நவம்பர் 7 ரஷ்ய புரட்சி தினம் உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களாலும், பொதுவுடைமைவாதிகளாலும் கொண்டாடப்படுவதுடன் தனது நாட்டில் பாட்டாளிவர்க்க புரட்சியின் அவசியத்தை வலியுறுத்தும் நிகழ்வாகவும் உழைக்கும் மக்களால் உறுதியேற்கப்படுகிறது.
இந்தியாவில் தமிழ்நாட்டில் மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்களுடன் இணைந்து தோழமை அமைப்பான மக்கள் அதிகாரமும் மேற்குறிப்பிட்ட படி புரட்சி தின விழா நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக தொழிற்சங்கமான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆலை வாயிலில் செங்கொடி ஏற்றி தொழிலாளர்களுக்கு புதிய ஜனநாயகப் புரட்சியின் அவசியத்தையும் இந்தியாவை சூழ்ந்துள்ள கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்த மக்கள் முன்னணி கட்ட வேண்டியதையும் வலியுறுத்தி தலைவர்கள் உரையாற்றினர்.
000
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான மதர் பிளாஸ்டிக் எம்ப்ளாய்ஸ் யூனியன் ஆலைவாயிலில் கூட்டம் நடத்தப்பட்டது.

விம்கார் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் நவம்பர் 7 ரசிய புரட்சி தினத்தை முன்னிட்டு ஆலைவாயில் கூட்டம்

கோவையில் எஸ்.ஆர்.ஐ ஆலையின் கிளையில் பணிபுரியும் மூத்த தொழிலாளளி தோழர் ராமசந்திரன் அவா்கள் கொடியேற்றினார். அதனை தொடர்ந்து முழக்கமிடப்பட்டது. அதன்பின்பு, கோவை மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளா் முன்னணியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் தோழா் சரவணக் குமார் அவா்கள் தொழிலாளா்கள் மத்தியில் முதலாளித்துவத்திற்கு எதிராக நாம் எவ்வாறு பணியாற்ற வேண்டும்? என்றும் காவியும் – கார்ப்பரேட்டும் கைகோர்த்துக் கொண்டு மக்களை பாதிக்கும் சட்டத்தை திணிப்பிற்கு எதிராக செயல்பட வேண்டும் என்று உறையாற்றினார். கொடிறேற்ற நிகழ்வில் ஆலை தொழிலாளா்கள் 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நீலமலையில் நம்முடைய சமகால பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள ரசிய புரட்சி போல், நாமும் ஒரு புரட்சி செய்வோம்! என சூளுரை ஏற்கும் விதமாகவும், நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் (இணைப்பு) சங்கமான நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கத்தின் சார்பாக நவம்பர் 7 ரசிய புரட்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.

வேலூரில், நேற்று(07.11.2025) 109-வது ரசிய புரட்சி தின நிகழ்ச்சியானது தரைக்கடை கிளை சங்கத்தின் நடைபெற்றது. இதற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் வேலூர் மாவட்ட துணைச் செயலாளர் தோழர் வி.சேட்டு தலைமை தாங்கினார்.

புதுச்சேரியில் நேற்று (07–11-2025) புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சுப்ரீம் கிளை சங்க தோழர்கள் நவம்பர் 7 ரசிய புரட்சி நாளை உயர்த்தி பிடிக்கும் விதமாக தோழர் லெனின் அவர்களின் தியாகத்தை நெஞ்சிலேந்தி உறுதிமொழி ஏற்றனர்.

நவம்பர் 7 ரசிய சோசலிச புரட்சி தினத்தை கொண்டாடும் வகையில் இன்று (07.11.2025) காலை 10 மணியளவில் திருச்சி தில்லைநகர் காந்திபுரத்தில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
மக்கள் கலை இலக்கியக் கழகம்






