கடந்த மாதம் 08-06-2025 அன்று இந்தியாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (NCB) வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி,
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் நேரடியாக நிதியுதவி செய்து உ.பி மற்றும் டெல்லியில் போதை மருந்து தயாரிப்பு ஆய்வகம் தொடங்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.
Cartel Jalisco Nueva Generación (CJNG) என்ற அமைப்பு உலகின் மிகவும் ஆபத்தான போதைப்பொருள் கடத்தல் கும்பல். அமெரிக்க ராணுவத்திடமே இல்லாத அதி நவீன ஆயுதங்களை ஏந்தியபடி தனி ராஜ்ஜியத்தை நடத்தி வரும் அமைப்பு.
அமெரிக்காவின் Department of State 18-06-2025 அன்று, CJNG அமைப்பின் தலைவர்களை உலகளாவிய தீவிரவாதிகள் என அங்கீகரித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது..
CJNG என்ற அந்த கடத்தல் கும்பல் fentanyl, methamphetamine, cocaine, Heroin போன்ற போதைப்பொருட்களை கடத்துவது, அதற்கு தடையாக இருப்பவர்களை கொடூரமாக கொலை செய்யும் வன்முறை கும்பல் என்று கூறுகிறது அமெரிக்க அரசு.
இக்கும்பல் குறித்து தகவல் கொடுப்போருக்கு
15 மில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 120 கோடி ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது..
அவ்வளவு கொடூரமான “Drug Cartel” இந்தியாவில் நேரடியாக கால் பதித்திருப்பதை @narcoticsbureau NCB உறுதிப்படுத்தியுள்ளது
எப்படி கண்டுபிடித்தது Narcotics Control Bureau ?
உத்திரபிரதேச மாநிலம், கெளதம் புத்தா நகர் மாவட்டம், தலைநகர் டெல்லியை ஒட்டியிருக்கக்கூடிய பகுதி.. இம்மாவட்டத்தின் Greater Noida-ல் தொழிற்சாலைகள் நிரம்பிய காசனா எனும் பகுதியில் 25-10-24 அன்று @narcoticsbureau மற்றும் @CellDelhi டெல்லி Spl Cell இணைந்து கூட்டு நடவடிக்கை மேற்கொள்கிறது.
x.com/narcoticsburea…
அப்போது, மெத்தம்பேட்டமைன் உற்பத்தி செய்யும் ஆய்வகம் ரகசியமாக செயல்பட்டு வருவதை கண்டறிந்து, அங்கிருந்து 95 Kgs மெத்தம்பேட்டமைன் மற்றும் தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட நவீன இயந்திரங்களையும் NCB அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
x.com/CellDelhi/stat…
இந்த ஆய்வகத்தை அமைத்து இயக்குவதில் முக்கியப் பங்கு வகித்த மெக்சிகன் நாட்டவர், மும்பையைச் சேர்ந்த வேதியியலாளர், டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் திகார் சிறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
1 கிலோ மெத்தம்பேட்டமைனின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட ரூ.3 கோடி..
பறிமுதல் செய்யப்பட்ட95 Kgs மெத்தம்பேட்டமைன் மதிப்பு 285 கோடி ரூபாய்.
இந்திய மண்ணில் மெக்சிகன்Drug Cartel நுழைந்தது எப்படி?
சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கஸ்டடி எடுத்து NCB அதிகாரிகள் நடத்திய நேரடி விசாரணை மற்றும் கடந்த 8 மாத காலம் மேற்கொண்டு வந்த தொடர் விசாரணையில் Cartel Jalisco Nueva Generación (CJNG) எனும் மெக்சிகன் Drug Cartel நேரடியாக பணத்தை முதலீடு செய்து இந்தியாவிற்குள் நுழைந்திருப்பதைNCB உறுதிப்படுத்தியுள்ளது.
அதாவது மெக்சிகன் Drug Cartel கிரிப்டோ கரன்சி மூலமாக துபாய்க்கு பணத்தை மாற்றி பின்னர் அந்தப்பணம் ஹவாலா மூலமாக டெல்லியில் மூன்று தவணைகளாக வழங்கப்பட்டுள்ளதென NCB-ன் அறிக்கை கூறுகிறது..
இதில் அச்சப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், உத்திரபிரதேசத்தில் அமைக்கப்பட்ட ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் மெத்தம்பேட்டமைனின் purity-யை பரிசோதிப்பதற்காக தங்கள் குழுவை சேர்ந்த ஒரு நபரையும் மெக்சிகன் CJNG Drug Cartel இந்தியாவிற்கு அனுப்பியுள்ளது என்ற அதிர்ச்சியூட்டும் தகவலும் வெளியாகியுள்ளது..
இந்த வழக்கில், போதைப்பொருள் தயாரிப்புக்கு மூளையாக செயல்பட்ட தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான Jaypee Greens எனும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சொகுசு வீடு, தொழிற்சாலை உள்ளிட்ட 9.20 கோடி மதிப்புள்ள சொத்துக்களை SAFEMA & NDPS Act – ன் படி NCB முடங்கியுள்ளது..
ஆனால்……
குற்றவாளிகளின் பெயரை NCB வெளியிடாமல் மறைத்ததற்கு காரணமென்ன?
இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட ஒரே ஒரு நபரின் பெயரைக்கூட NCB-யோ அல்லது Delhi Spl Cell-பிரிவோ வெளியிடவில்லை..
நீதிமன்ற ஆவணங்களை நாம் தேடியெடுத்துப் பார்த்ததில், கவுதம் புத்த நகர் மாவட்டத்தில் NCB-ன் ஆப்ரேஷன் விங் மற்றும் டெல்லி Spl Cell இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் அமித் குமார் சிங், திகார் சிறை வார்டன் நவீன்மன், ரவீந்திர ஜனார்தன், அம்ரிஷ் பூரி, மெக்சிகோ நாட்டைச்சேர்ந்த
Gutierrez lugo gustavo எனும் 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளது நமக்கு தெரியவந்தது..
இந்த 5 நபர்களில் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் அமித்குமார் சிங்கின் சொத்துக்களை தான் NCB கடந்த மாதம் முடங்கியுள்ளது..
மெக்சிகன் Drug Cartel க்ரிப்ட்டோ கரன்சி மூலமாக துபாய்க்கு அனுப்பிய பணம், ஹவாலா மூலமாக டெல்லியில் கைமாறிய விஷயத்தை கண்டறிந்த பின்னரே “கடத்தல்காரர்கள் மற்றும் அந்நிய செலாவணி மோசடி செய்பவர்கள் (சொத்தை பறிமுதல் செய்தல்) சட்டம்” – 1976 & NDPS Act-ன் படி
ரூ.92.20 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
மெக்சிகன் Drug Cartel நிதியுதவி செய்த அமித்குமார் சிங் யார்?
SCILLA DAIRY INDIA LIMITED
SCILLA BIOTECHNOLOGIES LIMITED,
SCILLA INFRATECH LIMITED
GO HERITAGE INDIA JOURNEYS PRIVATE LIMITED
BVM PHARMA LIMITED ஆகிய நிறுவனங்களில் இயக்குனராக இருப்பவர் தான்
அமித் குமார் சிங்..
17-04-2013 அன்று Directorate of Revenue Intelligence (F. No.338/XVIII/30/2013-GI)
பதிவு செய்த ஓர் வழக்கின் விசாரணையில் கிடைத்த தகவலின் படி, டெல்லியில் Toyota Fortuner வாகனம் ஒன்றில் இருந்து
951 கிலோ Methaqualone எனும் தடை செய்யப்பட்ட போதை மருந்து DRI அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுகிறது.
அந்த வாகனம் SCILLA BIOTECHNOLOGIES LIMITED நிறுவன பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் அதன் உரிமையாளர் அமித்குமார் என கண்டறிந்த பின்னர் DRI அதிகாரிகளால் 2014ம் ஆண்டு, அமித் கைது செய்யப்படுகிறார்.
கிட்டதட்ட 3 ஆண்டுகள் 4 மாதம் திகார் சிறையில் இருந்த அமித்குமார் சிங் 2018 ம் ஆண்டு தான் இடைக்கால ஜாமீனில் வெளிவருகிறார்..
உடல் நிலை காரணமாக ஜாமின் நீட்டிக்கப்பட்டு வந்த அந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் 06/08/2024 அன்று தான் அமித்குமாருக்கு ரெகுலர் ஜாமீன் வழங்குகிறது.
அடுத்த இரண்டே மாதங்களில் அமித்குமார் NCB அதிகாரிகளால் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார்…
கவனிக்கவும்…
இடைக்கால ஜாமீனில் இருந்த ஒரு நபர் மெக்சிகன் Drug Cartel உடன் கூட்டு சேர்ந்து போதை மருந்து தயாரித்து வந்ததை புலனாய்வு ஏஜென்சிகள் எப்படி கவனிக்க தவறின என்று கேள்வி எழுகிறது..
எந்தளவு மோசமாக மத்திய அரசின் புலனாய்வு ஏஜென்சிகளின் செயல்பாடு உள்ளதென இதன் மூலம் யூகிக்க முடியும்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம்..
வழக்கமாக கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர், புகைப்படங்களை வெளியிடும் NCB @narcoticsbureau இந்த வழக்கில் எதையும் வெளியிடவில்லை.. ஏன் ? என்ன காரணம் ?
அரசியல் உள்நோக்கத்துடன் நடக்கிறதா NCB ?
2013-ம் ஆண்டில் DRI பதிவு செய்த வழக்கில் 2014 ல் கைது செய்யப்பட்டு, இடைக்கால ஜாமினில் இருந்த அமித் குமார் சிங், மெக்சிகன் Drug Cartel நிதியுதவி உடன் போதை மருந்து தயாரிப்பு ஆய்வகத்தை நடத்தி வந்துள்ளார்..
இதை NCB யே அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.ஆனால் குற்றவாளிகள் ஒருவருடைய புகைப்படத்தைக்கூட வெளியிடவில்லை.
உண்மையில் இப்படி தான் NCB அதிகாரிகள் நடந்து கொள்வார்களா என்றால் பதில் நிச்சயம் இல்லை என்பதே நிஜம்..
2024 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ம் தேதி டெல்லியில் 50 கிலோ pseudoephedrine எனும் போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டு NCB-ன் டெல்லி அலுவலகத்தில் F.No.VIII /03/DZU/2024 வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் திமுகவின் NRI பிரிவு நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் என்ற நபர் 09/03/24 அன்று டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
அதே நாளில் NCB-ன் Deputy Director General ஆக இருந்த ஞானேஸ்வர் சிங் என்பவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
அப்போது தமிழ்நாட்டில் மிகப்பெரிய அதிகாரம் மிக்க நபர்கள் ஜாபர் சாதிக்கின் போதை மருந்து கடத்தலுக்கு பின்னணியில் இருப்பதாக கூறினார்.
NCB தலைமை அலுவலகத்திற்கே பத்திரிக்கையாளர்களை அழைத்து பேட்டியளித்தது மட்டுமல்லாமல்
கைது செய்யப்பட்ட நபரையும் கேமராக்களுக்கு முன்னிறுத்தினார்.
x.com/ANI/status/176…
ஜாபர் சாதிக் திமுக நிர்வாகி என்று திரும்பத் திரும்ப குறிப்பிட்டு பேசிய NCB அதிகாரி அத்தோடு நிற்கவில்லை.
படிக்க:
♦ போதை பொருட்கள் கடத்தலும் பாசிச பாஜகவின் தேச சேவையும்!
அதிகாரப்பூர்வமற்ற போலியாக தயாரிக்கப்பட்ட ஓர் பத்திரிக்கை செய்திக்குறிப்பையும் வெளியிட்டு அரசியல் உள்நோக்கத்துடன் செயல்பட்டனர்
நாடாளுமன்ற தேர்தல் நேரம் என்பதால், இந்தியா கூட்டணிக்கு எதிரான ஆயுதமாக பாஜக அதை பயன்படுத்தியது.
அந்த விவகாரத்தை தமிழ்நாட்டிற்கு பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் அத்தனை மேடைகளிலும் அதை பேசினார்
indianexpress.com/article/india/…
அதே நேரம், மெக்சிகன் Drug Cartel நேரடியாக இந்தியாவில் கால் பதித்துள்ள வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களின் பெயரைக்கூட வெளியிடாமல் NCB அதிகாரிகள் ரகசியம் காக்கின்றனர்..
காரணம் என்னவாக இருக்கும் !?
உள்துறை அமைச்சகம் போதை மருந்து விவகாரத்தில் அப்பட்டமாக அரசியல் செய்கிறதா?
“Drug Free India” என்ற முழக்கத்தோடு இந்தியாவின் உள்துறை அமைச்சகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆனாலும், எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களில் கைது செய்யப்படக்கூடிய நபர்கள் அரசியல் பிரமுகர்களாக இருந்தால், அதுவும்
பிஜேபியை எதிர்க்கும் கட்சியாக இருந்தால், NDPS சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோடல் ஏஜென்சியான NCB-யை வெளிப்படையாகவே அரசியல் ஆதாயத்திற்காக மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. இந்த தகவல் தெரிந்தவுடன் நாங்களும் துணைக்கு வருகிறோம் என்று அமலாக்கத்துறையும் வேறு சென்று விடுகிறது..
அரசியல் ஆதாயத்திற்காக NCB, ED போன்ற ஏஜென்சிகளை பயன்படுத்துவது மட்டுமல்ல நாட்டிற்கே மாபெரும் அச்சறுத்தலாக உள்ள போதை மருந்து பறிமுதல் விவகாரத்தில் மத்திய அரசு எவ்வளவு மெத்தனமாக செயல்பட்டு வருகிறது என்பதையும் இந்த நேரத்தில் கவனிக்க வேண்டியது அவசியம்..
NCRB அறிக்கைகளை திருத்தி மோசடி செய்யும் உள்துறை அமைச்சகம்
இந்தியாவில் நடக்கும் அத்தனை குற்றங்கள் குறித்தும் ஆண்டுதோறும் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய குற்ற ஆவணக்காப்பகம் “Crime in India” என்ற தலைப்பில் ஆண்டு அறிக்கையை வெளியிட்டு வருகிறது
உள்துறை அமைச்சகம் குற்றங்கள் குறித்த தரவுகளை சேகரிப்பதற்காகவே தனியாக உருவாக்கிய சாப்ட்வேர் செயலி மூலமாக தரவுகள் சேகரிக்கப்படுகிறது.
89 Data supply மையங்கள் மூலமாக தரவுகளை சேகரித்து, பல கட்ட சரிபார்ப்புக்கு பிறகே “Crime in India” ஆவணம் வெளியிடப்படுகிறது.
இந்த ஆவணத்தில் சத்தமே இல்லாமல் 2018, 2020 மற்றும் 2021 ஆகிய 3 ஆண்டுகளில்
போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்ட பகுதியை மட்டும், ஏற்கனவே வெளியிட்ட ஆவணத்தை திருத்தி மீண்டும் வெளியிட்டு
தில்லாலங்கடி வேலையை செய்துள்ளது தேசிய குற்ற ஆவண காப்பகம் @NCRBHQ ..
அதாவது, 2018-ல் 22263. Kgs ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியிடப்பட்ட ஆவணத்தை 7263 kgs மட்டும் தான் என்று திருத்தியுள்ளது. 7 ஆண்டுகளுக்கு பிறகு திருத்தி 2024-ல் வெளியிட்டுள்ளது
நாடாளுமன்றத்தை மட்டுமல்ல – மொத்த தேசத்தையே ஏமாற்றும் உள்துறை அமைச்சகம்
2020-ல் 55,804 கிலோ பறிமுதல் செய்யப்பட்டதாகவும்,
2021-ல் 68219 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ஆண்டறிக்கைகளை NCRB வெளியிடுகிறது.
பின்னர், அதை 2020-ல் 2626 கிலோ மட்டும் தான் என மாற்றுகிறது, 2021-ல் 3578 கிலோ ஹெராயின் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாக ஆவணத்தை திருத்தி வெளியிட்டுள்ளது தேசிய குற்ற ஆவணக்காப்பகம்
மேலே குறிப்பிட்ட மூன்று ஆண்டு ஆவணத்தையும், 2024 ஒரே ஆண்டில்
போதை மருந்து பறிமுதல் குறித்து ஆவணப்படுத்தப்பட்ட பக்கத்தை
மட்டும் திருத்தி NCRB வெளியிட்டுள்ளது.
இதை முறைப்படி பாராளுமன்றத்திற்கும் தெரிவிக்கவில்லை. @NCRBHQ -ன் இணையதளத்திலும் பகிரங்கமாக அறிவிக்கவில்லை
சரி விஷயத்திற்கு வருவோம்,
NCRB ஏற்கனவே வெளியிட்ட பறிமுதல் ரிப்போர்ட்டிற்கும் திருத்தப்பட்ட தரவுக்கும் இடையில் 1,32,819 கிலோ ஹெராயின் வித்தியாசம் வருகிறது.
ஒரு கிலோ ஹெராயினின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.7 கோடி அப்படியென்றால், @NCRBHQ ஆவணத்தை மட்டும் திருத்தி வெளியிட்டு, உள்துறை அமைச்சகம் சாதாரணமாக கடந்து சென்றுள்ள 1,32,819 கிலோ ஹெராயினின் மதிப்பு ரூ.92,97,33,00,00,000….
(ஒன்பது லட்சத்து 29 ஆயிரத்து 733 கோடி)
தலை சுற்றுகிறதா!?
நம்புங்கள் அத்தனையும் உண்மை..
ஏதோ வாய்க்கு வந்ததை சொல்லிச் செல்லும் கணக்கல்ல இது..
இந்திய அரசாங்கத்தின் ஆவணத்தில் இருந்து, மாயமாப் போச்சு என மறைக்கப்பட்டுள்ள ஹெராயினின் சர்வதேச சந்தை மதிப்பு கிட்டதட்ட ரூ.9.29 லட்சம் கோடி.. மதிப்புள்ள ஹெராயின் என்னவானது என்று கேள்வி கேட்க வேண்டிய எதிர்க்கட்சிகளும் ஏனோ மெளன விரதத்தில் உள்ளன.
இவ்வளவு பெரிய பகீர் ரக விவகாரத்தை ஈசியாக கடந்து சென்றுள்ள மத்திய உள்துறை
@PIBHomeAffairs அமைச்சகம் தான் உலகின் மிக ஆபத்தான Deadliest Drug Cartel இந்தியாவிற்குள் நேரடியாக கால் பதிக்கும் அளவு மெத்தனமாக ஏனோ தானோவென்றும் இருந்துள்ளது
போதை மருந்துகள் புழக்கத்தை தடுக்கும் விவகாரத்தில் மத்திய அரசாங்கம் உடனடியாக விழிக்காவிடில், இளைய தலைமுறையின் எதிர்காலம் மட்டுமல்ல, இந்தியாவிற்கே பேராபத்து காத்திருக்கிறது
BJP ஆட்சியில்லாத மாநிலங்களில் ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றுவதில் காட்டும் அக்கறையில் கொஞ்சமாவது அமைச்சகத்தின் செயல்பாட்டில் காட்டுவாரா அமித்ஷா !?
B.R.அரவிந்தாக்ஷன்
11-07-2025
நன்றி: முகநூல் பதிவு