கோவை தடாகம் சாலை K.N.G புதூர் பிரிவில் இயங்கிவரும் ஸ்ரீ ரங்கநாதர் இண்டஸ்ட்ரீஸ் (SRI) நிறுவனத்தில் கோவை மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர்  முன்னணி தொழிற்சங்கம் இயங்கி வருகிறது.

இந்நிறுவனத்தின் கடந்த மூன்று ஆண்டுக்கான ஊதிய உயர்வு  ஒப்பந்தம் செப்டம்பர் 2021-ல்  முடிவடையும்  நிலையில் புதியதாக நான்காம் முறை  ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை  துவங்க வேண்டியுள்ளது. இந்நிலையில் சங்கத்தின் மகாசபை கூட்டம் 18.07.2021 (ஞாயிறுகிழமை) காலை 10:30 மணிக்கு நடத்தப்பட்டது.

பணி ஓய்வு பெற்ற தோழர்.மருதமுத்து

கூட்டத்தை SRI கிளைத் தலைவர் தோழர்.கோபிநாத் அவர்கள் தலைமை ஏற்று  நடத்தினார். கூட்டத்தில் முதல் நிகழ்ச்சியாக பு.ஜ.தொ.மு. முன்னாள் மாவட்ட செயலாளரும், மாநிலத் துணைத் தலைவருமான தோழர்.விளவை இராமசாமி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நடத்தப்பட்டது. தோழர் பற்றி நினைவு கூர்ந்து  அவருடன் பணியாற்றிய அனுபவம், அவரிடமிருந்து நாம் கற்க வேண்டிய விஷயங்களைப் பற்றி SRI -கிளையின் முன்னாள் நிர்வாகக்குழு உறுப்பினரான தோழர்.வரதராஜ் பேசினார்.

பு.ஜ.தொ.மு. மாநில பொதுச்செயலாளர் தோழர்.லோகநாதன், தோழர்.விளவை ராமசாமி அவர்கள் தொழிலாளர்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டதையும், தொழிலாளர்களுக்கான போராட்டத்தில் சமரசம் செய்துகொள்ளாத தன்மையையும்,  உடல் நலக்குறைவாக இருந்த காலகட்டத்திலும் தொழிலாளர்களுக்கான வர்க்கக்கண்ணோட்டத்தை எடுத்துச் சென்றதையும் நினைவுகூர்ந்து பேசினார்.

அடுத்ததாக பெட்லிங் பிரிவில் பணிபுரிந்து பு.ஜ.தொ.மு. செயற்குழு பொறுப்பில் இயங்கிவந்த தோழர்.மருதமுத்து கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றதையொட்டி அவரின் பணிநிறைவைப் பாராட்டி கௌரவிக்கும் பொருட்டு மெஷின்ஷாப் பிரிவில் பணிபுரியும் தோழர்.கனகராஜ் மாலை அணிவித்தார். பெட்லிங்  பிரிவில் பணிபுரியும் தோழர்.செந்தில்குமார் அவர்கள் பொன்னாடை அணிவித்தார்.  அவருக்கான நினைவுப்பரிசை தோழர்கள் திலீப் மற்றும் லோகநாதன் வழங்கினர்.

பின்னர் SRI- கிளையின் ஆண்டறிக்கை  தொகுக்கப்பட்டு  சங்க  செயல்பாடுகளைப் பற்றி கிளையின் இணைச்செயலாளர் தோழர்.ஆரோக்கியராஜ் அவர்களும், கிளை சங்கத்தின் அரசியல் நடவடிக்கைகளுக்கான இணைச்செயலாளர் தோழர்.சரவண குமார் அவர்களும், நிதியறிக்கை தோழர்.அருள் குமார் ஆகியோர் இணைந்து வாசித்தனர். ஆண்டறிக்கையில் பொதுக்குழு தோழர்களின் சந்தேகங்கள், கேள்விகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அதன்பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு  நடைபெற்றது. கிளை சங்கத்தின் துணைத் தலைவர்கள் தேவராஜ் மற்றும் சரவணன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். அவர்களுக்குப் பதிலாக பவுண்டரி பிரிவில் பணிபுரியும் தோழர்கள்.சரவணன் மற்றும் சந்தோஷ் குமார் ஆகிய இருவரையும்  நிர்வாகக் குழுவிற்கு துணைத்தலைவர்களாகவும், செயற்குழுவில் இயங்கிவந்த தோழர்கள் மணிகண்டன் மற்றும் பாபு அவர்களை செயற்குழுவின் பிரதிநிதிகளாகவும் நிர்வாகக் குழு முன்மொழிந்ததை பொதுக்குழு அங்கீகரித்தது.

SRI நிறுவனத்தில் பு.ஜ.தொ.மு. இதுவரை 3 ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டு, 3-வது ஒப்பந்தம் செப்டம்பர் 2021-டன் நிறைவடையும் நிலையில், நான்காவது ஊதிய ஒப்பந்த கோரிக்கைப் பட்டியல் வாசிக்கப்பட்டது. அதனை பொதுக்குழுத் தோழர்கள் ஏற்றுக்கொண்டனர். பொதுக்குழுவின் கோரிக்கையின் மீது தொழிலாளர்கள் எழுப்பிய சந்தேகங்கள், கேள்விகளுக்கு கிளைச்செயலாளர் தோழர்.திலீப் அவர்கள் பதிலளித்தார்.

இறுதியாக, மாநில பொதுச்செயலாளர் தோழர்.லோகநாதன் பொதுக்குழு அங்கீகாரம் அளித்த கோரிக்கைகள் வைப்பதை மட்டுமல்லாமல் அதை வெற்றி பெறுவதற்காக தொழிலாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்று விளக்கிப்பேசினார்.

புஜதொமு மாநில பொதுச் செயலாளர் தோழர்.லோகநாதன்

கிளை இணைச்செயலாளர் தோழர்.சரவணகுமார் அவர்கள் நன்றியுரையுடன் கூட்டம்  நிறைவுற்றது.

தொடர்புக்கு

கோபிநாத். M

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

கோவை மாவட்டம்

9092460750

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here