
திருச்சியில் ம.க.இ.க பு.ஜ.தொ.மு சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்வு!
ஜனவரி 25 : மொழிப்போர் தியாகிகளின் நினைவினை நெஞ்சிலேந்துவோம்!
ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசின் இந்தித் திணிப்பிற்கு எதிராக நாடெங்கும் போராட்டத் தீ பரவட்டும்!
என்ற முழக்கத்தை முன்வைத்து…
1964, 1965 ஆம் ஆண்டு காலை கட்டத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீக்குளித்தும், தற்கொலை செய்தும் தங்களது உயிரை மாய்த்துக்கொண்டோர் பலர் அதில் திருச்சியில் தென்னூரில் உழவர் சந்தை அருகில் உள்ள மொழிப்போர் தியாகிகள் கீழப்பழுவூர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடம் உள்ளது.
அவ்விடத்திற்கு மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக இன்று காலை 11 மணியளவில் ம.க.இ.க மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா தலைமையில் கொட்டும் மழையில் உணர்வோடு பேரணியாக முழக்கமிட்டவாறு சென்று மாநில பொதுச் செயலாளர் தோழர் கோவன் தலைமையில் தியாகிகளின் சமாதிகளில் மாலை அணிவித்து, மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாவட்ட தலைவர் தோழர் செந்தில், ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் மணலிதாஸ், பொருளாளர் செல்வராஜ், முன்னாள் தலைவர் தோழர் செல்வராஜ், மக்கள் அதிகாரம் மாநில பொதுச் செயலாளர் தோழர் செழியன், மாவட்ட செயலாளர் கார்க்கி, திருச்சி எர்த் மூவர்ஸ் அசோசியேசன் மாவட்ட தலைவர் மஞ்சுநாத், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் ஆதி, ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்விற்கு தோழமை அமைப்புகளான மக்கள் உரிமை மீட்பு இயக்கம், சாமானிய மக்கள் கட்சி, தேசிய மருதம் மக்கள் முன்னேற்ற கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், ரெட் பிளாக் கட்சி, தமிழ் புலிகள் கட்சி ஆகியவற்றின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ம.க.இ.க, பு.ஜ.தொ.மு, மக்கள் அதிகாரம் சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் என அனைவரும் குடும்பத்துடன் திரளாக பங்கேற்றனர்.
தகவல் :
ம.க.இ.க பு.ஜ.தொ.மு
திருச்சி மாவட்டம்.
தொடர்புக்கு : 8056905898, 8098604347.







