திருச்சியில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை கண்டித்து ம.க.இ.க தலைமையில் போராட்டம் நடத்திய தோழர்கள் கைது!
மதுரை திருப்பரங்குன்றம் விசயத்தில், உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பு அரசியல் சட்டத்திற்கு எதிராகவும், விரோதமாகவும் உள்ளது. இந்து-முஸ்லிம் மதத்தினர் இடையே வழிபாட்டில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளதும், தீர்ப்பு வழங்கிய நீதிபதியை பதவி நீக்கம் செய்யக் கோரியும், ஜி.ஆர்.சுவாமிநாதனைக் கண்டித்தும் திருச்சியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு இன்று 04.12.2025 காலை 11.30 மணியளவில் மக்கள் கலை இலக்கியக் கழகம் தலைமையில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் அமைப்புகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா தலைமை தாங்கினார். மக்கள் அதிகாரத்தின் மாநில செயலாளர் தோழர் செழியன் முன்னிலை வகித்தார். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயலாளர் தோழர் கோவன் ஊடகங்களுக்கு இந்த பிரச்சனை சம்பந்தமாக பேட்டியளித்தார். ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிபதி பதவியை ரத்து செய்ய வேண்டும்.
மேலும் திருப்பரங்குன்றத்தில் போலீசை தாக்கிய கலவரத்தில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க இந்து முன்னணி குண்டர்களை குண்டர் சட்டத்தில் உடனடியாக கைது செய்ய வேண்டும். திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் பிரச்சனை சம்பந்தமாக உடனடியாக விசாரணை குழு அமைத்து அமைதியான சூழலை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் லதா, மக்கள் அதிகாரத்தின் மாவட்ட செயலாளர் தோழர் கார்க்கி உள்ளிட்ட அமைப்பு தோழர்கள் என கலந்து கொண்டனர் . ம.க.இ.க தோழர் சீனிவாசன் தலைமையில் ஜி.ஆர்.சுவாமிநாதனை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தை செய்ய விடாமல் திருச்சி காவல்துறை தடுத்தது! அதை மீறி தோழர்கள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றி தற்போது மண்டபத்தில் வைத்துள்ளனர்.
தகவல் :
மக்கள் கலை இலக்கிய கழகம்.
திருச்சி மாவட்டம்.
தொடர்புக்கு: 8056905898.




















