மனிதம் மரிப்பதில்லை.ஆங்காங்கே அது காயப்படுவதுண்டு.ஆனால், மரித்துவிடுவதில்லை.
அப்படி மரித்து விடுமென்றால் அந்திச்சூரியனோடு சரஸமாடும் இந்த கடலும் அந்த சூரியனும் அழிந்து போகட்டும்

2000-ம் ஆண்டில் எழுதப்பட்ட எனது சிறுகதையின் முடிவு இவ்வாறே எழுதப்பட்டிருந்தது.

ஹபாயா இஸ்லாமிய பெண்மணிகளின் அடிமை சாசனம் என்று புலம்பும் பெண்ணியவாதிகள்.

அதே ஆடையை கலாசாரத்தின் தீவிரவாதமாகவும் அடிக்கோடிடுகின்றனர்.

அரைகுறையுடன் பாதைகளில், விளம்பரங்களில், திரைமொழியில் காட்சிப்படுத்துகையில், அது கலாச்சாரத்தின் வன்முறையாக..பண்பாட்டின் தீவிரவாதமாக கருதி ஒன்றுபட இயலாதவர்கள்

சிறுவர் சிறுமியர் பெண்கள் வற்புணர்வுக்கு உள்ளாகும்போது, கூட்டம் சேர்த்து நியாயம் பெறமுடியாத சமூக போராளிகள்

ஒழுக்கம்பேணி, உடலை அண்ணிய கண்களின் ஊடுருவலின் பாதுகாப்பாக போர்த்திய ஆடைக்கெதிராக..

கல்விக்கூடங்களில் அணித்திரள்கின்றன

ஊடாக சந்திப்பில் ஊளையிடுகின்றனர்

வளரும் பயிரில் விஷம் விதைக்கின்றனர்
சகோதரத்துவம் இன ஜக்கியத்திற்கும் வேட்டு வைக்கின்றனர்

இவ்வாறெல்லாம் பிரளயம் உருவாக்கி..எதனை பெறுவதற்கு..எதனை கண்டடைவதற்கு..எதனை மரணத்தின் பின் கொண்டுபோக முயற்சிக்கின்றனர்.

மனங்களை சிதைத்து
உறவுகளிடையே பதற்றத்தையும்
நாட்டில் குழப்பத்தையும்
சமூகங்களிடையே வேற்றுமையையும்
சகோதரத்துவத்தில் நஞ்சு கலக்கும்
இந்த சமூக பீடைகளால்..

மனிதம் ஆங்காங்கே காயப்படுகிறது.
ஆனால், துவண்டு விடவில்லை
அதை உயிர்பிக்கும் ஆத்மாக்கள் ஒவ்வொரு சமூகம் ஒவ்வொரு மானிடத்திலிருமிருந்து புது வெள்ளமாக பீறிட்டு..காயப்பட்ட மானிடத்தை ஆற்றுப்படுத்துகிறது.

மனிதம் மரணிக்கவில்லை
அது
உயிராடிக்கொண்டிருக்கிறது.

உங்களில்
எங்களில்…

நன்றி

உக்வெல் அக்ரம்.
முகநூல் பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here