டாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், அதேபோல் அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி லடாக்கில் கடந்த 10-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. உண்ணாவிரதம் இருந்த 2 பேர் செவ்வாய் கிழமை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இது பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது, அதைத் தொடர்ந்து புதன்கிழமை லடாக்கில் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் கொண்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

லடாக் உலகின் மிக உயரமான சில மலைத்தொடர்களுக்கு இடையில் அமைந்துள்ளது. குறிப்பாக, வடக்கே கரகோரம் மலைத்தொடரும், தெற்கே இமயமலைத் தொடரும், நடுவில் ஜான்ஸ்கர் மற்றும் லடாக் மலைத்தொடர்களும் உள்ளன. இதன் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 3,000 மீட்டருக்கும் (9,800 அடி) அதிகமாகும். இது ஒரு குளிர் பாலைவனப் பகுதியாகும். அதாவது, மிகக் குறைந்த மழைப்பொழிவும், மிகக் கடுமையான குளிர்காலமும், வறண்ட கோடைகாலமும் கொண்டது.

அதற்கேற்ப அதன் பொருளாதாரமும் அமைந்துள்ளது. லடாக்கின் பொருளாதாரம் பெரும்பாலும் சுற்றுலாவைச் சார்ந்துள்ளது. கலாச்சார சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா இங்கு பிரபலமாக உள்ளது. மேலும் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பும் முக்கிய தொழிலாக உள்ளது. பார்லி (Barley), கோதுமை (Wheat) போன்ற குளிர்-தாங்கும் பயிர்கள் பயிரிடப்படுகின்றன. யாக் (Yak), செம்மறி ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. உலகப் புகழ்பெற்ற பஷ்மினா கம்பளி ஆடுகளும் இங்கு வளர்க்கப்படுகின்றன.

இந்தியாவின் நிலப்பரப்பில் முக்கியத்துவம் வாய்ந்த எல்லை பகுதியாக லடாக் பார்க்கப்படுகிறது. சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளை ஒட்டியுள்ளதால், லடாக் ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இந்திய ராணுவத்தின் குறிப்பிடத்தக்க இரானுவ துருப்புகள் இங்கு உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்தது. இதில் லடாக் யூனியன் பிரதேசமாக தொடரும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின் கடந்த 2019 மக்களவைத் தேர்தல் அறிக்கை மற்றும் 2020 ஆம் ஆண்டு லடாக் பகுதிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.

பாஜக அலுவலகம் பற்றி எரிகிறது!  லடாக்கில் நடப்பது என்ன?

கொடுத்த வாக்குறுதி நிறைவேற்ற மறுப்பதால் லடாக் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதனால்தான் உண்ணாவிரத போராட்டத்தை கையில் எடுத்தனர். பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் மாநில அந்தஸ்து கோரி எட்டு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார். மாநில அந்தஸ்துடன் ஆறாவது அட்டவணை அந்தஸ்தும் வழங்க வேண்டும் என்பதே கோரிக்கையாக இருக்கிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஆறாவது அட்டவணை சில மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி உள்ளது. குறிப்பாக அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதிகளில் சுயாட்சியை இந்த அட்டவணை வழங்குகிறது.

இதேபோன்று லடாக்கிற்கும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என சோனம் வாங்சுக் வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் லடாக்கின் தனித்துவமான பழங்குடி கலாச்சாரம், சுற்றுச்சூழல், நிலம் மற்றும் வேலை வாய்ப்பு மீது உள்ளூர் மக்களின் பங்களிப்பை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இது குறித்து மேலும் பேசிய அவர், இது இந்தியாவிலிருந்து பிரிந்து செல்லும் கோரிக்கை அல்ல. இந்திய ஒன்றியத்திற்குள் அதிக சுயாட்சியையும் பாதுகாப்பையும் கூறும் முயற்சி என்று விளக்கம் அளித்துள்ளார்.

லடாக் மக்களின் அச்சம் என்னவென்றால் லடாக்கின் சிறப்பான சூழல்கள் அழிக்கப்பட்டு அங்கு பெரிய அளவில் தொழில்துறை மற்றும் சூரிய மின்சக்தி திட்டங்கள் திணிக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. இவர்கள் அச்சத்தில் உண்மையும் உள்ளது. ஒன்றிய பாசிச மோடி அரசு தனது கார்ப்பரேட் அடிவருடி கொள்கையினால் லடாக்கின் சிறப்பான சூழ்நிலைகளை அழித்துவிட்டு கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்து விடலாம். காஷ்மீரில் அப்படியான நிலைமை ஏற்பட்டுள்ளது.

காஷ்மீரில், Saifco‑வை (சிமெண்ட் நிறுவனம்) ₹290 கோடியாக மதிப்பிட்டு, JK Cement ₹174 கோடி கட்டுமானத்தில் 60% பங்குகளை பெற்றுள்ளது. காஷ்மீர் புல்வாமா பகுதியில் ப்ரொஃபைல் ஷீட் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கபட்ட இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் தொழில்துறை கொள்கையின் மூலம் புதிய முதலீடுகளில் ரூ.11,000 கோடி காஷ்மீருக்கும், ரூ.12,000 கோடி ஜம்மு பிராந்தியத்திற்கும் செல்லும் என்று ஜம்மு காஷ்மீர் நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்தன. மேற்கண்டவற்றை பார்க்கும் போது காஷ்மீரில் ஏற்கனவே கார்ப்பரேட் நலத் திட்டங்கள் தொடங்கிவிட்டன.

படிக்க: 

காஷ்மீர் விவசாயத்தை நாசமாக்கிய இயற்கை பேரழிவு! கண்டுகொள்ளாத பாஜக அரசு!

 காஷ்மீர்: காங்கிரஸ் கூட்டணி வெற்றி! ஆனால் அதிகாரம் ஆளுநரிடம்!

ஏற்கனவே மின்சாரத் துறையில், லே மற்றும் கார்கில் மாவட்டங்களுக்கு மின்சார விநியோக மேம்படுத்தலுக்கு Ramky Infrastructure Limited என்ற தனியார் நிறுவனம் PowerGrid சார்ந்த அமைப்பிலிருந்து ₹131.19 கோடி ஒப்பந்தங்களை பெற்றுள்ளது. “Solar Energy Corporation of India (SECI)” மூலம் Taru, Leh இல் 25 MW சோலார் + 40 MWh பேட்டரி ஸ்டோரேஜ் திட்டமும் 13 GW ஐக்கூடிய பின்வர் (hybrid) obnovable ஆற்றல் பூங்கா திட்டங்கள் (solar + காற்று + பேட்டரி) திட்டமிடப்பட்டுள்ளன. இத்திட்டங்களில் EPC (Engineering, Procurement, Construction) பங்கு வகிக்கும் தனியார் நிறுவனங்கள் முதலீடு என்று செய்திகள் உள்ளன — உதாரணமாக Prozeal Green Energy Private Limited என்ற நிறுவனம் Taru திட்டத்தின் EPC ஒப்பந்தம் பெற்றுள்ளது.

இதன் காரணமாக தான் லடாக் மக்கள் அச்சம் கொள்கின்றனர். பாசிச மோடி அரசு லடாக் மக்களின் கோரிக்கைகளுக்கு உறுதியாக மறுப்பும் தெரிவித்துள்ளது. மோடியின் சகபாடி அமித்ஷா, லடாக் இந்திய பிரதிநிதிகள் குழுவுடன் பேசுகையில்  “பிரதமர் கேட்டாலும் நான் உங்கள் கோரிக்கைகளை ஏற்க மாட்டேன்” என்று கூறியதாக பல ஊடகங்கள் தெரிவிக்கின்றன. லடாக் தலைவர்கள் முன்வைத்த நான்கு அம்ச கோரிக்கைகள் குறித்த இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லாததால் பாசிச பாஜக மீது மக்கள் ஆத்திரம் கொள்ள தொடங்கியுள்ளனர்.

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என இந்துத்துவ பாசிசத்தை அமல்படுத்தி வரும் பாசிச பாஜக லடாக்கின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை அழித்துவிட்டு ஒற்றை கலாச்சாரத்தை  திணிப்பதற்கு முனையலாம். அதனால்தான்  தீவிரமான போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள். லேவின் சில பகுதிகளில் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் கடுமையான கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி பதிலடி கொடுத்தனர்.  அதே நேரத்தில் ஒரு போலீஸ் வேனும் தீக்கிரையாக்கப்பட்டது,

லேவில் உள்ள பாஜகவின் மூன்று மாடி தலைமையகத்திலிருந்து ஒரு இளைஞர் பாஜகவின் கொடியை அகற்றி தரையில் வீசுவதைக் காட்டுகிறது. இருப்பினும், தேசியக் கொடியையும் தொடாமல் விட்டுச் செல்வதை வீடியோ காட்டுகிறது.

பாஜகவின் அலுவலகம் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. இதுவரை போராட்டமே நடக்காத பகுதியாக பார்க்கப்பட்ட லடாக் இன்று காவிகளின் துரோகச் செயலால் பற்றி எரிகிறது. காவிப் பாசிச கும்பல் கார்ப்பரேட் நலனுக்காகவும், தங்கள் இந்துராஷ்டிர திட்டத்திற்காகவும் தேசிய இனங்களின் கலாச்சாரம், பண்பாட்டை அழித்துவிட்டு ஒற்றை தேசியத்தை நிறுவ துடிக்கிறது. இதை அனுமதிக்காமல் போராடுபவர்களுக்கு துணை நிற்போம்.

  • சுவாதி

1 COMMENT

  1. காஷ்மீரை பலவந்தமாக இந்தியாவுடன் இணைந்ததோடு மட்டுமல்லாமல், அதற்கான சிறப்பு அந்தஸ்தான பிரிவு 370-ஐயும் ரத்து செய்து, அதன் பின்பு காஷ்மீரை இரண்டாக உடைத்து (லடாக் ஜம்மு பகுதி என) யூனியன் பிரதேசமாக அறிவித்தது அமித்ஷா மோடி கும்பல். அமைதியை நிலைநாட்டி விட்டதாக
    ஓங்காரக் கூச்சல் போட்டது. இன்றோ லடாக் பகுதியில் மாநில அந்தஸ்து கோரி மக்கள் வெள்ளத்தால் போராட்டம் தீப்பற்றி எரிகிறது. லடாக்ப் பகுதியில் உள்ள பாஜக-
    வின் தலைமை அலுவலகம் போராளிகளால் தீப்பற்றி எரிகிறது. சங் பரிவாரக் கூட்டம் நாடு முழுமைக்கும் செய்கின்ற மக்கள் விரோத அட்டூழியங்களுக்கு, காஷ்மீர் லடாக் மக்கள்
    சரியான பாடம் புகட்டத் துவங்கி விட்டார்கள்.
    லடாக்கில் பற்றி எரியும் ‘தீ’ இந்திய நாடு முழுமைக்கும் பற்றி எரியட்டும் என்பதனை தூண்டும் வகையில் கட்டுரை அமைந்துள்ளது. கட்டுரையாளருக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here