
அரசு வெளியிட்ட புத்தகத்தில் தீபத்தூணுக்கான ஆதாரம் என்று தலைப்பிட்டு ஒரு வீடியோவை தினமலர் டிசம்பர் 12ஆம் தேதி அன்று வெளியிட்டுள்ளது. அந்த செய்தி அதன் ஏட்டிலும் வந்துள்ளது.
தினமலரின் வீடியோவில் தீபத்தூண் எப்படி உள்ளது? அதில் என்ன உருவங்கள் பொரிக்கப்பட்டுள்ளன? அதில் கல்வெட்டுகள் உள்ளனவா? அது எந்த நூற்றாண்டை, எந்த மன்னர் காலத்தை சார்ந்தது? அது கோயிலுக்கு எந்த திசையில் எந்த நேர்கோட்டில் அமைந்துள்ளது? என்றெல்லாம் அரசு தனது நூலில் தந்துள்ள புள்ளி விவரங்களை அப்படியே விவரிக்கிறது, தினமலம்.
நூலில் உள்ளதை உள்ளபடி தானே தினமலர் விளக்கிச் செல்கிறது. பின்னர் அந்த பத்திரிக்கையின் மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சியும், மலம் என்று இழிவுபடுத்தலும் ஏன் என்று வாசகர்களுக்கு தோணக் கூடும்.
வீடியோவின் பேச்சில் விஷம் இல்லை. ஆனால், அதை காட்சிப்படுத்தியுள்ள படத்தில் தான் தினமலர் தினமலமா என்பது உள்ளடங்கியுள்ளது. அதாவது விளக்கம் அனைத்தும் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகில் உள்ள தீபத்தூணை பற்றியதாக இருக்கிறது.
ஆனால் காணொளியில் தினமலர் காட்டும் படமோ தற்போது சங்கிகள் பிரச்சனை செய்து வரும் எல்லைக்கல்லாக உள்ளது. மிகவும் தரதிரமாக, அயோக்கியத்தனமாக எல்லைக்கல்லையே தீபத்தூண் என்று காட்டுகிறது. அதை அரசு தனது நூலில் தெளிவாக சொல்லி இருப்பதாகவும், அதுதான் ஆதாரம் என்பதாகவும் விளக்கி, எவ்வளவு கேடுகெட்ட பொய்யை தினமலர் உண்மை என்று நிறுவ துடிக்கிறது.
படிக்க:
♦ நரி வேட்டை: மனசாட்சி உள்ள ஒரு காவலன்!
♦ செப்டிக் டேங்க் தினமலர் அலுவலகத்தை மலத்தினால் அலங்கரிக்கச் செய்வோம்!
நாளேட்டிலும் அந்த நூலில் குறிப்பிட்டுள்ள “பாதிவழியில் தீபத்தூண் உள்ளது” என்ற உண்மையை மறைத்து தகிடுதித்த வேலையைச் செய்துள்ளது.
பாவம் தினம*ம் வாசகர்கள்|
தினமலரை யூட்யூப் சேனலில் பின் தொடர்பவர்கள், அல்லது பரப்பப்படும் இக்காணொளியை பார்ப்பவர்கள் இத்தகைய புரட்டுகளை உண்மை என்று நம்பினால், அதன் விளைவு என்னவாக இருக்கும்?
தினமலரின் உருட்டுகளை உண்மை என்று நம்பினால், தேவையே இல்லாமல் திமுக அரசு தான் தீபம் ஏற்ற விடாமல் பக்தர்களை தடுப்பதாக ரத்தம் கொதிக்கத்தான் செய்யும். எளிதாக சங்கிகளின் பிடிக்குள் அவர்கள் விழுவதும் நடக்கும். இத்தகைய ஒரு விளைவை எதிர்பார்த்து தான் தினமலர் துணிந்து பொய் பிரச்சாரத்தில் இறங்கி வருகிறது.
தேவை அரசின் நடவடிக்கை!
தினமலரை விட்டு வைப்பது மத நல்லிணக்கத்திற்கும் மதுரைக்கும் நல்லதில்லை.
மதுரையை அயோத்தியாக்குவோம் என்று கொக்கரிக்கும் எச் ராஜா வகையறாக்களுக்கு துணையாக கோடி மீடியாக்கள் களத்தில் நிற்கின்றன. அவதூறுகளையும் அள்ளி விடுகின்றன.
ஆதாரம் அற்ற உண்மைக்கு புறம்பான இத்தகைய பொய் செய்திகளை பரப்பும் ஊடகங்களின் மீது உரிய எதிர் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். இதை செய்ய தவறினால் சங்கிகள் தமிழகத்தை குஜராத்தாக மாற்றுவதை தடுக்க முடியாது.
தினமலரை அம்பலப்படுத்தி கழிப்பறை காகிதமாக மாற்றும் வேலையில் நாட்டுப் பற்றாளர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். செயல்படுவோம்.
- இளமாறன்







தோழர் இளமாறன் ‘தின மலம்’ இழிவான பத்திரிக்கையின் திருப்பரங்குன்றம் ‘தீபத்தூண்’ தொடர்பான பல்வேறு அபபண்டமான பொய் செய்திகள் பரப்புகின்ற அம்சங்களை சுட்டிக் காண்பித்து முகத்திரையை கிழித்தெறிந்துள்ளார். தோழருக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!
நாம் செய்ய வேண்டியது என்ன? ‘தினமலம்’ பத்திரிகையின் அலைபேசி எண்களை அனைவருக்கும் பகிர்ந்து கடுமையான கண்டனங்களை கடும் சொற்களால் விமர்சிக்க வேண்டும் என்பது ஒன்று. அடுத்து குறைந்தபட்ச எண்ணிக்கையாயினும் தோழர்கள் திரண்டு அவனது அலுவலகத்தை முற்றுகையிடுவது, இ-போஸ்டர் போடுவது, சுவரொட்டிகள் ஒட்டுவது போன்ற அம்பலப்படுத்தல் வேலைகளையும் முன்னெடுக்க வேண்டும். அது ‘தினமலர்’ அல்ல ‘தினமலம்’ என்பதை மக்களிடத்தில் தெளிவுபடுத்த வேண்டும்! இத்தருணத்தில் இவை அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்தவை.