
சுதந்திர தினமா? ஆர்.எஸ்.எஸ் தினமா?
சுதந்திர தினத்தில் மோடி என்னதான் பேசுகிறார்? கவனிப்போம், எனப் பார்த்தேன். தூக்கம் தூக்கமாக வந்தது. கொட்டாவி விட்டு, முகம் கழுவி, டீ குடித்து பார்த்தாலும் , கூலி படம் போல் முடிவதாய்த் தெரியவில்லை. 105 நிமிடம் பேசியிருக்கிறார்.
‘ வோட் சோரி ‘ அவமானப்படுத்துகிறார் ராகுல். மனுஷன் அது பற்றி வாய் திறக்கவில்லை. ‘பாகிஸ்தானோடு நோ வார் ! ‘ மிரட்டுகிறார் டிரம்ப். கண்டும் காணாததும் போல் ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெருமையடிக்கிறார்.
முந்தைய காங்கிரஸ் அரசாங்கங்கள் தொழில்நுட்ப ரீதியாக இந்தியாவை வளர்க்கவில்லை! குறை சொல்கிறார். இஸ்ரோ கொண்டு வந்தது யார்? ஐஐஎம் கொண்டு வந்தது யார்? ,ஐஐடி கொண்டு வந்தது யார்? எய்ம்ஸ் கொண்டு வந்தது யார்? எச்.ஏ.எல், டி.ஆர்.டி.ஓ மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையம்@ எல்லாம் கொண்டு வந்தது யார்? ஜவஹர்லால் நேருதானே? இவற்றை மேலும் வளர்த்தெடுத்தவர் இந்திரா அல்லவா?
2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளை பிராட்பேண்ட் மூலம் இணைக்கும் லட்சியத் திட்டத்தை கொண்டு வந்தாரே மன்மோகன்? அது தொழில் நுட்பத்தில் சேராதா?
ஐஐடி போன்ற உயர் கல்வி மையங்களை, சனாதனப் பழமை நோக்கி செலுத்துவதானே
பாஜக வின் சாதனை!
‘பிச்சைதே கோ பிராத்மிக்தா’
(பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை) என்கிறார். பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் பாஜக ஆட்சியில் அரசியல் ரீதியான பாதுகாப்பை இழந்திருக்கின்றர் என்பதுதானே உண்மை. இப்பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித் தொகை நிறுத்தப்பட்டது. மத்திய பல்கலைக் கழகங்களில் நிரப்பப்பட வேண்டிய,
எஸ். டிகளுக்கான 83 % இடங்கள் , ஓ.பி.சி களுக்கு 80 % இடங்கள்,
எஸ்.சி களுக்கான 64 % இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
இவை எல்லாவற்றை விடவும் மோசமானது, சுதந்திர தினத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தியாகத்தை பிரதமர் வியந்தோதி இருப்பது. 100 ஆண்டுகால தேசிய சேவைக்கு பங்களித்த அனைத்து சுயம் சேவகர்களையும் மரியாதையுடன் நினைவு கூர்கிறார் .
படிக்க: கார்ப்பரேட் கொள்ளையை நியாயப்படுத்தும் மோடியின் 98 நிமிட சுதந்திர தின உரை!
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு விரோதமான பேச்சு. இந்தியாவின் மதச்சார்பின்மை, குடியரசு அரசியல், இரண்டுக்கும் விடுத்திருக்கும் கடும் சவால் . செப்டம்பரோடு மோடிக்கு 75 வயது முடிவடைகிறதாம். பிரதமர் பதவிக்கு எக்ஸ்டென்ஷன் கேட்கத்தான் ஆர்எஸ்எஸுக்கு லாலி பாடுகிறார் என்கிறார்கள்.
சுதந்திர தின விளம்பரத்தில் காந்தி, பகத்சிங் படத்துக்கு மேலே சாவர்க்கர் படத்தைப் போடுகிறது இயற்கை மற்றும் எரிவாயு அமைச்சகம்.
இந்தியாவை பாகிஸ்தானிடமிருந்து, சீனாவிடமிருந்து காப்பாற்றுவது எல்லாம் பெரிதில்லை. இந்தியாவை
பாஜக விடம் இருந்து முதலில் காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால் வரப்போகும் சுதந்திர தினங்களில் தேசியக் கொடியில் மூன்று வண்ணங்கள் இருக்காது. அது காவி நிறத்தில் மட்டும் பறந்து கொண்டிருக்கும். மோகன் பகவத் பேரன்கள் அசோகச் சக்கரத்தை ரோட்டில் உருட்டி விளையாடுவார்கள்.
நன்றி: கரிகாலன்







140 கோடி மக்களின் ஒற்றுமையை பார்க்காமல் மதச்சார்பின்மையை கணக்கில் கொள்ளாமல் ஆர்எஸ்எஸ் மாநாடு போல பேசுகிறார்,
இஸ்லாமிய வெறுப்பை தூண்டுகிறார். இந்திய தேர்தல் ஆணையம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் முறைகேடு செய்து இன்று சிக்கிக் கொண்டு அதன் சுயேச்சை தன்மையை இழந்து அவமானத்தில் குறுகி நிற்கிறது அதைப் பற்றி பேச துப்பு இல்லை, பெகல்காம் தாக்குதலின் போது உள்ளே வந்தவர்கள் யார்? அவர்களை இன்று வரை பிடிக்காமல் ஆப்ரேஷன் சிந்து நடவடிக்கையை பெருமையை பேசும் மோடி நாடகத்தை என்னவென்று சொல்வது.
ஆர்எஸ்எஸ் இந்திய சுதந்திரப் போராட்ட தியாகி மகாத்மா காந்தியை சுட்டு படுகொலை செய்தது இதே இந்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பாகும் இதன் பெருமையைப் பேச மோடி வெட்கப்பட வேண்டாமா?
மக்களின் வரிவணத்தில் மதப் பிரச்சாரம் செய்யும் முடிக்கு எதிராக கண்டன குரல் எழுப்புவோம்.
இந்தியாவை ஆர்எஸ்எஸ் இடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தி அழுத்தமாக பதிவு செய்துள்ளது இந்த கட்டுரை.
சிறிய கட்டுரை என்றாலும் அதனுடைய கருத்து ரொம்ப ஆழமானது. ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.