
சனாதனத்திற்கு எதிரான கருத்துக்களையும் பழக்கவழக்கங்களையும் அழிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் காவிகள் தென்னிந்திய வரலாற்றை மாணவர்கள் அறிந்திடாமல் செய்திட வேண்டும் என்ற முயற்சியில் இப்பொழுது இறங்கி இருக்கிறார்கள்.
மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகள் மற்றும் அதனுடன் இணைந்த பள்ளிகளில் National Council of Educational Research and Training (NCERT) தயாரித்த “Exploring Society: India and Beyond part 1” என்று தலைப்பிட்ட 8ஆம் வகுப்பிற்கான சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் தென்னிந்திய வரலாற்றை புறக்கணிப்பது அல்லது மிக சொற்பமான அளவில் அரைகுறையாக சொல்வது என்ற வகையில் மாணவர்கள் உண்மையான தென்னிந்திய வரலாற்றை அறிந்து கொள்வதை தடுப்பதற்கான முயற்சியில் சங்கிகள் ஈடுபட்டுள்ளனர்.
தென்னிந்திய பகுதிகளை ஆண்ட சேர, சோழ, பாண்டிய, ராஷ்ட்ரகூட, சாளுக்கிய அரசுகளின் காலத்தை அறிந்து கொள்வதற்கு ஏராளமான கல்வெட்டு, இலக்கிய ஆதாரங்கள் உள்ளன.
கட்டிடக்கலையிலும் உள்நாட்டு வணிகத்தில் மட்டும் இன்றி கடல் கடந்த வணிகத்திலும் இலக்கியத்திலும் கலாச்சாரத்திலும் தென்னிந்தியா மிகப்பெரும் அளவு வளர்ந்திருந்தது. இவைகள் அனைத்தும் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வளவு இருந்தும் தென்னிந்தியாவை பற்றி மிகச் சொற்ப அளவிலேயே மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
சிற்பக்கலை, மொழி இலக்கணம், கணிதம் போன்றவற்றில் வளமுற்று இருந்த தமிழக, ஆந்திர, கர்நாடக பகுதிகள் வட இந்திய நாகரீகத்திற்கு பெரும் பங்களிப்பை செய்திருக்கின்றன. இவற்றை மாணவர்களிடமிருந்து இருட்டடிப்பு செய்வதன் மூலமாக இந்தியாவின் பன்முகத்தன்மையை மாணவர்கள் ஆழமாக புரிந்து கொள்ள முடியாமல் தடுக்கும் வேலையை இந்த புத்தகம் செய்கிறது.
இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டிட இந்தியா முழுவதும் வெறிகொண்டு பல போர்களை நடத்திக் கொண்டிருந்த வெள்ளையர்களை நடு நடுங்க வைத்த ஹைதர் அலி அவரது மகன் திப்பு சுல்தானை பற்றிய வரலாற்றை மாணவர்கள் அறிந்திட வேண்டியது கட்டாயம். திப்பு சுல்தானை வீழ்த்திய பிறகே இந்தியாவில் ஒரு நிலையான, வலிமை வாய்ந்த காலனி ஆட்சியை பிரிட்டிசாரால் அமைக்க முடிந்தது என்பதிலிருந்து இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள முடியும். ஆனால் ஹைதரும் திப்பு சுல்தானும் இஸ்லாமியர்கள் என்பதற்காகவே அவர்களின் வரலாற்றை இந்தப் புத்தகத்தில் இருட்டடிப்பு செய்துள்ளனர்.
வெள்ளையாதிக்கத்தை எதிர்த்து வட இந்தியாவில் நடந்த சந்தால் பழங்குடியின எழுர்ச்சி போன்ற எழுர்ச்சிகளை பற்றி விரிவாக குறிப்பிடப்பட்டுள்ள இந்த பாடபுத்தகத்தில் தென்னிந்தியாவில் வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிராக திருவிதாங்கூரில் நடந்த சின்னார் எழுச்சி போன்றவற்றை குறிப்பிடாமல் புறக்கணித்து உள்ளன.
படிக்க:
♦ புதிய கல்விக் கொள்கையை கிழித்தெறிவோம்! கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரப் போராடுவோம்!
♦ சூத்திர, பஞ்சம சாதிகளுக்கு உயர்கல்வி உரிமையை ஒழித்துக்கட்டும் ஆர்எஸ்எஸ் பாஜக!
இதன் மூலம் வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்து வடமாநில மக்கள் போராடிக் கொண்டிருந்த பொழுது தென் மாநிலத்தவர்கள் செயலற்று இருந்ததாக காட்ட முயற்சித்து இருக்கிறது இந்த பாட புத்தகம்.
இந்தப் பாட புத்தகத்தில் உள்ள வரைபடங்கள், விளக்கப் படங்கள் வட இந்திய வரலாற்றை மிகவும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டியர்கள் காலத்திய அரசியல் நிலைமைகளையும் கடல்கடந்த வணிகத்தையும் பற்றி மிகச் சொற்பமான அளவிலேயே இந்தப் பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவின் வரலாற்றை மாணவர்கள் அறிந்து கொள்ள விடாமல் செய்வது என்பது சங்கிகள் இந்திய வரலாற்றை தங்களுக்கு ஏற்றார் போல் எழுதுவதற்கு செய்து கொண்டிருக்கும் ஒரு முயற்சியாக தான் பார்க்க வேண்டும்.
உண்மையான வரலாற்றை இருட்டடிப்பு செய்வதன் மூலம் தங்களுக்கு தேவையான வகையில் பொய்யானவற்றை “இதுதான் இந்திய வரலாறு” என்று கூறி மூளையை மழுங்கடித்து, சங்கிகள், மக்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்.
ஆரியர்கள் அனைவரும் பசு மாமிசம் உண்டதற்கான ஆதாரங்கள் வேதத்திலேயே கொட்டிக் கிடக்கின்றன. யாகம் செய்த முனிவர்களுக்கு, யாகத்தில் வெட்டி கொல்லப்பட்ட மாட்டின் எந்தெந்த உறுப்புகளை எந்தெந்த தகுதியுடைய முனிவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் இந்து மத இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்கிகளின் தேசிய நாயகனான ராமன் தனது மனைவி சீதைக்கு, சமைத்த மாட்டுக்கறியை ஊட்டி விட்டதாக துளசிதாசர் ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வளவு ஆதாரங்கள் இருந்த பொழுதும், இப்பொழுது பசு மாமிசம் உண்பது மாபெரும் பாவம் என்றும் அப்படி உண்பவர்களையும் மாட்டுக்கறி வைத்திருப்பவர்களையும் கொல்வது சரியானது தான் என்று வட மாநில இந்துக்களை வெறியூட்டி ஏராளமான கொலைகளை தொடர்ந்து நிகழ்த்தி வருகின்றனர். மாட்டுக்கறி உண்டாலும் மாட்டுக்கறி வைத்திருந்தாலும் அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் வகையில் குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டத்தையும் இயற்றி நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
வடமாநில மக்களுக்கு தங்கள் முன்னோர்களின் வரலாறு தெரியவில்லை என்பதால் தான் சங்கிகளின் இந்த பொய் பிரச்சாரத்திற்கு பலியாகி இப்படிப்பட்ட கொடூர கொலைகளை நிகழ்த்தி வருகின்றனர். பாசிஸ்டுகளின் பொய் பிரச்சாரத்திற்கு பலியாகி உள்ள மக்களை மீட்டெடுப்பதற்கு மட்டுமின்றி இனிவரும் இளம் தலைமுறையினர் பாசிஸ்டுகளின் பொய் பிரச்சாரத்திற்கு பலியாகாமல் இருப்பதற்கு உண்மையான வரலாறுகளை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டியதும் மிகவும் அவசியம்.
உண்மை வரலாறுகளை மறைத்து தங்களுக்கு ஏற்ப பொய்யான வரலாறுகளை மாணவர்கள் மனதில் விதைப்பதன் மூலமாகத்தான் தங்களின் இருப்பை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பது சங்கிகளுக்கு நன்கு தெரியும். அதனால் தான் உண்மையான வரலாற்றை மாணவர்களிடம் இருந்து மறைப்பதற்காக மத்திய அரசின் நிறுவனமான NCERT தயாரிக்கும் வரலாற்றுப் பாடத்தில் இப்படிப்பட்ட அயோக்கியத்தனங்களை சங்கிகள் செய்திருக்கின்றனர். இந்திய மக்கள் எதிர்கொண்டுள்ள அபாயத்தை உணர்ந்து சங்கிகளின் முயற்சியை முறியடிக்க அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டும். இதை செய்யத் தவறினால் இந்திய மக்கள் மிகப் பெரும் விலை கொடுக்க வேண்டி இருக்கும்.
– குமரன்
செய்தி ஆதாரம்:The wire







தென்னிந்திய வரலாறு மட்டுமல்ல சங்களுக்கு எதிரான வரலாற்றை மறப்பது தான் பார்பன புத்தி இதைதான் இராயிரம் ஆண்டுகளாக செய்து வந்தனர்…
அதை எதிர்த்து போராடிய பூலே அம்பேத்கர் பெரியார் மற்றும் கம்யூனிச இயக்கங்கள் முன்னெடுத்த அல்லது மக்களிடம் அம்பலபடுத்தகயது போன்று இன்று நாம் காவி பாசிஸ்டுக்களுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது என்பதைதான் இக்கட்டுரை உணர்த்துகிறது…