டிசா மாநிலம் – கட்டாக் மாவட்டம் – முண்டாலியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் (CISF) 57-வது நிறுவன தின விழா மார்ச் 6 அன்று நடந்தது. அதில் கலந்து கொண்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கீழ்க்கண்டவாறு ஊளையிட்டுள்ளார்.

‘ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் CISF வீரர்கள் குறிப்பிடத்
தக்க பங்களிப்பை ஆற்றியுள்ளனர்; பெரிய சவால்கள் இருந்த போதும், பாதுகாப்பு படையினர் ஒவ்வொரு பணியையும் ‘ஒழுக்கத்துடனும்’, உறுதியுடனும் மேற்கொண்டு வருகின்றனர்; நீர்த்தேக்கங்கள் முதல் நாடாளுமன்றம் வரை முக்கிய இடங்களுக்கு CISF வீரர்கள் மகத்தான பாதுகாப்பை அளிக்கின்றனர். இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்த ஊக்கியாக பயன்படுகிறது CISF; அமைதி இருக்கும் போதுதான் அதிகப் பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும்; தொழில்துறையில் அமைதியினை நிலைநாட்ட பாதுகாப்பு பணியாளர்கள் மிகத் திறம்படப் பணியாற்றுகின்றனர்; 2047-க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கCISF வீரர்கள் துணையாக உள்ளனர்.

அந்த வகையில் இந்தியா இந்த மாத இறுதிக்குள் (மார்ச் 31-க்குள்)’ந க் ச ல்’ இல்லாத நாடாக மாறும்’ -என்று கொக்கரித்துள்ளார்.

எப்படிப்பட்டவர் அமித்ஷா?

RSS மோகன் பகவத், பாசிச பாஜக மோடி-யுடன் பிணைந்து கொண்டு நாட்டில் சங்பரிவார் இந்துத்துவா கொள்கைகளில் மக்களை மூழ்கடிப்பது; சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு அரசியலை பரப்புவது; குஜராத், உ.பி., மணிப்பூர், காஷ்மீர் உட்பட வட மாநிலங்களில் ரத்தக் களரியை உருவாக்கு
வது; பெண்களை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்குவது; மசூதிகளை, தேவாலயங்களை, சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்குவது; ஆயிரக்கணக்கானோரை கொன்று குவிப்பது; முதல் தகவல் அறிக்கையில் ஏ1 குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தும் போது தண்டிக்க முனைந்த நீதிபதி லோயாவையே போட்டுத் தள்ளியது;

இடது சாரிகள், புரட்சியாளர்கள், பகுத்தறிவாளர்கள் – என நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கௌரி லொங்கேஷ், கல்புர்க்கி… இன்னும் எண்ணற்றோர் சுட்டுப் பொசுக்கப்பட காரணமாக இருந்தது; சிறுபான்மையினரின் குடியுரிமையைப் பறிப்பது; வக்ஃப் சட்டத் திருத்தம் கொண்டு வந்தது; காஷ்மீரில் ஆர்டிகிள் 370-ஐ நீக்கியது; இந்தி சமஸ்கிருத மொழியை திணிப்பது;தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் என அனைவரது வாழ்க்கையையும் குழி தோண்டி புதைத்து அதானி – அம்பானிக்கும்பலுக்கு நாட்டைத் தாரை வார்ப்பது; இந்தியாவின் இறையாண்மையை முழுமையாக அமெரிக்காவிடம் காவு கொடுத்தது…

படிக்க: நக்சல்பாரி இயக்கம் ஒருபோதும் வீழ்ச்சி அடையாது! பிபிசி&ஆர்எஸ்எஸ் கனவு பலிக்காது.

இப்படி எண்ணற்ற கொடுஞ்செயல்களுக்கு சூத்திரதாரியாக இருக்கும்…
அரச பயங்கரவாதியாக… மிகத் தீவிரவாதியாக விளங்கும் சித்பவன பிராமணன் என பிரபல்யப்படுத்திக் கொள்ளும் அமித்ஷா, ஒழுக்கத்தைப் பற்றியும், நாட்டு மக்களின் வளர்ச்சி பற்றியும் பேசுவதும், மக்களுக்கு விடுதலையையும் சமூக மாற்றத்தையும் உருவாக்குவதற்குத் தியாக வேள்வியில் ஈடுபடுவோரை தீவிரவாதி
கள் என முத்திரை குத்துவதும் விந்தையிலும் விந்தை அல்லவா?

மார்க்சியம் என்பது வறட்டு கோட்பாடு அல்ல…!

மார்க்சிய – லெனினிய -மாவோ சிந்தனை… என்பது வறட்டுக் கோட்பாடல்ல அமித்ஷா அவர்களே; அது ஒரு சமூக விஞ்ஞானம். அதனுடைய பயணம் மிக நீண்டது; அது தற்காலிக பின்னடைவைச் சந்தித்திருக்கலாம்! இந்தியாவைப் பொருத்தமட்டில் மார்க்சிய-லெனினியத்தை பேராயுதமாக ஏந்தி நிற்கும் அமைப்புக்கள் குழுக்கள் சிதறுண்டு இருக்கலாம்; சிற்சில செயற்பாடுகளில் ஏற்றத்தாழ்வுகளும், ஏன்… குறைபாடுகளும் கூட இருக்கலாம்.

ஆனால், அது ஒரு சமூக விஞ்ஞானம் எனும் பொழுது அது இன்றில் லாவிட்டாலும் நாளை; நாளை இல்லாவிட்டாலும் நாளை மறுநாள் விடியலுக்கு இட்டுச் செல்லும் மாமருந்து என்பதனை அறிவுடையோர் அறிவர்…! அமித்ஷா போன்ற ஆன்மீகத்தின் பெயரால் – மதத்தின் பெயரால் – மக்களைப் பிளவு படுத்தி ரத்தக் களரியை உண்டாக்கும் மக்கள் விரோத தற்குறிகளுக்கு இது விளங்காது; விளங்கவே விளங்காது…! புரியாது; புரியவே புரியாது!

புரட்சியாளர்களை இந்திய மண்ணிலிருந்து துடைத்தெறிந்து விடலாம் என்ற அமித்ஷாவின் கனவு  பகற் கனவாகவே முடியும்!

முதலாளித்துவம் கொல்லும்!
கம்யூனிசமே வெல்லும்!

  • எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here