
அடங்காப் பிடாரித்தனமான ஆடுகாலி – கூத்தாடி விஜய்யின் ஆணவச் செருக்கால் கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் இதுவரை 41 பேர் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இது தொடர்பாக கொலையாளிகளில் விஜய் சென்னைக்கு தப்பித்து ஓட, புஸ்ஸி ஆனந்த் உட்பட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் தலைமறைவாகி
விட்டனர். இத்தகுசூழலில், தமிழ்நாட்டின் திமுக அரசு அதன் தலைவர் மு.க.ஸ்டாலின்,
சம்பவம் நடந்த அன்று இரவே புறப்பட்டு மறுநாள் 28-ல் காலை 3 மணிக்கெல்லாம் கரூர் வந்தடைந்து மரணித்தோர் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து உறவுகளிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார். மருத்துவமனைகளில் சிகிச்சை பெருவோரிடமும் ஆறுதல் கூறி தைரியமூட்டி, சிறந்த சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார். அமைச்சர்கள் அதிகாரிகள் மருத்துவர்கள் அனைவரையும் முடுக்கிவிட்டு களப்பணி ஆற்றிட உத்தரவிட்டார்.
அத்துடன் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார். அருணா ஜெகதீசன் தனது விசாரணையை உடனே துவங்கி விட்டார். இறந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், காயமுற்றோருக்குத் தலா ரூ.1 லட்சமும் அறிவித்தார் முதல்வர்.
அத்தொகையும்
சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதுவன்னியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒருவர் தலைமையில் தனியே ஒரு விசாரணைப் படையும் அமைக்கப்பட்டு அதுவும் தனது பணியைத் துவங்கிவிட்டது.
காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளிகளாகப் பதியப்பட்டு தலைமறைவாய் இருந்த பலரில் கரூர் தவெக மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் தலைமறைவாகிருந்த நிலையில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசாரால் நேற்றே கைது செய்யப்பட்டார். மற்றும் மாநகர் மாவட்ட தவெக செயலாளர் புவராஜ்ஜும் இன்று போலீஸாரால் கண்டுபிடிக்கப் பட்டு கைதாகி உள்ளார். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூன், நிர்மல் குமார், அருண் குமார் போன்றோரெல்லாம் தலைமறைவாகி இருப்பதால், காவல்துறை அவர்களைத் தேடுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆதவ் அர்ஜூன், வழக்கை CBI -க்கு மாற்ற கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் போன்றோரெல்லாம் அரசின் மீது பழியைப் போட்டு இவர்கள் கெட்டிக்காரர்கள் போல முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தினை நாடி இருக்கிறார்கள்.
இதில் நமக்குள்ள பெரும் குறை இந்த குற்றப்பட்டியலில் முதல் இடம் பிடிக்க வேண்டியவர் விஜய் தான். அப்படியே அவரை முதல் தகவல் அறிக்கையில் முதல் இடத்தில் இடம்பெறச் செய்யாமல் விட்டது அரசாங்கம் மற்றும் காவல் துறையின் பாரியக் குறைபாடாகும். அவரை கரூரை விட்டே தப்பிச் செல்ல அனுமதித்திருக்கக் கூடாது. இப்போதும் குடி முழுகிப் போய் விடவில்லை; அவரையும் முதல் தகவல் அறிக்கையில் ஏற்றி கைது பட்டியலுக்கு கொண்டு வந்து கைது செய்ய வேண்டும். அதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறது. முன்னுதாரணமாக
தெலுங்கானா நடிகர் லல்லு அர்ஜுன் கைது நடவடிக்கை சாட்சியமாக உள்ளது.
இருப்பினும் திமுகவை பெருமளவில் பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தி சாடுவதை மட்டுமே பிரதான பிரச்சாரமாக மேற்கொண்டு இருந்தவர் இந்த கூத்தாடி விஜய்தான் என்ற போதிலும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு ஒரு மாநில அரசு இந்தக் கட்டமைப்பிற்குள் சட்டப்படி எதைச் செய்ய வேண்டுமோ அதனை சரியாகவே செய்துள்ளது. நாம் சுட்டிக் காட்டும் மேற்கண்ட சில குறைபாடுகளை தவிர.
பாஜக-வின் ‘உண்மை அறியும் குழு’வின் சதித் திட்டம் என்ன?
கரூரில் தவெக கூட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள் யாவற்றையும் மக்கள், தொலைக் காட்சிகள், இணையதளங்கள், அச்சு ஊடகங்கள், நேரில் கண்டோர் அளித்த பேட்டிகள் அனைத்திலிருந்தும், யார் யார் குற்றவாளிகள் என்பதனை அனைவருமே தெளிவாகப் புரிந்து கொள்ள வைத்திருக்கிறது.
நினைத்துப் பார்க்க முடியாத அளவில் தினமணி, தமிழ் இந்து, ஆங்கில இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் இதுபோன்ற எண்ணற்ற அச்சு ஊடகங்கள்கூட விருப்பு வெறுப்புகளைக் கடந்து (கடந்த காலங்களில் விஜய்யை இந்த பத்திரிகைகள் இருமாந்து தூக்கிப் பிடித்து செய்திகளை பரப்பி வந்திருந்துங் கூட) தமது தலையங்கங்களை அற்புதமான முறையில் உண்மையை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கின்றன.
கரூர் சம்பவத்திற்கு முழு முதற் குற்றவாளிகள் விஜய் தலைமையி
லான தவெக-வினரே
என்பதை.
இவ்வளவுக்குப் பிறகும், தேசிய பாஜக தலைவர் ஜே.பி. நட்டா கரூர் சம்பவத்தில் ‘உண்மை அறியும் குழு’ ஒன்றை அமைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் நடிகையும் இந்நாள் பாஜக எம்.பி. யுமான ஹேமமாலினி தலைமையில், NDA கூட்டணியில் அங்கம் வகிக்கும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுராக் தாகூர்,
தேஜஸ்வி சூர்யா, பிரிஸ்லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே, அபராஜிதா சாரங்கி, ரேகா சர்மா, புட்டா மகேஷ் குமார் – என 8 பேர் கொண்ட குழுவை கரூருக்கு அனுப்பி உண்மை அறியப் போகிறார்களாம். மெத்த மகிழ்ச்சி. ஆனால் நட்டாவும் பாஜகவும் அவர்களின் ஊது குழல்களும் சிலவற்றை அசைபோடுதல் நன்று.
- 2025 ஜனவரியில் கும்பமேளா நிகழ்வு நிகழ்ச்சி நெரிசலில் 37 பேர்தான் இறந்தனர் என்றது பாஜக. ஆனால் BBC உண்மையை உடைத்துப் போட்டது. பாஜக அரசாங்கம் 37 குடும்பங்களுக்கு நேரடியாக இழப்பீடு வழங்கிவிட்டு, 44 குடும்பங்களுக்கு சீருடை அணியாத போலீஸ் மூலம் இழப்பீடு வழங்கியது எப்படி என்பதை தோலுரித்தது.
ஆனால் அவ்வளவு பெரிய உயிரிழப்புக்கள் எல்லாம் நடைபெறவில்லை; மிகைப்படுத்துகிறார்கள்-என ஓலமிட்டவர் தான் கரூர் சம்பவத்தின் உண்மை அறியும் குழுவின் ‘தலைவி’ ஹேமமாலினி எம்.பி. உருப்பட்ட மாதிரி தான். - கோவிட் காலத்தில் இந்தியாவில் கோவிட் மரணங்கள் சுமார் 4.7 லட்சம் என்பது டிமோ அரசின் அதிகாரப்பூர்வ கணக்கு. ஆனால் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ‘லான்சென்ட்’ என்கிற மருத்துவ ஆய்வு இதழ் கூடுதலாக 20 முதல் 30 லட்சம் வரை கோவிட்டில் இந்தியர்கள் இறந்திருப்பார்கள் என மதிப்பீட்டை உறுதிப்படுத்தியது. உடனே ‘டிமோ பக்தர்கள் ‘ இது ‘சர்வதேசிய சதி’ என்று ஓங்காரமாய் ஊளையிட்டது.
- உத்திரப் பிரதேசத்தில் நாள்தோறும் நடந்து வரும் எண்ணற்ற களேபரங்களுக்கும்-கொலைபாதகச் செயல்களுக்கும்
பாஜக தவிர்த்து எந்தக் கட்சி உண்மை அறியும் குழுவை நியமிப்பது? - காஷ்மீரில் தொடர்ந்து நடைபெறும் பல்வேறு விதமான அடக்குமுறைகள் துப்பாக்கி சூடுகளுக்கு எந்த கட்சியை வைத்து உண்மையறியும் குழு அமைப்பது?
- மணிப்பூர் கலவரம், கொலைகள், கோவில்கள், ஆலயங்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்
பட்டது, இளம் பெண்களை நிர்வாண ஊர்வலம் விட்டது, பாலியல் வன்கொடுமைகளை அரங்கேற்றியது, எண்ணற்ற துப்பாக்கிச் சூடுகளை நடத்தியது… இவற்றுக்கெல்லாம் எந்தக் கட்சியின் உண்மை அறியும் குழுவைக் கொண்டு விசாரணை மேற்கொள்வது? - சுயாட்சி உரிமைக்காக அமைதியான வழியில் அண்மையில் உண்ணாவிரதம் இருந்த லடாக் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது, கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டது – தொடர்பாக எந்த கட்சியை வைத்து ‘உண்மை அறியும் குழு’வை நியமித்து உண்மையைத் தேடுவது?
இப்படி பாஜக ஆளும் அரியானா, ம.பி., குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர் உள்ளிட்ட பல பாஜக ஆளும் மாநிலங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் இதுபோன்ற எண்ணற்ற கொடுமைகள் ஆளும் அரசாங்கங்களாலேயே இழிவாக நிறைவேறுகின்றபொழுதெல்லாம் எந்த ஒரு உண்மை அறியும் குழுவையும் நியமிக்க முன்வரவில்லை பாஜக.
படிக்க:
♦ சதிக் கோட்பாடுகள் எவ்வாறு மக்களின் நம்பிக்கையை பெறுகின்றன?
♦ கரூர் படுகொலை: தவெக தலைவர் விஜயை ‘Victim’ஆக சித்தரிப்பது அயோக்கியத்தனம்!
ஆனால் தமிழ்நாட்டில்,
தறிகெட்ட ஒரு சீரழிவு கலாச்சாரவாதி, நடிகன் விஜய்யின் தன்னகங்காரப் போக்கினால், அவனது கேடுகெட்ட கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்ட தவெக ரசிகர்கள் கூட்டத்தால், எந்த விதிமுறைகளுக்கும் கட்டுப்படாத, குறித்த நேரத்தில் கூட்டத்தை தொடங்காமல் 4 மணி நேரம் முதல் 7 மணி நேரம் வரை தாமதமாக வந்து, மக்களை பத்து மணி நேரம் வரைக் காத்திருக்கச் செய்து தனது கெத்தை காட்டுவது; குடிக்கத் தண்ணீரின்றி,
உண்ண உணவு இன்றி, சிறுநீர் கழிக்க வழியின்றி துயருற்று மயங்கிக் கிடந்த மக்கள் ஒரு புறம்; மரங்களிலும், மின் கம்பங்களிலும், கிடுகுக் கொட்டைகள் மீதும், தகரக் கொட்டைகள் மீதும், அடுத்தோர் கட்டிடங்கள் மீதும், தண்ணீர் தொட்டிகள் மீதும், கடைகள் மீதும், வானரங்கள் போல் எதற்கும் கட்டுப்படாத ரசிகர்கள் ஏறி நின்று மரங்கள் ஒடிந்து விழுந்து, தகரக் கொட்டைகள் சரிந்து விழுந்து, கழிவுநீர் கால்வாய்கள் மீது மூடப்பட்டிருந்த ஸ்லாப்புகள் எல்லாம் தகர்ந்து விழுந்து, கடும் இடிபாடுகளில் சிக்கியே இப்படி 41 பேர் மாண்டு போயினர். இன்னும் எண்ணிலடங்கா விடயங்கள் வெளிக்கொணர வேண்டி உள்ளது.
அவற்றை பிரிதொரு நேரத்தில் பட்டியலிடுவோம்.
நீதிமன்றத்தின், காவல்துறையின் நிபந்தனைகளுக்கு இவர்கள் என்றுமே கட்டுப்படுவதே இல்லை. அவர்கள் காவல்துறைக்கு எழுதிக் கொடுத்த விண்ணப்பங்கள் சாட்சியமாக உள்ளன. சிசிடிவி கேமராக்கள் சாட்சியங்களாக உள்ளன. தொலைக்காட்சி
கள், வீடியோக்கள், youtube சேனல்கள், அச்சு ஊடகங்கள் வெளியிட்ட அனைத்தும் சாட்சியங்களாக உள்ளன.
இவ்வளவு இருந்தும் முந்நாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் கமிஷனும்,
காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு விசாரணை படையும் ஒழுங்கு முறையாக விசாரணைகளை துரிதப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இத்தகு சூழலில் கலவரத்திற்கென்றே பெயர் போன – சாதி மதவெறிகள் மூலமாக கொலைபாதகச் செயல்களில் ஈடுபடுவதற்கென்றே பெயர் போன பாஜக கரூர் சம்பவத்திற்கு ஹேமமாலினி தலைமையில்
உண்மை அறியும் குழு அமைத்து அனுப்புவது என்பது இந்தத் துயர காலகட்டத்திலும் கூட, 2025-ம் ஆண்டின் ஆகப்பெரும் ‘ஜோக்’ என்பதை பாமரரும் அறியக்கூடும்.
RN. ரவியின் ஊளக் குசும்பு!
கோரச் சம்பவம் நடந்து தமிழ்நாடே கண்ணீரில் மூழ்கிக் கிடக்கிறது.
இதற்கு யார் காரணம் என வெட்ட வெளிச்சமாக அறிவு படைத்தோர் மட்டுமின்றி சாதாரண படிப்பறிவில்லா பாமர ஏழைத் தாய்மார்களும் கூட அனைவரும் உண்மையை உணர்வர்.
இத்தருணத்தில் ஆளுநர் RN. ரவி
நிகழ்விடத்திற்கே ஓடோடி வந்து பார்வையிட்டிருக்க வேண்டும்.
இறந்தோர்க்கு ஆறுதல் சொல்லியிருக்க வேண்டும். மருத்துவமனையில் உள்ளோருக்கு தீவிர சிகிச்சை அளிக்க ‘அவருக்கே உரிய பாணியிலாவது’
வழிகாட்டி இருக்க வேண்டும். அதை விடுத்து 150 ஏக்கர் பரப்பளவில் அமையப்பட்டுள்ள மாளிகையில் சொகுசாக அமர்ந்து கொண்டு கரூர் சம்பவத்திற்கு முதலமைச்சரிடம் விளக்கம் கோருகிறார். குறிப்பிட்ட சம்பவத்திற்கு விசாரணை கமிஷன் அமைக்கப்பெற்று இரு துருவங்களில் விசாரணை மேற்கொண்டு இருக்கின்ற பொழுது, அவர் ஆளுநராகவே இருந்தாலும் இத்தருணத்தில் அறிக்கை கோருவதும், முதல்வர் வெளிப்படையாக அறிக்கை கொடுக்க விரும்பினாலும் அவை அறிவிற்குப் பொருத்தமற்ற செயலாகும்.
மேலே, யாம் பட்டியலிட்டுள்ள அனைத்தையும் தனியே விடுங்கள். அண்மையில் நடந்த லடாக் துப்பாக்கி சூடு, கட்டிடங்கள் எரிக்கப்பட்டது குறித்து ஜனாதிபதி, பிரதமரிடம் விளக்கம் கோருவாரா? அல்லது ஜனாதிபதியிடம் ஆர்.என். ரவி
அவ்வாறு விளக்கம் கோர வேண்டும் என மனிதநேயத்தின் அடிப்படையிலோ சட்ட ரீதியிலோ பரிந்துரைக்க முன்வருவாரா?
காவிக் கூட்டத்தின் கூட்டுச் சதி ஆலோசனை தான் என்ன?
தமிழ்நாட்டில் குட்டிக்கர்ணம் போட்டுப் பார்த்தாலும் பாஜக தடம் பதிக்க முடியவில்லை. இது பெரியார் வகைப்பட்ட பூமியாதலால் பல்வேறு சூழ்ச்சிகள், பொய்ப் புனைச்சுருட்டுகள், மோசடிகள், தில்லுமுல்லுகள் செய்து பார்த்தும், கட்சித் தலைமைகளை அடிக்கடி மாற்றி பார்த்தும் எதிலும் முண்டியடித்து முன்னேற முடியவில்லை.
எனவே, தாம் உருவாக்கிய B Team-ன் ‘தளபதி’ சீரழிவுக் கலாச்சாரவாதி நடிகன் விஜய்யை காப்பாற்றும் நோக்கில், தமிழ்நாடு அரசு மீது குற்றம் சுமத்தி அந்த அரசுக்கு கேடு விளைவிக்கும் நோக்கில் இவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு இருக்கிறார்கள் என்பது வெள்ளிடை மலையளவு உண்மை.
எனவே,
வடநாட்டில் நடந்த அனைத்து கொடுமைகளுக்கும் ‘உண்மை அறியும் குழு’-வை முதலில் அமைத்திடு காவிக் கூட்டமே என முழங்குவோம்!
‘சிறந்த முன்னுதாரணத்தை’ பாஜகவே உருவாக்கி விட்டதால் இனி பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கும் அனைத்துவித அசம்பாவிதங்களுக்கும், இந்தியா கூட்டணி உட்பட எதிர்க்கட்சிகள், இன்ன பிற ஜனநாயக புரட்சிகர இயக்கங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து ‘உண்மை அறியும் குழு’க்களை ஏற்படுத்தி உண்மையை வெளிக்கொணர்வோம்! குற்றவாளிகளை கூண்டில் ஏற்றி தண்டனை பெறச் செய்வோம்!
ஆனால்,
இத்தருணத்தில்,
பாஜகவின் ஹேமமாலினி தலைமையிலான போலித்தனமான ‘உண்மை அறியும் குழு’ தமிழ்நாட்டில் நுழையும் பொழுது தமிழ்நாட்டின் அனைத்து பாஜக எதிர்ப்பு சக்திகளும், தமிழ்நாட்டு மக்களும் ஒன்று திரண்டு தமிழ்நாட்டு பாரம்பரியத்தை காக்கும் வகையில் கருப்புக் கொடி காட்டி ஓட ஓட விரட்டியடிப்போம!
வாருங்கள் களம் இறங்குவோம்!
- எழில்மாறன்
சினிமா கூத்தாடியை காப்பாற்ற இன்னொரு சினிமா கூத்தாடி, குழந்தையை இழந்த சொல்லி அழ முடியாத தாய், உறவினர்களை இழந்தவர்களின் அழுகுறளை கேட்டால் ,நெஞ்சம் பதறுகிறது, மணிப்பூர், குஜராத்தில், உத்திரபிரதேசமும் , காஷ்மீரும் இவர்களின் பாசிச முகத்தை தோழுறிக்கிறது.
சினிமா கூத்தாடியை காப்பாற்ற இன்னொரு சினிமா கூத்தாடி, குழந்தையை இழந்த சொல்லி அழ முடியாத தாய், உறவினர்களை இழந்தவர்களின் அழுகுறளை கேட்டால் ,நெஞ்சம் பதறுகிறது, மணிப்பூர், குஜராத்தில், உத்திரபிரதேசமும் , காஷ்மீரும் இவர்களின் பாசிச முகத்தை தோழுறிக்கிறது.
சினிமா கூத்தாடியை காப்பாற்ற இன்னொரு சினிமா கூத்தாடி, குழந்தையை இழந்த சொல்லி அழ முடியாத தாய், உறவினர்களை இழந்தவர்களின் அழுகுறளை கேட்டால் ,நெஞ்சம் பதறுகிறது, மணிப்பூர், குஜராத்தில், உத்திரபிரதேசமும் , காஷ்மீரும் இவர்களின் பாசிச முகத்தை தோழுறிக்கிறது.