குடியுரிமையை நிரூபிக்க தகுந்த ஆவணம் எது? ஒன்றிய அரசிடம் பதில் இல்லை…

1
குடியுரிமையை நிரூபிக்க தகுந்த ஆவணம் எது? ஒன்றிய அரசிடம் பதில் இல்லை...
நன்றி: ஸ்க்ரால் இணையதளம்

ந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட்- லெனினிஸ்டை சேர்ந்த  திரு.சுதம பிரசாத் நாடாளுமன்றத்தில்  இந்திய மக்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க எந்தெந்த ஆவணங்கள் தகுதியானவை என்றும் கடந்த 25 வருடத்தில் நாடுமுழுவதும் கொடுக்கப்பட்டுள்ள  பிறப்பு சான்றிதழ்களின் மொத்த எண்ணிக்கை மற்றும் மாநில அரசுகள் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் விநியோகித்த விவரம் மற்றும் அதில் அதிக வரிசைப்படி முதல் 10 மாநிலங்களின்  பட்டியலை தருமாறு கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு எழுத்து மூலம் பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் நித்யானந் ராய் “இந்திய குடியுரிமை சட்டம் 1955ன் படியே சட்டங்கள் இயற்றப்பட்டு இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறது. அதன்படி “பிறப்பால்(பிரிவு-3) – 1950ம் ஆண்டு ஜனவரி 26-அன்றோ அல்லது அதற்கு பிறகோ இந்தியாவில் பிறந்தவர்கள் குடியுரிமை உள்ளது.

வம்சாவழியால் (பிரிவு-4), – வெளிநாட்டில் பிறந்தோர் அவர் பிறக்கும் சமயம் அவரின்  பெற்றோர் இந்திய குடிமக்களாய் இருந்தால் அவர் குடியுரிமைக்கு தகுதியானவர்‌.

பதிவுகள் மூலம் (பிரிவு -5): குறிப்பிட்ட தனிநபர்கள் இந்திய குடிமக்களையோ – இந்திய வம்சாவழியினரயோ  திருமணம்  செய்து அதனை இந்திய அரசிடம் பதிவு செய்வதன் மூலம் குடியுரிமை பெற தகுதியானவராக கருதப்படுவார்.

இயற்கைமயமாக்கல் மூலம்( பிரிவு – 6) – ஒருவர் குறிப்பிட்ட காலத்திற்கு இந்திய நாட்டில் தங்கியிருந்து மற்ற இயல்பான அளவு கோள்களுக்கு ஏற்றவராய் இருந்தால் குடியுரிமை அளிக்கலாம்.

இணைக்கப்பட்ட நிலப்பரப்புகள் மூலம்.(பிரிவு-7) – இந்தியாவில் ஒரு நிலப்பரப்பு இணைக்கப்பட்டால் அதில் இருக்கும் மக்களுக்கு குடியுரிமை அளிக்கலாம்.

மேற்கண்ட சட்டத்திற்கு உட்பட்டே குடியுரிமைக்கான தகுதிகள் தீர்மானிக்கப்படுவதாக நித்யனந்த் ராய் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் கேள்விக்கு மாநில வாரியாக நாடு முழுவதும் கடந்த 25 வருடங்களில் பதிவு செய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கையை மட்டும் வழங்கினார்.

குடியுரிமையை நிரூபிக்க தகுந்த ஆவணம் எதுவென்று ஒன்றிய அரசிடம் இருந்து எந்த பதிலும் வராத நிலையில் பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு 11 வகையான ஆவணங்களை பட்டியலிட்டுள்ளது. பிறப்பு சான்றிதழ் இடம் பெற்று இருக்கும் அந்த பட்டியலில் வாக்காளர் அடையாள அட்டை , ரேஷன் கார்டு மற்றம் ஆதார் அட்டை போன்றவை இடம் பெறவில்லை.

படிக்க: பீகார் தேர்தல்: போலி ஜனநாயகத்தை கைவிட்டு பாசிச வழிமுறைக்கு மாறியுள்ள ’இந்திய ஜனநாயகம்’.

சமீபத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்கு எதிரான வழக்கு ஒன்றில் ” ஒருவரின் குடியுரிமையை தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு தான் உள்ளதே தவிர தேர்தல் ஆணையத்திற்கு இல்லை” என்று குறிப்பிட்டுள்ளது.குடியுரிமையை ஆராயும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு என்று வாதிட்ட தேர்தல் ஆணையம் பீகார் வரைவு வாக்காளர் பட்டியலில் 65 இலட்சம் மக்களின் பெயர்களை நீக்கியுள்ளது. ஆனால் எதனடிப்படையில் அப்பெயர் களை முழுவதுமாக நீக்க முடியும் என்று தெளிவாக தெரியவில்லை.

அசாமிலும் வெளியேற்றப்பட்ட பல இஸ்லாமிய குடும்பங்களின் வாக்காளர் அட்டை இனி ஆவணமாக ஏற்றுக்கொள்ளப் படாத  பயனற்ற அட்டையாகிவிட்டது. அவர்களின் குடியுரிமைக்கும் வாக்குரிமை கற்கும் எந்த ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அரசிடம் தெளிவான வரையறை இல்லை.

குறிப்பு: மோடி அரசு இந்த பிரச்சினைக்குத் தீர்வாக “ஜெய்ஸ்ரீராம்” சொல்வதுதான் இந்திய குடியுரிமையை நிரூபிக்கும் வழி என்று சொல்லக்கூடும்.

https://thewire.in/government/lok-sabha-parliament-nityanand-rai-categories-of-valid-documents-citizenship

மொழியாக்கம்: தாமோதரன்

1 COMMENT

  1. ஸ்க்ரால் இனையதள கட்டுரை

    இந்திய குடிமகனுக்கான ஆதாரமாக இதுவரை எந்த சான்றிதையும் தாக்கல் செய்யாத ஒன்றிய அரசு மானம் சாதிப்பது ஏன் ஆதார் அட்டை ரேஷன் அட்டை பிறப்புச் சான்றிதழ் எதையும் இந்திய குடிமகன் என்ற ஆதாரத்தை நிரூபிக்க முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள்
    இந்தக் கட்டுரையை மொழியாக்கம் செய்த ஆசிரியர் தாமோதரன் அவர்களுக்கு
    நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here