படிப்பறிவுள்ளவர்களையே கூமுட்டைகளாக்கும் ரெங்கராஜ் பாண்டேயின் பொய்மைப் பேச்சு!

ரங்கராஜ் பாண்டே

படிப்பறிவுள்ளவர்களையே கூமுட்டைகளாக்கும் ரெங்கராஜ் பாண்டேயின் பொய்மைப் பேச்சு

நண்பர்களே….

அண்மையில் ரெங்கராஜ் பாண்டே பேசிய ஒரு காணொளியைக் கண்டேன். ஸ்ரீரங்கம் கோவில் வரலாற்றில் நிகழ்ந்ததாக ஒரு கொடூரமான பொய்யைக் கேட்டுக் கொண்டிருக்கின்ற மக்களிடம் கொஞ்சம்கூட கூச்சம் நாச்சமில்லாமல் அவிழ்த்துவிட்டு கொண்டிருந்தார்.

இந்தப் பேச்சில் அவர் கூறுகிறார், படையெடுத்து வந்த இஸ்லாமியர்களால் 12000 பக்தர்களின் தலைகள் வெட்டப்பட்டது என்றும் அதனால் பெருகிய ரத்தமானது காவிரி நதியில் ஆறாகப் பெருகிற்று என்றும் கூறுகிறார்.

“ஸ்ரீரங்கம்” கோவிலின் வரலாற்றை அந்தக் கோவில் நிர்வாகிகளே காலங்காலமாக (சுமார் 1000 ஆண்டுகளாக) எழுதி தொகுக்கப்பட்டுள்ள நூல் “கோயிலொழுகு” என்பதாகும். 1909 இல் வெளியிடப்பட்ட இந்த நூல் இப்பொழுதும் இணையத்தில் கிடைக்கின்றது. இந்த நூலில், படையெடுத்து வந்த இஸ்லாமியர்களை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்த முயன்ற பக்தர்கள் 12000 பேர்களின் தலைகளை மொட்டையடித்ததாகதான் எழுதப்பட்டுள்ளது. அவர்களுடைய தலைகளை வெட்டியதாக எந்தக் குறிப்பும் நூலில் எழுதப்படவில்லை ( “திருமுடி திருத்தி” என்றுதான் எழுதப்பட்டுள்ளது. “முடி திருத்துதல்” என்பதற்கு தமிழில் என்ன பொருள் உள்ளது என்பதை நான் உங்களுக்கு விளக்க வேண்டியதில்லை)

இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே இந்தக் கோவிலைச் சேர்ந்த “எம்பெருமான் அடியாரிலே ஒருத்தி” ( தேவரடியார் ) படையெடுத்து வந்தவர்களின் தலைவனைக் “கூடியிருந்ததாகவும்” அத்துடன் அந்த இஸ்லாமியருக்கு “சிங்கபிரான் என்கிற உள்ளுர் பிராமணரை “காரியதரிசி” ( personal secretary ) ஆக ஆக்கிவிட்டதாகவும் இந்த நிகழ்ச்சிகளால் மனமகிழ்ந்த அந்த படையெடுப்பாளன் மேற்கொண்டு எவ்வித துன்பங்களை செய்யாமல் அந்த மக்களை பாதுகாத்ததாகவும் கோயிலொழுகு நூலில் எழுதப்பட்டுள்ளது. அந்தக் குறிப்புகள் எழுதப்பட்டுள்ள பக்கங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.

அதாவது கொடுமையான கொலை பாதகமான செயலை ஒருவன் செய்திருந்தால், அதனை கண்ணால் கண்டு பதற்றமடைந்து பரிதவிப்பார்களே தவிர, அவனுடன் “எம்பெருமான் அடியாரிலே ஒருத்தி” இணைத்திருக்க ஒப்புக் கொள்வாளா ? அத்துடன் அதே ஊரைச் சேர்ந்த சிங்கபிரான் என்கிற பிராமணனை உதவியாளராகச் சேர்த்துவிடுவாளா? அப்படியே சேர்த்திருந்தாலும் அந்தக் கொடும்பாதகனுக்கு உதவியாளராக இருக்க அந்தப் பிராமணன் ஒப்புகொள்வாரா? இந்தச் செய்திகள் அனைத்தும் கோயிலொழுகு நூலில் விரிவாகப் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நூலின் இணையதள இணைப்பையும் அச்செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ள
பக்களையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

குறிப்பு

இதே கப்சாவை 2005 இல் எழுத்தாளர் சுஜாதா எழுதியிருந்ததை அபத்தமானது என்று நிறுவி நான் எழுதிய கட்டுரை காலச்சுவடில் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் என்னுடைய “கோவில் நிலம் சாதி” நூலின் கடைசி கட்டுரையாகவும் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோயிலொழுகு நூல் 1909 ம் ஆண்டு பதிப்பு

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZhelJQy&tag=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81#book1/3

நன்றி: போ.வேல்சாமி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here