“உயர்நீதிமன்ற நீதிபதிகள் பலர் பதவிக்கு வந்தவுடன் படாடோபகங்களை  எதிர்பார்க்கின்றனர். நீதி வழங்கும் கடமை மீது போதிய கவனம் செலுத்துவதில்லை. என்னை கேட்டால் நீதிபதிகளுக்கு பிரத்தியோக போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை. இதன் மூலம் மனித ஆற்றல் விரயம் செய்யப்படுகிறது. நீதிபதி என்பது தெய்வப் பணி என சிலர் கருதுகின்றனர். அதுவும் பிற பணிகளை போல் விமர்சனத்திற்குட்பட்ட பணி தான்…” என கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஒரு விழாவில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உதிர்த்த முத்துக்கள்.

நீதிபதி பணி  விமர்சனத்திற்குட்பட்ட பணி தான் என்று பேசிய ஜி.ஆர்.சுவாமிநாதன் தான் இன்று விமர்சனத்தை கண்டு அஞ்சுகிறார் தனது அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு பழிவாங்க துடிக்கிறார்.

நீதிபதி  ஜி.ஆர்.சுவாமிநாதனின் நடவடிக்கைகள் இன்று வரை ஒரு வர்க்க சார்பாகவே அமைந்துள்ளது. இதற்கு பல வழக்குகளையும் அவரது பேச்சுக்களையும் உதாரணம் காட்ட முடியும். அதனைப் பின்பு பார்ப்போம். ஆனால் தான் நியாயமான நீதிமான் போல காட்ட முயன்று இரண்டு நாட்களாக அம்பலப்பட்டு கொண்டிருக்கிறார்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளரும்  வழக்கறிஞருமான வாஞ்சிநாதன் தனது ஆரம்பகால முதல் பாதிக்கப்பட்ட மக்கள் முன்னின்று குரல் கொடுத்து வருகிறார். கூடங்குளம் போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழ்பாடும் உரிமை, அனைத்து சாதி அர்ச்சகர் விவகாரம், சமீபத்தில் மதுரையில் டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு போராட்டம், சமீபத்தில் திருப்பரங்குன்றம் மலையை பயன்படுத்தி காவிகள் கலவர அரசியல் செய்ய முயன்றதற்கு எதிரான போராட்டம் என மக்கள் பிரச்சனையில் தலையிட்டு ஆளும் வர்க்கத்தின் பகையை சம்பாதித்தவர். பல்வேறு வழக்குகளையும் சந்தித்தவர். மக்கள் பிரச்சினைக்காக சிறை சென்றவர். நீதிமன்றத்தின் ஒரு சார்பு நடவடிக்கையில் நடவடிக்கையால் வழக்கறிஞர் பணியிலிருந்து சில காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். அதற்கெல்லாம் அஞ்சாமல் இன்றுவரை துணிந்து அதிகார வர்க்கத்தின் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறார்.

ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிபதி பதவிக்கு தகுதியானவர் தானா?

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சமீபத்தில் ஜி.ஆர்.சுவாமிநாதனின் செயல்பாட்டில் உள்ள தவறுகளை பட்டியலிட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியிருந்தார். நீதித்துறையில் ஆர்.எஸ்.எஸ் சார்பு நபர்கள் நீக்கமற நிறைந்துள்ளதால் அந்த புகார் மனு அதிமுக வழக்கறிஞர்கள் மூலம் வழக்கறிஞர் வாட்ஸப் குழுவில் பகிரப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வேறொரு வழக்கில் வாஞ்சிநாதன் ஆஜராகுமாறு கூறி அந்த வழக்கிற்கு சம்பந்தம் இல்லாத கேள்விகளை கேட்டுள்ளார். “நான் சாதி அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்குவதாக கருதுகிறீர்களா” என கேள்வி எழுப்பியுள்ளார். அந்த வழக்கிற்கு பொருத்தம் இல்லாத கேள்வி என்பதால் எழுத்துப்பூர்வமாக தாருங்கள் பதில் அளிக்கிறேன் என வாஞ்சிநாதன் கூறிய போது “நீங்கள் ஒரு கோழை, பயப்படுகிறீர்கள்” என தான் நீதிபதி என்பதை மறந்துவிட்டு எதிரியை போல பேசி உள்ளார். வாஞ்சிநாதன் எழுத்துப்பூர்வமாக உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டதால் நீதிமன்ற அவமதிப்பிற்கு 28 ஆம் தேதி பிற்பகல் 1.15  மணிக்கு ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இது நீதிமன்ற அவமதிப்பு அல்ல என்கிறார் ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன். வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஒன்று கூடி மதுரையில் ஆலோசனை நடத்தினர். “வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது ஜி.ஆர் சுவாமிநாதன் அமர்வு தொடர்ந்த அவமதிப்பு வழக்கை அவரை திரும்ப பெற வேண்டும் இல்லை என்றால் நீதிமன்ற உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு வழக்கை ரத்து செய்யும் அதிகாரம் உள்ளது” என்கிறார் அரிபரந்தாமன். மேலும் நீதிபதி குறித்து தலைமை நீதிபதிக்கு புகார் அளிப்பது நீதிமன்ற  அவமதிப்பு ஆகாது என்றார்.

தன்னை சனாதனத்தை ஏற்றுக் கொண்டவனாக மேடைதோறும் முழங்கும் ஜி.ஆர்.சுவாமிநாதன் ‘அவாள்’ முன்னிலையில் பேசிய காணொளியை பார்க்க முடிந்தது. சனாதன தர்மபடி வாழும் நண்பருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதித்ததை நம்ப முடியவில்லை என்கிறார். அதே கூட்டத்தில் மற்றொன்றையும் பேசுகிறார் “12 மாதங்கள் வழங்க வேண்டிய தண்டனையை அந்த சனாதனி நண்பர் குடுமி வைத்துக்கொண்டு சென்ற காரணத்தால் 18 மாதங்கள்  வழங்கியதாக நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் அவமதித்து பேசுகிறார். இவர் கூறியதில் இருந்து தண்டனை வழங்கிய வழங்கிய நீதிபதி பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர் இல்லை என தெரிகிறது. ஜி.ஆர்.சுவாமிநாதனின் இந்த பேச்சில் அவரின் சாதி வன்மத்தை நாம் கவனித்தாக வேண்டும். சனாதனியாக இருந்தால் தவறு செய்ய மாட்டார்கள் என்று ஜி.ஆர்.சுவாமிநாதன் முடிவுக்கு வந்துவிட்டார். ‘குடுமி வைத்துக் கொண்டு சென்றால் அவருக்கு ஏற்றார் போல் தான் தீர்ப்பு வழங்குவேன்’ என்று சொல்லாமல் சொல்கிறார்.

இந்த பேச்சிலிருந்து, தான் சாதியின் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்குவேன் என்று ஜி.ஆர்.சுவாமிநாதன் வாக்குமூலம் அளித்துள்ளார். கீழ்வரும்  வீடியோவே அதற்கு சான்றாக கொள்ளலாம். இந்த காணொளியை பார்ப்பன பத்திரிகையான தினமலர் வெளியிட்டுள்ளது. அதே போல் பார்ப்பனர்களுக்கு ஆதரவாகவும் ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பலுக்கு சாதகமாகவும் தீர்ப்பு வழங்கியுள்ளார் என்பதை விசாரித்த வழக்குகளின் முடிவுகளை மறுவாசிப்பு செய்தாலே உண்மை விளங்கிவிடும்.

உதாரணத்திற்கு சில வழக்குகளையும், தீர்ப்புகளையும் பார்க்கலாம்.

கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு கோவிலில் எச்சில் இலைகளில் உருண்டு நேர்த்திக்கடன் (பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலை) செலுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உயர்நீதிமன்றம் கடந்த 2024 மே மாதம் தீர்ப்பளித்தது. தீர்ப்பளித்த நீதிபதி சார்வாள் நம்ம சனாதனி ஜி.ஆர்.சுவாமிநாதன் தான். “சமூக விருந்தில் பங்கேற்கும் பக்தர்கள் விட்டுச் சென்ற வாழை இலைகளில் அங்க பிரதட்சணம் செய்வது அவருக்கு ஆன்மீகமான பலனை தரும் என்ற நம்பிக்கை. அந்த தனிப்பட்ட நபரின் ஆன்மீக தேர்வு” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு நியாயமாக வழங்க வேண்டிய தீர்ப்பினை தான் நீதிபதி என்பதனை மறந்துவிட்டு கருப்பு வங்கியை கலைந்து காவி அங்கி அணிந்து கொண்டு சனாதனியாக மாறி தீர்ப்பினை வழங்கியுள்ளார். அதாவது அக்ரஹாரத் தெருவில் பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் படுத்து உருண்டால் குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்குமாம். இதற்கு அரசியலமைப்பு சட்டத்தை படித்து தீர்ப்பு வழங்க வேண்டியதில்லை பார்ப்பன பண்டாரமாக இருந்தாலே போதும்.

படிக்க:

♦  காவிமயமாகிய நீதித்துறை: ஜி.ஆர்.சுவாமிநாதன்-லெட்சுமி நாராயணன்களே சாட்சி!

  ‘ நீதிபதி’ ஜிஆர் சுவாமிநாதன்: சட்டவாதியா? சனாதனவாதியா?

இந்த ஒரு விஷயம் போதாதா? ஜி.ஆர்.சுவாமிநாதனின் அரசியல் அமைப்பு எதிரானவர் என்று சொல்ல. இது போல் பல உதாரணங்களை நம்மால் அடுக்க முடியும். 2002ல் சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த ஜி.ஆர்.சுவாமிநாதன் 2024ல்  திமுகவுக்கு எதிராக சவுக்கு சங்கர் திரும்பியதும் அவருக்கு ஆதரவாக ஜாமீன் வழங்கியது. பாஜக தலைவர் அண்ணாமலையை நீதிமன்றத்தில் பாராட்டியது, அனைத்து சாதியினர் அர்ச்சகர் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் தானே விசாரிக்குமாறு விசாரிக்குமாறு செய்தது, பார்ப்பனர்கள் நடத்தும் கூட்டங்களில் கலந்து கொண்டு தனது சாதிப் பெருமையை பேசுவது, பார்ப்பன வர்ணாசிரம தர்மத்தை உயர்த்தி பேசுவது, ஏன்  இது போன்ற நிகழ்ச்சிகளை கலந்து கொள்கிறீர்கள் என கேள்வி எழுப்பினால் அதற்கு மொன்னையான விளக்கமளிப்பது என்று நீதிபதி என்று அதிகாரத்தை கடந்த எட்டு வருடங்களாக கேடாக பயன்படுத்தி வருகிறார்.

ஜி ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மட்டுமல்ல எச்சில் இலை தீர்ப்பு வந்தபோது பலரும் விமர்சித்தார்கள் தோழர் கொளத்தூர் மணி உச்சநீதிமன்றத்தில் புகார் அளித்தார்.

தற்போது வசமாக சிக்கிக் கொண்டோமே என்ற பதற்றத்தில் தான் தோழர் வாஞ்சிநாதனிடம் வார்த்தையை விட்டு சிக்கிக்கொண்டார். இன்று தமிழகமே மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பக்கம் நிற்கிறது. ஓய்வுபெற்ற பத்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதனின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்கள். தமிழக பார் கவுன்சிலும் ஜி‌.ஆர்.சுவாமிநாதனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இன்று (28.07.2025) மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகி வாஞ்சிநாதன் பதிலளித்துள்ளார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனோ மீண்டும் அதே பழிவாங்கும் நோக்கத்தோடே வழக்கை நடத்தியுள்ளார். வாஞ்சிநாதனுக்கு துணை நிற்பவர்களையும் எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த வழக்கின் விவரங்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவத்சவா அமர்வுக்கு மாற்றுவதாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவித்தார்.

அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் சனாதன தர்மபடி தீர்ப்பு வழங்குவது பார்ப்பனர்கள் சார்பாக பேசுவது என நீதிபதிக்கான எந்த தகுதியும் அற்றவர் தான் ஜி.ஆர்.சுவாமிநாதன். பாசிஸ்டுகள் ஆட்சியில் நீதித்துறையும் காவிமயமாகியுள்ளதை ஜி.ஆர்.சுவாமிநாதன் போன்றோர் நமக்கு நினைவூட்டுகிறார்கள். இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதை விட தக்கபதிலடி கொடுப்பதன் நீதித்துறையில் நிறைந்திருக்கும் பாசிச ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கை விடுப்போம்.

  • நந்தன்

6 COMMENTS

  1. மேலிருந்து நான்காவது பாராவில் கோழை என்று வர வேண்டும் (கோழி) என உள்ளது.
    கீழிருந்து ஐந்தாவது பாரா கடைசி வரியில் *கடந்த* என்று வர வேண்டும்.

    கட்டுரை சனாதனி சங்கிநாதன் அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்க மாட்டார் என்பதும்
    தன் சாதி சார்பில் செயல்படுகிறார் என்பதை அறிய முடிகிறது.
    இவருக்கு எதற்கு மக்கள் வரி பணத்தில் சம்பளம் பதிவி பவுசு.
    ஜிஆர் எஸ் பதியை நீக்க வேண்டும் அல்லது அவரே அவமானம் தாங்கமால் விலக வேண்டும்.

  2. கடைந்தெடுத்த ஆர்எஸ்எஸ் காரன் – மிகக் கேவலமான கோழை – தோழர் வாஞ்சிக்காக
    தமிழகம் கொதிதித்திருந்த பின் வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு கெட்டிக்காரத்தனமாக மாற்றி உத்தரவிட்டது – ஆனாலும் பார்ப்பனக் கொழுப்பு அடங்காதது:-
    ___________________________________________________

    வழக்கறிஞர் தோழர் வாஞ்சிநாதன்
    அவர்களுக்கு எதிரான இன்றைய (ஜூலை
    28) விசாரணையில் கூட வாஞ்சிநாதன் வெளி மேடைகளில் பேசிய வீடியோ ஒன்றை நீதிமன்றத்தில் போட்டுக் காண்பித்து இதை பாருங்கள் என்று சொல்கிறார் சுவாமிநாதன்.
    தோழர் வாஞ்சிநாதன் உற்றுப் பார்த்துவிட்டு
    எது வேண்டுமானாலும் எழுத்துப்பூர்வமாக கொடுங்கள்; பயப்படுகிறேன் என்று கூறுகிறார். ‘ஏன், கண் தெரியலையா? பேரு கண்ணாடி வேண்டுமா? நான் வேண்டுமானால் அரவிந்தர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லட்டுமா? உங்களை எவன் போராளி என்று சொன்னது? நீங்கள் ஒரு காமெடி பீஸ்; ஓய்வு பெற்ற நீதிபதிகள் எல்லாம் எனக்கு எதிர்த்து நின்றால் நான் ஒன்றும் முட்டாள் அல்ல…’ என்ற பாணியில் பார்ப்பணக் கொழுப்பு எடுத்து இந்த நீதிபதி பேசியிருக்கிறான். இதன் மூலமாக இவன் நீதிபதிக்கு முற்றிலும் தகுதி இழந்து நிற்கின்றான். இவனுக்கு வழக்கறிஞர்களோ தமிழ் மக்களும் மயிரளவிற்கும் மரியாதை கொடுக்கத் தேவையில்லை என்பதே எனது கருத்து. ஆனாலும் தான் ஒரு கோழை என்பதை வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாற்றி விட்டதன் மூலமாக நிரூபித்துக் கொண்டு விட்டான்.
    இருவர்க்கிடையிலான சண்டை முடிவில்
    தோற்றவன் வெற்றியடைந்தவனிடம் ரகசியமாக சில கெட்ட வார்த்தைகளால் புலம்பி விட்டுச் செல்வதைப் போன்றதே இன்று நீதிமன்றத்தில் வாஞ்சிநாதனை நோக்கி ஜி.ஆர். சுவாமிநாதன் கட்சியை விஷமத்தனமான வார்த்தைகள் என்பதாகப் புரிந்து கொள்வோம். இப்படி வேறு அமர்வுக்கு வழக்கு மாற்றப்படுவதற்கு காரணம் ஒன்று தொடர்ந்து வாஞ்சிநாதன் இன்று வழங்கிய பிரமாண வாக்குமூலத்தில் ‘வழக்கு உங்களைப் பற்றி என்பதால் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற வேண்டும்’ என்று விடுத்த கோரிக்கை. இரண்டாவதாக G.R.சுவாமிநாதனின் கொழுப்பெடுத்த…தோழர் வாஞ்சிநாதனுக்கு எதிராக பிரயோகித்த வார்த்தைகள் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்களுக்கிடையல் மட்டுமின்றி, அனைத்து அரசியல் கட்சிகள், புரட்சிகர இயக்கங்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒருமித்த குரலாக ஆர் எஸ் எஸ் காரன் சுவாமிநாதனுக்கு எதிராக போர்க்களம் புகுந்ததே மிகப் பிரதான காரணம். இத்தோடு நின்று விட முடியாது.
    ஜி ஆர் சுவாமிநாதனின் கொட்டம் அடங்கும் வரை, வால் முற்றிலுமாக அறுத்தெறியப் படும் வரை நமது போராட்டப் பாதை தொடர்ந்து வண்ணம் இருந்தே ஆக வேண்டும். அந்த வகையில் நந்தனின் கட்டுரையை – அதில் இடம்பெற்றுள்ள சாமிநாதனின் வீடியோ உரையை உட்கிரகித்து பயணிப்போமாக!

  3. மேற்கண்ட எனது பின்னோட்டத்தில் ‘பதில் அளிக்கிறேன்’ என்பதற்கு பதிலாக ‘பயப்படுகிறேன்’ என்று வாஞ்சிநாதன் கூறியதாக தவறாக தட்டச்சு செய்து விட்டேன். தயவுசெய்து திருத்திப் படிக்கவும். இதுபோன்று உங்களது பார்வைக்குத் தென்படுகின்ற வேறு எழுத்துப் பிழைகளை சரி செய்து படிக்குமாறு தோழமையுடன்
    கேட்டுக்கொள்கிறேன். தவறுக்கு வருந்துகிறேன்…

  4. இன்று நடைபெற்ற வழக்கறிஞர்கள் போராட்டம், பல்வேறு அரசியல் கட்சியில் தலைவர்களுடைய விமர்சனம்,மக்கள் அதிகாரம் அமைப்புகள் நடத்திய போராட்டம், சமூக வலைதளங்களில் பேசு பொருளான செய்திகளின் சிறு வெற்றி தான் வழக்கை தலைமை நீதிபதியிடம் வழக்கை அவரே மாற்ற காரணமாய் இருந்துள்ளது,சங்கி சுவாமிநாதன் இதுவரை 95 ஆயிரம் வழக்குகளுக்கு மேல் தீர்ப்பளித்துள்ளார் என்று ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்,தற்போது இந்த வழக்குகளுக்கு
    சட்டத்தின்படி தீர்ப்பு கொடுத்தாரா அல்லது சனாதனத்தின் படி தீர்ப்பு கொடுத்தாரா என்பது பரிசீலிக்க வேண்டியுள்ளது. சிறு எழுத்துப் பிழைகள் உள்ளது அதை சரி பார்த்துக் கொள்ளவும். கட்டுரை சிறப்பு வாழ்த்துக்கள்.

  5. #ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிபதி பதவிக்கு தகுதியானவர் தானா#

    இன்று நடைபெற்ற வழக்கறிஞர்கள் போராட்டம், பல்வேறு அரசியல் கட்சியில் தலைவர்களுடைய விமர்சனம்,மக்கள் அதிகாரம் அமைப்புகள் நடத்திய போராட்டம், சமூக வலைதளங்களில் பேசு பொருளான செய்திகளின் சிறு வெற்றி தான் வழக்கை தலைமை நீதிபதியிடம் வழக்கை அவரே மாற்ற காரணமாய் இருந்துள்ளது,சங்கி சுவாமிநாதன் இதுவரை 95 ஆயிரம் வழக்குகளுக்கு மேல் தீர்ப்பளித்துள்ளார் என்று ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்,தற்போது இந்த வழக்குகளுக்கு
    சட்டத்தின்படி தீர்ப்பு கொடுத்தாரா அல்லது சனாதனத்தின் படி தீர்ப்பு கொடுத்தாரா என்பது பரிசீலிக்க வேண்டியுள்ளது. சிறு எழுத்துப் பிழைகள் உள்ளது அதை சரி பார்த்துக் கொள்ளவும். கட்டுரை சிறப்பு வாழ்த்துக்கள்.

  6. ஜி.ஆர் .சாமிநாதன் நீதிபதி பதவிக்கு தகுதியானவர் தானா என்ற கட்டை மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது அதில் வரக்கூடிய வீடியோ ஒரு விபத்து குறித்தும் அந்த விபத்தில் ஏற்படுத்திய பெண்ணை பாதுகாத்து தான்தான் என்று அந்த பெண்ணின் அண்ணன் கூறுவது போன்ற அந்த வழக்கு விசாரணை சாட்சியங்கள் இல்லை என்று நீதிபதி ஜி ஆர் சாமிநாதன் வாதாடுகிறார் ஆகவே நீதிபதியின் நண்பராக இருக்க கூடிய நீதிபதி விடுவிக்கிறார் சனாதானத்திற்கு சாதகமான தீர்ப்புகளை வழங்கிய ஆர்எஸ்எஸ் சங்கி நீதிபதி ஜி ஆர் சாமிநாதன் என்பதை தெளிவாக அம்பலப்படுத்தி எழுதப்பட்டுள்ளது கட்டுரை ஆசிரியருக்கு நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here