அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

  • திருப்பரங்குன்றம் தீபத்தை வைத்து கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறது ஆர்.எஸ்.எஸ்.எஸ் – பா.ஜ.க. இந்து முன்னணி குண்டர் படை!
  • அயோத்தியில் ராமனுக்கு கோயில் கட்டினால் இந்தியாவில் வறுமை ஒழியும் என்று பெருமைப் படுத்தியது. ஆனால் வளர்ச்சியில் இந்தியா பின்தங்கியுள்ளது ஏன்?
  • அரிட்டாபட்டி மலையை டங்ஸ்டன் வெட்டுவதற்கு கொடுத்த ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற துடிப்பது ஏன்? பக்தியா பன்னாட்டு கார்ப்பரேட் அடிமை புத்தியா?
  • நில அளவை எல்லைக்கல்லை வைத்து தீபத்தூண் என்று பிரச்சாரம் செய்து இந்து வெறியை தூண்டுவதை அனுமதிக்காதே!
  • திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, தேவாரம், கல்லாடம், திருப்புகழ் உள்ளிட்ட பழம் தமிழ் இலக்கியங்களில் தீபத்தூண் குறிப்பு இல்லை தெரியுமா?
  • பாண்டியர், பல்லவர் கால குடவரை கோவில்கள், சமண படுக்கைகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், சமண துறவிகளின் கற்படுக்கைகள் இதுவே திருப்பரங்குன்றத்தின் சிறப்பு!
  • மலைக்குச் செல்லும் பாதையில் பாதி வழியில் இருப்பதே உண்மையான தீபத்தூண்! அந்தத் தூணில்தான் காலகாலமாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது எனும்போது தற்போது மரபை மாற்றி நில அளவை கல்லில் தீபம் ஏற்ற துடிப்பதை அனுமதிக்கலாமா?
  • சிக்கந்தர் தர்காவை இடிக்க திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதாக கூறுவது மக்கள் ஒற்றுமையை உருவாக்கவா? இந்து – முஸ்லீம் கலவரத்தை தூண்டவா?
  • மதச்சார்பின்மை, பகுத்தறிவு, சுயமரியாதை கொண்ட வாழ்வே வளர்ச்சிக்கு அடிப்படை!
  • பிற மதங்களை வெறுக்கும் இந்துமதவெறி, ஆணாதிக்கம், பெண் அடிமைத்தனம், சாதி ஏற்றத்தாழ்வு கொண்ட பார்ப்பன மதம் நாட்டுக்கும் வீட்டுக்கும் அழிவு!
  • மதுரை மக்களின் வளர்ச்சிக்கு தேவை தொழில்துறையையும் விவசாயத்தையும் பாதுகாக்கும் கொள்கை மற்றும் சிறு-குறு தொழில்களைப் பாதுகாக்கும் சுயசார்பு மட்டுமே. கலவரத்தை உருவாக்கும் திருப்பரங்குன்றம் தீபமல்ல!
  • திருச்சிக்கும் தூத்துக்குடிக்கும் இடையில் சில ஜவுளி ஆலைகள், சர்க்கரை ஆலைகள், கிரானைட் குவாரிகள் மட்டுமே வேலை வாய்ப்புக்கான வசதி! மதுரை மக்களே நாடோடி வாழ்க்கைக்கு எதிராக தொழில் வளர்ச்சிக்கு போராடுவாயா? தீபத்தூண் ஏற்ற தெருவில் நிற்பாயா?

  • மதுரை மாவட்ட மக்கள் தொகை 30 லட்சம். மாணவனுக்கு கல்வி, படித்தவனுக்கு வேலை. விவசாயிக்கு விலை நிர்ணயிக்கும் உரிமை, நெசவாளிக்கு உரிய கூலி…. இதுவே அடிப்படைத் தேவை! இதற்கு போராடுவதே விடிவை தரும்! பா.ஜ.க முன்வைக்கும் திருப்பரங்குன்றம் தீபம் வாழ்க்கையில் விளக்கேற்றாது!
  • மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட துவங்கி பல ஆண்டுகள் ஆகிறது. அதற்கு போராட வராத இந்து முன்னணி -ஆர்.எஸ்.எஸ் கும்பல் நில அளவை கல்லில் தீபம் ஏற்ற போராடுகிறது!
  • மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் புறக்கணிக்கப் பட்டுள்ளது. மாவட்டத்தின் வளர்ச்சிக்காக மெட்ரோ ரயில் கோரி ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க – இந்து முன்னணி போராடவில்லை எனும் போது, அதன் நோக்கம் பக்தியை வைத்து கலவரம் செய்யவே!

  • தமிழகத்தில் மதுரை மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள மசூதிகள் -தர்காக்கள், சர்ச்சுகள் ஆகியவற்றை இடித்து தள்ளி இந்து கோவில் ஆக்க வேண்டும் என்று வீடியோ வெளியிட்டுள்ள கொலைகார கிரிமினல் கும்பலை மதுரை மண்ணில் காலூன்ற விடலாமா?
  • மூன்று முறை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்க பரிவார கும்பல் மக்கள் வாழ்வாதாரத்திற்கும் வளர்ச்சிக்கும் எதிரானது!
  • மாவட்டம் தோறும் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய சமூக நல்லிணக்க குழுக்களை உருவாக்குவோம்! மதத்தை அரசியலில் இருந்து பிரிக்க போராடுவோம்! மத வழிபாட்டு உரிமையை தனிநபர் உரிமையாக்குவோம்!
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here