சித்தார்த் வரதராஜன், கரண் தாப்பார் ஆகியோர் மீது அடுக்கடுக்காக வழக்குகளையும் நெருக்கடிகளையும் தந்து வருகிறது. SIR மோசடிகளை அம்பலப்படுத்திய பிகாரைச் சேர்ந்த அஜித் அஞ்சும் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்தக் கொடுங்கோன்மை MeITY மூலமாக ஏற்கனவே நடப்பதன் அதீத நீட்சியாக வந்துள்ளதா? அல்லது நிரந்தரமாகச் சிறைப்படுத்தவா? அல்லது கொல்லப்பட்ட கௌரி லங்கேஷ், தபோல்கர், கல்புர்கி ஆகியோர் பட்டியலில் நம்மைச் சேர்க்கின்ற சதித் திட்டத்தின் ஒரு பகுதியா?

எதுவாக இருந்தாலும் இந்த ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சுவோர் நாம் அல்ல; நாமார்க்கும் குடியல்லோம்!

இந்த பாஜக அரசுகளின் கொடுமைகளை எதிர்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்!

தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர்களே ஒன்றிணைவோம் வாருங்கள்! நமது சகோதரர்களை ஒடுக்க நினைக்கும் கரங்களை ஒடுக்கிட, நமது உரிமைகளை முழங்கிட, ஜனநாயகம் வென்றிட ஒன்றிணைய வாருங்கள்!

செப்டம்பர் 08, காலை 09 மணிக்கு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகில் நடக்கும் கண்டனக் கூட்டத்தில் மூத்த ஊடகவியலாளர்கள் இந்து என்.ராம், நக்கீரன் கோபால் ஆகியோர் கண்டனப் பேருரை ஆற்றுகின்றனர்.

MeITY ஒடுக்குமுறையை வழக்காடி வென்ற ஊடகவியலாளர் தோழர் Karikalan Kiru கண்டன உரையாற்றுகின்றார்.

மேலும், 30க்கும் ஊடகங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்கின்றனர்.

அனைவரும் வருக! ஆதரவு தருக!

1 COMMENT

  1. துணைக்கு எவராது கிட்டினால் நானும் இந்நிகழ்வினைப் பார்க்க வரலாம் என்ற ஆசை இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here