திருச்சியில் த.வெ.க கட்சி தலைவர் விஜயை கண்டித்து ம.க.இ.க, பு.ஜ.தொ.மு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

கரூரில் கடந்த 27.09.2025 அன்று இரவு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பாக அதன் தலைவர் நடிகர் விஜய் பிரச்சாரம் செய்யும் போது கூட்ட நெரிசலில் சிக்கி தற்போது வரை 41 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயமடைந்துள்ளனர். இதற்கு காரணமான தமிழக வெற்றிக் கழகம் கட்சியை கண்டித்து எமது மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக இன்று 29.09.2025 திங்கள்கிழமை காலை 11 மணிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் !

தமிழக அரசே !

• 42 பேர் உயிர் பலிக்கு காரணமான தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் சினிமா நடிகருமான விஜயை கைது செய் !

• நடிகர் விஜய் ரசிகர்களிடம் கொள்ளையடித்தப் பணத்தை பறிமுதல் செய் !

• இறந்தவர் குடும்பத்திற்கு தலா ஒரு கோடியும் சிகிச்சை பெறுவோர்க்கு தலா 50 லட்சமும் வழங்கு !

ஆர்ப்பாட்டத்திற்கு ம.க.இ.க மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா தலைமை தாங்கி உரையாற்றினார்.

ம.க.இ.க தோழர் சீனிவாசன் தலைமையில் நடிகர் விஜயை கண்டித்தும் அக்கட்சியை தடை செய்ய வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கண்டன உரையாற்றியவர்கள்:

தோழர் லதா, மாநில செயற்குழு உறுப்பினர், ம.க.இ.க.

தோழர் செந்தில், மாவட்ட தலைவர், பு.ஜ.தொ.மு.

தோழர் கார்க்கி, மாவட்ட செயலாளர், மக்கள் அதிகாரம்.

தோழர் விடுதலை விக்கி, விடுதலை சிறுத்தைகள் கட்சி.

தோழர் மாணிக் முருகேசன், மாவட்ட செயலாளர், ஆதித் தமிழர் பேரவை.

தோழர் A.C. ராமலிங்கம், மாவட்ட தலைவர், ரெட் பிளாக் கட்சி.

தோழர் காசிம், மாவட்ட செயலாளர், மக்கள் உரிமை கூட்டணி.

தோழர் உதயகுமார், தமிழ்தேச மக்கள் விடுதலை இயக்கம்.

தோழர் சுலைனா, மக்கள் உரிமை மீட்பு இயக்கம்.

தோழர் செழியன்,
மாநில பொதுச் செயலாளர், மக்கள் அதிகாரம்.

சிறப்புரை :

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் கோவன்,

நன்றியுரை :
தோழர் ஆனந்த், மாவட்ட இணைச் செயலாளர், பு.ஜ.தொ.மு.

ஆர்ப்பாட்டத்தில் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு, மக்கள் அதிகாரம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் தோழமை அமைப்புகள், ஜனநாயக பொதுநல அமைப்புகள் என திரளாக கலந்து கொண்டனர்.

தகவல் :
ம.க.இ.க🚩
திருச்சி மாவட்டம்.
தொடர்புக்கு : 8056905898.

000

கரூர்-தவெக பரப்புரையில் பெண்கள் குழந்தைகள் என 42 பேரை படுகொலை செய்த விஜய் யை கைது செய் !விஜய் யின் சொத்துக்களை பறிமுதல் செய் !தேர்தல் அங்கீகாரத்தை ரத்து செய் !
படுகொலைகளைக்கு நீதி வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆம்பூரில் இன்று(29.09.25) மாலை 6 மணிக்கு சாவடி அருகில் மக்கள் அதிகாரம் சார்பில் புஜதொமு-விசிக-புஇமு-DYFI போன்ற ஒருங்கிணைந்த வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இவ்வார்ப்பாட்டத்தை தோழர்.சலீனா
(மாவ.குழு-மக்கள் அதிகாரம்) தலைமையேற்று நடத்தினார்

தோழர்.சரவணன் (மாவ.செ-புஜதொமு)

தோழர்.கோபி மற்றும் தோழர்.சாரதி
(புஇமு)

தோழர்.ஓம்.பிரகாஷ் (மாவ.செ-விசிக)

தோழர்.தமிழ்செல்வன் (தொழிற்சங்க மா.செ-விசிக)

தோழர்.சரவணன் (மாவ.அ-மக்கள் அதிகாரம் )

ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்

ஆர்ப்பாட்ட இடையில் முழக்கமிடுடப்பட்டது

இறுதியாக தோழர்.சதாசிவம் (மாவ.குழு-மக்கள் அதிகாரம்)நன்றியுரையாற்றினார்

இவ்வார்ப்பாட்டம் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தது

தகவல் ;-

திருப்பத்தூர் மாவட்டம்
மக்கள் அதிகாரம் 
தொடர்புக்கு:9952244480

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here