புதிய ஜனநாயகம் (மார்க்ஸிஸ்ட்- லெனினிஸ்ட்) பத்திரிகை 40ஆம் ஆண்டு அரங்கு கூட்டம் நேற்று(02.08.2025) திருச்சியில் தோழர் ஆட்டோ கணேசன் அரங்கில் மாலை 5 மணிக்கு தொடங்கி நடந்தது. தோழர் ம.சி.சுதேஷ் குமார் தலைமையேற்று புதிய ஜனநாயகம் இதழ் லும்பன் வாழ்க்கையில் இருந்த தன்னுடைய வாழ்க்கையை தொழிலாளி வர்க்க அரசியலுக்கு கொண்டு வந்த அனுபவத்தை கூறினார். புதிய ஜனநாயக பத்திரிகை அரசியல் ஆசானாக உள்ள தனது தொழிற்சங்க அனுபவத்துடன் நினைவு கூர்ந்து தலைமை உரையை நிறைவு செய்தார்.
அடுத்து கருத்துரை வழங்கிய தோழர் ஜி.ரமேஷ், தீப்பொறியின் ஆசிரியர் அவர்கள் மாலெ பத்திரிக்கை 40 ஆண்டுகளாக இருந்ததற்கான அடிப்படை காரணமாக மக்களின் மனங்களில் தங்கி இருந்ததே என்பதை சுட்டிக்காட்டி பேசினார்.
தோழர் பிரதீப் (நியூ டெமாக்ரசி ஆசிரியர் குழு) பிரான்ஸ் நாட்டின் பாலஸ்தீன போராளி ஜார்ஜ் இப்ராஹிம் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது உரையை தொடங்கினார். கூட்டத்தின் பங்கேற்பார்களையும் போராட்ட வாழ்த்துகளை தெரிவிக்க செய்தார். பொய் பிரச்சாரங்கள் மலிந்து உள்ள நிலையில் இணைய பத்திரிக்கைகளின் சூழலை புரிந்து கொண்டு உழைக்கும் மக்களுக்கான அரசியலை பத்திரிக்கையின் வாயிலாக செயலாற்ற வேண்டியது குறித்து பேசினார். 95% சதவீதம் அமைப்பு சாரா தொழிலாளர்களை கொண்டுள்ள இந்தியாவில் அவர்களின் வாழ்வை பிரதிபலிக்காத அம்பானிக்கு, அதானிக்குமான அரசாக மோடியின் அரசு உள்ளதையும், நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதை பார்த்துக்கொண்டுள்ளனர். மற்றொரு புறம் இந்திய உழைக்கும் மக்கள் போராடிக்கொண்டும் உள்ளனர். உலகம் அறிந்த இந்திய விவசாயிகளின் கார்ப்பரேட் எதிர்ப்பு போராட்டம் இருந்ததையும் சுட்டிக்காட்டினார்.

பண்பாட்டு அரங்கில் எந்த வகையிலான படங்கள் வெளிவர வேண்டும். வரவிடாமல் செய்யும் அதிகாரம் கொண்டதாக இந்துத்துவ அரசாங்கத்தை கொண்டுள்ளதை உபி ஆதித்தியநாத் அரசாங்கத்தை உதாரணமாக கூறி புதிய ஜனநாயகம் மக்களின் விடுதலைக்கான ஐக்கியத்தை பற்றிய அரசியலை கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தை பற்றி கூறி விடைபெற்றார். தோழர் தெலுங்கில் பேசியதை தலைமை தோழர் ம.சி.சுதேஷ் குமார் தமிழில் மொழிப்பெயர்த்து கூறினார்.

பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் அங்குசம் இதழின் பொறுப்பாசிரியர் இதழ் தொடர்ச்சியாக கொண்டு வருவதில் உள்ள சிரமங்களையும் அதே இதழை கொள்கை வழுவாமல் கொண்டு வரும் புதிய ஜனநாயகம் இதழின் கொள்கை அறிவுறுத்துதல் தன்மையுடன் கூடிய பற்றுடன் வெளியாவதன் தனித்துவதமானதாக உள்ளதும் விளம்பரம் இன்றி 40 ஆண்டுகால பத்திரிக்கை வெளிவரும் அதிசயத்தின் உழைப்பை பற்றியும் பேருந்து நிலையத்தில் தோழர்களின் பிரச்சாரம் முகவராக உள்ளதே 40 ஆண்டுகாலமாக தொழிலாளி வர்க்கத்தின் பிரதிநிதியாக பு.ஜவின் வெற்றியாக கூறியது முதலாளித்துவ பத்திரிக்கைகளின் தோல்வியுடன் ஒப்பிட்டு பார்க்கும் வகையில் பேசினார்.பு.ஜ வுடனான தனது தனியார் மயம் தாராளமய கொள்கைகளை எதிர்த்து மக்களிடம் கொண்டு சென்ற தனது சொந்த அனுபவத்தை பற்றி விரிவாக பேசினார்.

தோழர் கோவர்த்தன். தெலுங்கில் பிரஜா ராஜ்ஜியா என்ற மார்க்சிய லெனினிய பத்திரிக்கை எவ்வாறு புரட்சிகர அரசியலை நோக்கி மக்களை கொண்டுவந்தோ அதே போன்று புதிய ஜனநாயகம் பத்திரிக்கையும் உழைக்கும் மக்களை கொண்டுவந்துள்ளது என்பதனை தோழர் ஆட்டோ கணேசனின் நினைவுகள் மூலம் அறிந்து கொள்ளமுடிந்தது என்றார். முதலாளித்துவ பத்திரிக்கைகள் உழைப்பு சுரண்டலை பற்றி கூறுவதில்லை விவசாயிகள், கூலிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் பற்றிய வாழ்நிலையை புதிய ஜனநாயகம் போன்றே ரெய்சிங் நீயூ டெமாக்ரசி பத்திரிகையும் கூறி வருகிறது.தொடர்ந்து மக்களுக்கு இத்தகைய செய்திகளை கொண்டு செல்ல வேண்டும் என்ற உறுதி மொழியை இந்த 40 ஆண்டு அரங்கு கூட்டத்தில் ஏற்கிறேன். 11 ஆண்டு பாசிச பாஜக ஆர்எஸ்எஸ் ஆட்சி அதிகாரத்தை விட்டு விரட்ட வேண்டியதன் அவசியத்தை உணர வேண்டிய தருணமாக கருத வேண்டியது. ஒரே நாடு ஒரே தேசம் என்ற பாஜக ஆர்எஸ்எஸ் கருத்தாக்கத்தை ஏன் இந்திய மக்களுக்கு எதிரானது என்பதனை புதிய ஜனநாயகம் மற்றும் ரெய்சிங் நியூ டெமாக்ரசி பத்திரிக்கை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். தேசிய இனங்களை ஒடுக்குவது, இந்துத்துவ அரசியலை அமுல்படுத்துவது, பழங்குடி மக்கள் மீதான ஆபரேஷன் காகர் என்ற பெயரில் பழங்குடி மக்களையும் மாவோயிஸ்டு தோழர்களை கார்ப்பரேட்களின் நலன்களுக்காக கொன்று வருகிறது மோடி ஷா கும்பல் என்றும் அத்தகைய கொடிய ஒடுக்குமுறை செய்த பாசிஸ்டுகள் ஒழித்துக்கட்டப்படனர் என்று வரலாறு கூறுகிறது என்று நிறைவு செய்தார். தோழர் தெலுங்கில் பேசியதை தலைமை தோழர் ம.சி.சுதேஷ் குமார் தமிழில் மொழிப்பெயர்த்து கூறினார்.

இறுதியாக புஜதொமு செயலாளர் தோழர்.லோகநாதன் கருத்துரை வழங்கும் போது பத்திரிக்கை ஆசிரியராக இருந்ததை பற்றியும் தோழர்களின் அரசியல் வாழ்வில் பத்திரிக்கை எவ்வாறு இருந்தது என்பதை பற்றி பேசினார். படித்த வர்க்கத்தினர் இடையே புதிய ஜனநாயக இதழ் எவ்வாறு ஆட்கொண்டு உள்ளது என்பதை நடப்பு நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு பேசினார். விமர்சனங்களுக்கு அஞ்சும் போக்காளர்களால் புதிய ஜனநாயகம் பத்திரிக்கை மீதான தாக்குதல்களை பதில் கூறும் தன்மையற்ற பல்வேறு தரப்பினர் குறிப்பிட்டு பாட்டாளி வர்க்க அரசியலை கொண்டுசென்ற போக்குகளும் தற்போது உள்ள நிலை கவலைக்குரிய நிலையை பற்றியும் சுயவிமர்சனத்துடன் ஸ்மார்ட் போன்களை தடையாக உள்ளதை சுட்டி காட்டினார்.
படிக்க: நாற்பதாம் ஆண்டில் புதிய ஜனநாயகம்.
நிகழ்ச்சிக்கு இடையே மகஇக, புஜதொமு தோழர்கள் புரட்சிகர பாடல்களை பாடினர்.
புதிய ஜனநாயக இதழின் அட்டை படங்களை கொண்ட போஸ்டர்களை அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்தது.
நிறைவாக தோழர் நிர்மலா அவர்கள் புதிய ஜனநாயகம் இதழின் முகவராக நன்றியுரை ஆற்றினார்.






