“நாங்கள் வேட்டியை பற்றி கனவு கண்டு கொண்டிருக்கும்போது, எங்களது கோவணமும் பறிபோனது” என்று எழுதினார் கவிஞர் வைரமுத்து.

சிறப்பு தீவிர திருத்தத்தின் கீழ் எங்களது வாக்குரிமை பறிபோகிறது, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பல்வேறு உரிமைகள் பறிக்கப்படுகிறது என்றெல்லாம் போராடிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் உங்களை உளவு பார்ப்பதற்கு என்று கருவியை உங்களது மொபைல் போனில் இணைக்கின்ற சதித்தனத்தை ஆர்.எஸ்.எஸ் பாஜக கும்பல் அமல்படுத்த துவங்கியுள்ளது.

Sanchar Saathi ஆப் மூலம் நாட்டு மக்களை உளவு பார்க்கும் பாசிச பயங்கரவாத ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல்!

சமூக செயற்பாட்டாளர்கள், எதிர்கட்சியினர், குடிமக்கள், ஊடகவியலாளர்கள் என நாட்டு மக்கள் அனைவரின் மொபைல் ஃபோன்களை உளவு பார்க்கவும் அவர்களின் தனியுரிமையை மீறவும் பாஜக திட்டமிட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து விதமான மொபைல் போன்களிலும் #SancharSaathiapp என்ற செயலியை கட்டாயம் இணைக்க வேண்டும்.

ஏற்கனவே வெளியாகியுள்ள போன்களில் அப்டேட் கொடுப்பதன் மூலமாக இந்த செயலியை Uninstall செய்ய முடியாத வகையில் இடம்பெற வைக்க வேண்டும் என பாஜக அரசு மொபைல் உற்பத்தி நிறுவனங்களுக்கு புதிய உத்தரவிட்டுள்ளது.

காணாமல் போன மொபைலை மீண்டும் கண்டுபிடிக்க உதவும், ஒரே எண்ணை பலரும் பயன்படுத்துவதை தவிர்ப்போம் என சைபர் பாதுகாப்புக்காக இந்த செயலி கொண்டுவரப்படுவதாக பாஜக அரசு கூறுகிறது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறது.

ஆனால் எதார்த்தத்தில் மக்களை உளவு பார்க்கவும், அவர்களை மிரட்டவும் அவர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு மறைமுகத் திட்டமாகவே இது இருக்கும் என தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களும் பாஜகவின் உண்மை முகத்தை புரிந்து கொண்ட சமூக செயல்பாட்டாளர்களும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஏனெனில், பாஜக அரசு ஏற்கனவே பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பலரை உளவு பார்த்துள்ளது . பீமா கொரேகான் வழக்கில் அரசுத்தரப்பில் தான் திட்டமிட்டு Malware மூலமாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் கணினியில் சில தகவல்களை புகுத்தப்பட்டுள்ளது என அம்பலமானது. இந்த போலியான ஆவணங்களின் மூலம் ஆனந்த் டெல்தும்டே முதல் பல்வேறு அரசியல் செயல்பாட்டாளர்களை கைது செய்து சிறையில் அடைத்தது ஆர்எஸ்எஸ் பாஜக அரசு.

பாஜக அரசின் ஆதரவுடன் ஐபோனை Hack செய்யும் சம்பவங்கள் நடந்ததாகக் கூறப்படும் புகார்கள் குறித்து #CERT இன் (இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு) நடத்திய விசாரணை குறித்த கேள்விக்கு இதுவரை பாஜக அரசு நாடாளுமன்றத்தில் பதில் சொல்லவில்லை.

நாடாளுமன்றத்தை தனது பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுகின்ற அதிகார மடமாக பயன்படுத்துகின்றதே ஒழிய தனக்கு ஓட்டு போட்ட மக்கள் உள்ளிட்ட மக்களின் ஜனநாயக உரிமைகளை அவர்களே சொல்கின்ற உரிமைகளை பாதுகாக்கின்ற மன்றமாக ஒருபோதும் பயன்படுத்தவில்லை.

படிக்க: 

 எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிக்கையாளர்களின் ஐபோன்களை உளவு பார்க்கும் பாஜக அரசு!

 ராமராஜ்ஜியத்தில் பெகாசஸ் உளவு!

பாஜகவின் இந்த நடவடிக்கை மக்கள் மீதான முழு கண்காணிப்பு, குடிமக்களின் தனிப்பட்ட சுதந்திரம் ( #privacy ) பறிபோகும் அபாயம், அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சகட்டமாக மட்டுமே உள்ளது என்று பாசிச பாஜகவின் நடவடிக்கைகளை பத்திரிகையாளர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.

தனக்கு எதிராக போராடுகின்ற புரட்சிகர ஜனநாயக சக்திகளை கண்காணிப்பது என்பதை தாண்டி நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் கண்காணிக்கின்ற கேடுகெட்ட பாசிச பயங்கரவாத அமைப்பாக ஆர்எஸ்எஸ் பாஜக உருவெடுத்துள்ளது என்பதை பளிச்சென்று வெளிக்காட்டும் மற்றொரு செயல்பாடுதான் இந்த உளவு செயலி ஆகும்.

நவீன அறிவியலை பயன்படுத்தி நாட்டு மக்களுக்கும் மனித குலத்திற்கும் ஏதாவது சேவை செய்யலாம் என்பதை காட்டிலும் ஒவ்வொருவரின் தரவுகளை திரட்டி வைத்துக் கொள்வது அதன் மூலம் அவர்களை தனது நுகர்வு பொருட்களை வாங்குகின்ற சந்தையாக மாற்றுவது என்று வெறித்தனத்துடன் அலையும் கார்ப்பரேட்டுகளின் கைக்கூலியான rss பாஜகவும் தனக்கு எதிராக போராடுகின்ற மக்களை கண்காணிப்பதற்கு உளவுக் கருவிகளை பயன்படுத்துகிறது என்பது உச்சகட்ட அடக்குமுறையின் ஒரு வடிவமாகும்.

இதனால்தான் சொல்கிறோம் வாக்குரிமை, பேச்சுரிமை போன்றவற்றை கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் இந்த சூழலில் அடிப்படை உரிமையே பறிக்கின்ற கோவணத்தை உருவுகின்ற கேடுகெட்ட செயலில் ஈடுபட்டுள்ளது என்பதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஆர் எஸ் எஸ் பாஜக பயங்கரவாத கும்பலுக்கு எதிராக போராடுகின்ற அனைத்து சக்திகளையும் ஓர் அணியின்கீழ் திரட்டி இத்தகைய அடக்குமுறைகளை எதிர்த்து முறியடிக்க வேண்டும் என்பதுதான் காலத்தின் கட்டாயமாக மாறி உள்ளது.

மருது பாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here