
“திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் 10 ஆண்டுகளாக பட்டு சால்வைக்கு பதில் பாலியஸ்டர் சால்வைகள் வழங்கியதில், ரூ.54 கோடி ஊழல் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்ததும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் நடைபெற்ற பல ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் உள்ளன. முதலில் பிரசாதம் தயாரிக்க தரம் குறைந்த நெய்யை உபயோகித்தது தெரிய வந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
பரகாமணியில் (உண்டியல் பணம் எண்ணுமிடம்) ரவிகுமார் எனும் ஊழியர் ரூ.100 கோடி வரை வெளிநாட்டு கரன்சிகளை திருடி சிக்கி கொண்டார். அவரிடம் ஜெகன் ஆட்சியில், தேவஸ்தான அதிகாரிகள் நீதிமன்றம் மூலம் சமரசம் செய்து கொண்டு சில சொத்துகளை பறிமுதல் செய்தனர். இதிலும் ஊழல் நடந்துள்ளது தெரிய வந்ததால், சிஐடி போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது புதிதாக ஒரு ஊழல் வெளி வந்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் தற்போது வரை ஒப்பந்த அடிப்படையில், 2 நிறுவனங்கள் மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருநாமம், சங்கு, சக்கரம் பொறித்த சால்வைகளை வாங்கி வருகிறது. பட்டு சால்வை தருவதாக கூறி அந்த நிறுவனங்கள் டெண்டர் எடுத்துள்ளன. அந்தப் பட்டு சால்வைகளில் பட்டுக்கு பதிலாக பாலிஸ்டர் கலந்துள்ளது” என்று திருப்பதியில் நடந்த ஊழல்களில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஊழலை பற்றி தமிழ் இந்து செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்து கடவுளர்களில் பணக்கார கடவுள் என்று அழைக்கப்படுகின்ற திருப்பதி வெங்கடாஜலபதிக்கு கடந்த 2025-26 நிதியாண்டு காலகட்டத்தில் மட்டும் 5,258 கோடி ரூபாய் வருவாயாக வந்துள்ளதாக தேவஸ்தானத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவே 2024 – 25 காலகட்டத்தில் 5142 ஒரு கோடியாக மட்டுமே இருந்தது.
இந்த வருவாய் அனைத்தும் திருப்பதிக்கு வருகின்ற இந்து பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகள் மூலம் 1829 கோடியும், திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான நிலங்கள், கடைகள் மற்றும் அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்ததன் மூலமாக கிடைத்த வருவாய் 1310 கோடி ரூபாயும், திருப்பதியில் விற்கப்படுகின்ற லட்டு மற்றும் இதர பிரசாதங்கள் மூலமாக 600 கோடி ரூபாயும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வாங்குகிற கட்டணத் தொகையாக 310 கோடி ரூபாயும், அர்ச்சனை தட்டு கட்டண வருவாய் மூலமாக 130 கோடி ரூபாயும், பக்தர்கள் மொட்டை போட்டுக்கொண்ட முடியை விற்ற பணம் 126.30 கோடி ரூபாய் என்று வரவு கணக்கு தேவஸ்தானம் காட்டியுள்ளது.
“சிவன் சொத்து குலநாசம்” என்று ஒரு பழமொழி தமிழகத்தில் சுற்றிக் கொண்டுள்ளது. இது கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மோசடி செய்தாலோ அல்லது கோவிலில் அர்ச்சனை மற்றும் இதர கைங்கரியங்களில் ஈடுபடுகின்ற பார்ப்பனக் கும்பல் ஊழலோ, மோசடி செய்தாலோ அல்லது கோவிலுக்கு சொந்தமான வருவாயில் ஊழல்கள் செய்தாலோ அவர் மட்டுமின்றி அவர் குலமே நாசமாகிவிடும் என்பதைத்தான் இவ்வாறு கூறுகின்றனர் என்று எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் மேற்கண்ட அனைத்து விதமான கிரிமினல் குற்ற செயல்களையும் செய்கின்ற பார்ப்பனக் கும்பல்களும், கருப்பு பார்ப்பனர்களும், கோவில்களில் பணிபுரிகின்ற அதிகாரிகளும் எந்த தண்டனையையும் அனுபவிப்பதில்லை. அவர்களின் குலமும் நாசமாவதில்லை. மாறாக கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்து உல்லாசமாகவும், ஊதாரி தனமாகவும் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
படிக்க:
♦ திருப்பதி லட்டு விவகாரமும்! சந்தி சிரிக்கும் உண்மைகளும்!.
♦ ஒரே நேரத்தில் இரண்டு லட்டு தின்ன பார்க்கும் சங்கிகள்!
இது போன்ற பழமொழி எல்லாம் உழைக்கும் மக்களுக்கு மட்டும்தான். தாங்கள் உருவாக்கிய செல்வங்களான அதாவது உழைப்பு மூலம் உருவாக்கிய விளைச்சல்; தாங்கள் உழுது பயிரிட்டு உருவாக்குகின்ற விளைநிலங்கள்; அதற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு தேவையான வாய்க்கால்களை செம்மைப்படுத்த செய்கின்ற கடுமையான உழைப்பை கோருகின்ற வேலைகள் ஆகியவற்றை செய்வதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கோவில்கள், ஆதீனங்கள், மடங்கள் மற்றும் ஆசிரமங்களுக்கு சொந்தமான நிலங்களின் மீது ஆசை படக்கூடாது என்பதை தான் ‘சிவன் சொத்து குல நாசம்’ என்ற பழமொழி சொல்லிக் கொண்டுள்ளதே தவிர கோவில்களை கொள்ளையடிக்கும் கூடாரமாக மாற்றி உள்ள கிரிமினல்களுக்கு கிடையாது.
பார்ப்பன (இந்து) மதம் கோவில்களை இரண்டு வகைகளில் பயன்படுத்துகிறது ஒன்று பெரும்பான்மை மக்களின் மீது அவர்களின் வாழ்க்கை பிரச்சனைகளை உணர்வதற்கு உண்மையான காரணங்களை நோக்கி நகர்வதற்கு பதிலாக உனது தலைவிதி, முன்ஜென்ம பாவம், புண்ணியம், உனக்கு இருக்கும் பக்தி, உனது கர்மா போன்ற விவகாரங்களை முன்வைத்து அவர்களை மத மூடநம்பிக்கைகளில் அதாவது பார்ப்பன மதத்தின் மீதான நம்பிக்கைகளில் ஆழ்த்துகிறது.
இரண்டாவதாக இவற்றில் இருந்து விடுபடுவதற்கு கோவில் தரிசனம் செய்வது புண்ணியத்தை உருவாக்கும் என்று கூறி அதன் மூலமாக பல ஆயிரம் கோடி ரூபாய்களை வருவாயாக சுருட்டுவது, பக்தர்கள் கோவிலுக்கு அதாவது கடவுளுக்கு தரும் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பார்ப்பன கும்பல் தின்றுக் கொழுப்பதற்கு பயன்படுத்துவது என்பவை தான்.
இவையெல்லாம் பக்தர்களுக்கு சொல்லப்படுகின்ற பிரசங்கங்கள் மற்றும் பிரச்சனைக்கான தீர்வுகள். ஆனால், கோவிலில் வேலை பார்க்கின்ற பார்ப்பனக் கும்பல் முதல் அதிகாரம் வர்க்கம் வரை கடவுளின் சக்தியையும், மகிமையையும் தெளிவாக புரிந்து வைத்துள்ளனர் என்பது தான் மறைக்க முடியாத உண்மை. இதனால்தான் தைரியமாக ஊழல் மற்றும் கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.
ஆந்திராவில் தற்போது ஆட்சி மாறியவுடன் ‘உத்தம சீலரான’ சந்திரபாபு நாயுடு ஆட்சியின் கீழ் ஊழல்கள் ஒவ்வொன்றாக கண்டுபிடிக்கப்பட்டு வருவதாக இந்து தமிழ் திசை உள்ளிட்ட பார்ப்பன ஊடகங்கள் ஊதுகின்றன.
ஆனால் இதற்கு முன்னர் ஆட்சி செய்த பலரது ஆட்சிக் காலத்தில் நடந்துள்ள இது போன்ற கிரிமினல் குற்ற செயல்கள்; கடவுளுக்கு செய்ய வேண்டிய கைங்கரியங்களில் சித்து விளையாட்டுகளை செய்த பார்ப்பனர்கள் மற்றும் அதிகார வர்க்க கிரிமினல்கள் மீது ‘ஆண்டவன்’ எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சமாகும்.
பல்வேறு துன்பங்களிலும், துயரங்களிலும் ஆழ்ந்துள்ள மக்கள் தங்களது பிரச்சனைகளை தீர்க்கின்ற உண்மையான காரணங்களை அறிந்து கொள்வதற்கு முன்னால் ஏக்க பெருமூச்சாக மதம் இருப்பது உண்மைதான்.
“மதம் என்பது ஆத்ம உயிர்ப்பற்ற ஒரு நிலைமையின் உயிர்ப்பாக இருப்பதுபோல், ஒடுக்கப்பட்ட மனிதனின் பெருமூச்சாக, இதயமற்ற உலகின் இதயமாக உள்ளது. அது வெகுசனத்தின் அபின்.
மாயையான இன்பத்தினைத் தரும் மதத்தினை அழிப்பதென்பது மக்களுக்கு உண்மையான இன்பத்தைத் தர வேண்டுமெனக் கோருவதாகும். நடைமுறை நிலைமைகள் பற்றிய மாயையிலிருந்து விடுபட வேண்டுமென்ற கோரிக்கை, மாயைகள் தேவைப்படுகின்ற நடைமுறை நிலைமை ஒன்றினைக் கைவிடுவதற்கான கோரிக்கை ஆகும்” என்கிறார் காரல் மார்க்ஸ்.
ஆனால் பார்ப்பன (இந்து) மதமும் அது துவங்கிய காலத்தில் இருந்து இத்தகைய வேலைகளில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. மாறாக பார்ப்பன மதத்தை ஏற்றுக் கொண்ட மக்களையே பிளவுபடுத்தி, “சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்” என்ற நான்கு வர்ண பாகுபாட்டை முன்வைத்து தனது மதத்திற்கு உள்ளாகவே, ஒரு சிலர் மேம்பட்டவர்கள் என்றும் பெரும்பான்மை மக்கள் கீழானவர்கள் என்றும் விதியை வைத்து கையாண்டு வருகிறது என்பதால் இதனை மதம் என்ற அடிப்படையில் நாம் கையாள முடியாது.
பார்ப்பன மதத்தை தூக்கி சுமந்து கொண்டே அதாவது பார்ப்பன மதம் விதிக்கின்ற விதிகளில் முக்கியமான சாதிய அமைப்புகளை சாதிய அடையாளங்களை வைத்துக் கொண்டே பார்ப்பன மதத்திற்கு எதிராக ஒருக்காலும் போராட முடியாது. அதுபோல பார்ப்பனக் கும்பலை தூக்கி சுமப்பதன் மூலமும் ஒருபோதும் பார்ப்பன மதத்தில் இருந்து விடுதலை பெற முடியாது.
இவையெல்லாம் கடவுளின் பெயரால் நியாயப்படுத்தப்படுகின்றன என்பது தான் நமது விமர்சனம் ஆகும். தற்போது திருப்பதியில் வெங்கடாஜலபதிக்கு சாத்துகின்ற பட்டு வஸ்திரங்களை அன்றாடம் கோவிலுக்கு வருகின்ற பக்தர்களிலேயே ரூபாய் 3000 கொடுத்து டிக்கெட் வாங்குகின்ற விஐபி பக்தர்களுக்கு ‘வேத ஆசீர்வச்சனம்’ என்ற பெயரில் போர்த்தி அவர்களுக்கு ஆசீர்வதிப்பதை ஒரு வருவாய் ஈட்டும் தொழிலாகவே பார்ப்பனக் கும்பல் செய்து வருகிறது.
இந்தப் பட்டு வஸ்திரம் சாத்துகிறோம் என்று பாலியஸ்டர் கலந்த வஸ்திரத்தை சாத்தியது மட்டுமின்றி அதை வாங்கியதில் செய்த ஊழல் என்று தற்போது அம்பலமாகி நாறிக் கொண்டுள்ளது. விஐபி பக்தர்களை ஏமாற்றியது மட்டுமின்றி, ‘ வெங்கடாஜலபதியையே’ ஏமாற்றியுள்ள அதிகார வர்க்கம் மற்றும் பார்ப்பனக் கும்பல் மற்றும் இந்த வஸ்திரங்களை அவர்களுக்கு சப்ளை செய்த விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட கிரிமினல் குற்ற கும்பலை தண்டிப்பதற்கு வெங்கடாஜலபதி ஒருபோதும் இறங்கி வர மாட்டார்.
எனவே, “அவரது சார்பாக” போராடுகின்ற உழைக்கும் மக்களின் பிரதிநிதிகள் தான் இத்தகைய கிரிமினல் கும்பலுக்கு தக்க தண்டனையை வழங்க முடியும். இத்தகைய முடிவுகளை அநீதி என்று நீங்கள் கருதினால் அப்படிப்பட்ட அநீதிகளை தொடர்ச்சியாக செய்வதன் மூலம் தான் பார்ப்பன (இந்து) மதத்தின் மீது கண்மூடித்தனமான நம்பிக்கைகளையும், பார்ப்பன (இந்து) மதம் நடத்துகின்ற கொடுங்கோன்மையும் எதிர்த்து முறியடிக்க முடியும்.
◾பார்த்தசாரதி.
புதிய ஜனநாயகம் தினசரி







திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் பட்டு சால்வை என்ற பெயரில் ஊழல் நடைபெற்ற உள்ளது லட்டு பிரசாதத்திலும் கூட ஊழல் நடந்துள்ளது. குறிப்பாக (சிவன் சொத்து குல நாசம்) பழமொழி உழைக்கும் மக்களுக்கு மட்டும்தான் ஆளும் வர்க்கத்துக்கும் பார்ப்பன கும்பலுக்கும் இது பொருந்தாது இந்த கடவுள் அவர்களை தண்டிக்காது என்று தெரிந்ததுதான் ஊழல் செய்கிறார்கள் அவர்களை தண்டிக்க உழைக்கும் மக்கள் தான் ஒன்று கூடி அவர்களை தண்டிக்க முடியும் என்ற இந்த கட்டுரை மிக சிறப்பாக கட்டுரையாசிரியர் எழுதியுள்ளார் ஆசிரியருக்கு நன்றி
கடவுள் இல்லை என பெரியார் சொன்னாலும் ஏற்கமாட்டார்கள்!
ஆனால் பார்ப்பானுக்கு நன்றாக தெரியும் கடவுள் இல்லை என்று அதனால் தான் கோயிலில் பெண்களுடன் உல்லாசமாக இருப்பது,மது அருந்துவது,ஆபாச படங்களை பார்ப்பது,மிகவும் கீழ்த்தரமான வேலைகளை செய்வது அதனை விடவும் மேலாக கோயிலுக்கு பக்தர்களுக்கு தரும் காணிக்கையை கொள்ளையடிப்பது,எடுத்துக் கொள்வது ,கோயில் நிலங்களை விற்பனை செய்வது என அனைத்து கிரிமினல் ரவுடித்தனங்களையும் இவர்கள் செய்து வருகிறார்கள்.
இன்று நடைபெற்ற இந்த சால்வை (பட்டு அங்கவஸ்திரம்) ஊழலும் இதனால் பாதிக்கப்பட்ட மேட்டுக்குடி நடுதர விஐபி களும் பார்ப்பானை தண்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்க மாட்டார்கள். எல்லாம் மேலே உள்ளவன் பார்த்துக் கொள்வான்??