எரிவாயு விலையேற்றம்! பாசிச மோடி அரசு நடத்தும் தொடர் தாக்குதல்!


எரிவாயு விற்பது கார்ப்பரேட்டுகளா?

இப்பொழுது இல்லை. இதை விரைவில் கைப்பற்ற உள்ளார்கள். இப்பொழுது பெருமளவில் விற்பது எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம். ONGC.

ONGC எப்படி வந்தது?

இது ஆகஸ்ட் 14, 1956 இல் ஒரு ஆணையமாக அமைக்கப்பட்டது. ஜூன் 23, 1993 இல் மேலும் ஒருங்கிணைக்கப்பட்டது. இது ஒரு இந்தியப் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனம் ஆகும்

ONGC – யானது  இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் 77%மும், இந்தியாவின் இயற்கை எரிவாயு உற்பத்தியில் 81%மும் பங்களிக்கிறது. இது இந்தியாவில் அதிகமாக இலாபம் ஈட்டும் நிறுவனம் ஆகும்.

இந்திய அரசாங்கம் இந்த நிறுவனத்தின் 60.41% பங்கினை வைத்திருக்கிறது.

ONGC ₹2,18,976 கோடி சொத்துக்களை கொண்டுள்ளது. இது இந்தியாவில் 11,000 கிலோமீட்டர்களுக்கும் அதிகமான குழாய்த் தொடர்களைச் சொந்தமாகக் கொண்டு இயக்கிவருகிறது.

ONGC எரிவாயுவை எப்படி உற்பத்தி செய்கிறது?

நாம் பயன்படுத்தும் இயற்கை எரிவாயு என்பது தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. பூமிக்குள் இருந்து கிடைக்கும் எரிவாயுவை பிரித்து விநியோகிப்பது தான், அதாவது வாயுவாக கிடைப்பதை குளிர்வித்து, குறிப்பிட்ட அழுத்தத்தில் அதை திரவமாக மாற்றி, அந்த திரவத்தை சிலிண்டரில் அடைத்து நமக்கு விற்கிறார்கள்.

இது மட்டும்தான் கம்பெனிகளில் நடக்கிறது. இந்த எரிவாயு நிறமற்ற, மணமற்ற தன்மை கொண்டிருப்பதால் கசிவு ஏற்படும்போது நம்மால் கண்டு பிடிக்க முடியாமல் போகும். எனவே விபத்தைத் தடுக்க சில பொருட்களை உடன் சேர்க்கிறார்கள்.

விற்கப்படும் பலவகையான எல்பிஜியில் காலநிலைக்கேற்ப குளிர்காலத்தில் ப்ரொபேன் அதிகமாகவும், கோடை காலத்தில் பியுத்தேன் அதிகமாகவும் சேர்க்கப்படுகின்றன. துர்நாற்றமுடைய ஈதேன்தியால் கசிவுகளை எளிதில் கண்டறிவதற்காக சேர்க்கப்படுகிறது.

ஒரு சிலிண்டர் ஆயிரம் ரூபாயை தாண்டுவது சரியா?

19 கிலோ கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டரின் விலை இப்பொழுது   மே முதல் வாரத்திலேயே ரூபாய் 2,500 தாண்டிவிட்டது. இது எந்த வகையில் பகற்கொள்ளை என்பதை சற்று எளிமையான உதாரணத்துடன் பார்ப்போம்.

gas filling station

சாலையோரங்களில் லாரி டயர்களுக்கு காற்று அடிப்பதை பார்த்திருப்போம். ஒரு ஏர் கம்பரசரிலிருந்து நீளமான டியூப் மூலம் காற்றை டயருக்கு உள்ளிருக்கும் டியூப்பில் நிரப்புவார்கள். அதற்கு ஒரு ஐம்பது ரூபாய் வரை வாங்குவார்கள்.

நாம் பயன்படுத்தும் எல்பிஜி என்பதும் இதேபோல் பெரிய கொள்ளவுள்ள சிலிண்டர்களில் அடைக்கப்பட்டு நமது ஊர்களுக்கு லாரிகளில் கொண்டு வரப்பட்டு சிறிய சிலிண்டர்களில் அடைக்கப்பட்டு விநியோகஸ்தர்கள் மூலம் வினியோகிக்கப்படுகிறது. தெருவோரத்தில் காற்று அடிப்பதற்கு விலை கூடுவதில்லை. ஆனால் சிலிண்டர் விலை மட்டும் கூடிக் கொண்டே போகிறது.

நினைத்த போதெல்லாம் விலையேற்றுவது ஏன்?

நம்மை மேலும் மேலும் ஒட்ட சுரண்டுவதற்காக தான். உண்மையில் உற்பத்தி செலவு, வினியோகிக்கும் செலவு இதெல்லாம் திடீர் திடீரென்று அதிகரிக்கக் கூடிய ஒன்றல்ல.

எரிவாயுவை பூமியிலிருந்து வெளியில் எடுக்கும் குழாய்களை, வால்வுகளை அமைத்து, அதை சேமிக்கும் கொள்கலனை அமைத்து ஆலையை தொடங்குகிறார்கள். ஒரு ஆலையை தொடங்கிவிட்டால் அதன்பின் வெறும் பராமரிப்பு செலவு மட்டுமே தேவை. அப்படியிருக்கும்போது நினைத்த போதெல்லாம் உற்பத்தி செலவு அதிகரிப்பது எப்படி என்பதை அரசுதான் விளக்க வேண்டும். சிலிண்டர் விலை ஏன் ஏறுகிறது என்பதையும் அரசுதான் விளக்க வேண்டும்.

சாலையோரங்களில் லாரி டயர்களில் காற்று அடிப்பதில் மின் கட்டண உயர்வு காரணமாக ஐந்து ரூபாய் வேண்டுமானால் ஏறுகிறது ஆனால் நாம் பயன்படுத்தும் சிலிண்டர் விலை 100, 200 ஆக ஏறுகிறது.

இயற்கையாக கிடைப்பதை ரூ.100க்கும், 200க்கும் விலை வைக்க வேண்டியதை, ஆயிரத்துக்கு மேல் ஏற்றி வைத்துள்ளது அரசு. பொதுத்துறையை கொளுத்த லாபத்திற்கானதாக மாற்றியும் வருகிறது.

அரசுக்கு வருவாய் ஈட்டாவா மோடி இதை செய்கிறார்?

அப்படியும் சொல்வார்கள் சங்கிகள். அதை கூச்சமின்றி எழுதவும் முன்வரக்கூடும் சில தரங்கெட்ட நாளிதழ்கள். எரிவாயு துறையை இப்படி பொன்முட்டையிடும் வாத்தாக்கி, அதை அம்பானிக்கு தாரைவார்க்க போகிறது கார்ப்பரேட் மோடி அரசு.

எதை வைத்து மோடி அரசை கார்ப்பரேட் அடியாள் என்று விமர்சிக்கிறோம்?

பெட்ரோலியம் மற்றும் இயற்கைவாயு கட்டுப்பாட்டு வாரியம், நகர்ப்புற எரிவாயு விநியோக கட்டமைப்புக்கு அனுமதி வழங்கும் அமைப்பாகும். சென்னை உட்பட இந்தியாவில் உள்ள முக்கியமான பெருநகரங்களில் எல்லாம் இனி நேரடியாக குழாய் மூலம் எரிவாயுவை விற்க இருக்கிறார்கள். அதற்கான எரிவாயு நிலையங்கள் நிறுவப்படுகின்றன.

2020-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி வரை நாட்டில் சுமார் 2,543 அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயு நிலையங்கள் இயங்குகின்றன.

10-வது நகர எரிவாயு விநியோக ஏலச்சுற்றுக்களின் மூலம் தற்போது வரை 27 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 400-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் 232 பகுதிகளில் நகர எரிவாயு விநியோக இணைப்புகளை மேம்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

யாருக்கு அனுமதியும், வங்கி கடன்களும் தரப்படுகிறது?

எரிவாயு பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக கட்டுப்படியாகக்கூடிய போக்குவரத்துக்கான நீடித்த மாற்று வழி திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் அதிக எண்ணிக்கையிலான  எரிவாயு ஆலைகளை அமைக்க தனியார் தொழில்துறையினர் முன்வருவார்கள் என்றது மோடி அரசு.

மேலும் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக அழுத்தமூட்டப்பட்ட உயிரி எரிவாயுவை நீண்டகால அடிப்படையில் கொள்முதல் செய்வதற்கு எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைபடுத்துதல் நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்து வருகின்றன. மேலும் இந்திய ரிசர்வ் வங்கியும் இந்த ஆலைகளுக்கு கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கின்றது. இது அரசு செய்துவரும் வேலையை பற்றிய சிறு குறிப்பு மட்டுமே!

தேசிய பணமாக்கும் திட்டம் ஓஎன்ஜிசிஐயும் பதம்பார்க்கும்!

பொன் முட்டையிடும் வாத்தாக மாற்றிவரும் எரிவாயு துறையை மொத்தமாக கார்ப்பரேட் முதலாளிகளான அம்பானிகளுக்கு தாரைவார்க்க போகிறது பாசிஸ்ட் மோடி அரசு! இப்பொழுது சுதாரித்துக்கொண்டு தடுக்க தவறினால், நாம் ஆங்கிலேய காலனியாதிக்கத்தை விட கொடுமையான அடக்குமுறையை, அடிமைத்தனத்தை சுமக்க நேரிடும்.

  • இளமாறன்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here