கொலைகார இஸ்ரேலே, அமெரிக்காவே! காசா மீதான போரை நிறுத்து!!
சென்னையில் இன்று பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பாலஸ்தீன இனப்படுகொலையைத் தடுக்க கோரி பேரணி நடந்தது.
இஸ்ரேல் ஜியோனிச பாசிச நெதன்யாகு அரசு பாலஸ்தீனத்தை அடியோடு அழித்து துடைத்தெறிய வேண்டும் என்ற நோக்கில் பாலஸ்தீன மக்கள் மீது மிகப்பெரிய இனப்படுகொலையை நிகழ்த்தி வருகிறது
இதுவரையில் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். போர் விதிகளை எள்ளளவும் மதிக்காமல் மருத்துவமனைகள் மீது தாக்குதல், பத்திரிக்கையாளர்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என எந்த வித நெறிமுறைகளும் இல்லாமல் கொடூரமான முறையிலே இந்த படுகொலைகளை நடத்தி வருகின்றது.
இதை தடுக்க உலகம் முழுவதும் Save Palestine! Save Gaza என்ற முழக்கங்களை முன்வைத்து மக்கள், ஜனநாயக இயக்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று (19/09/2025) மாலை 3 மணி அளவில் சென்னை புதுப்பேட்டை பாலத்தில் பேரணியை தொடங்கி சிந்தாதிரிப்பேட்டை பாலத்தின் அருகே கண்டன பொதுக்கூட்டத்தை பெரியார் உணரவாளர்கள் கூட்டமைப்பு நடத்தினார்கள்.
இந்நிகழ்வில் இயக்குனர்கள் வெற்றிமாறன்,அமீர் நடிகர்கள் சத்யராஜ், தீனா,பிரகாஷ்ராஜ் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், தோழர்கள் தொல் திருமாவளவன் திருமுருகன் காந்தி,நாகை திருவள்ளுவன் டாக்டர் ஜவாஹிருல்லா ,விடுதலை ராஜேந்திரன், கு.ராமகிருஷ்ணன், கீ.வீரமணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் அதிகாரம்,புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்ரேல் ஜியோனிச அரசுக்கு எதிரான கண்டன பதாகைகள், முழக்கங்களிட்டனர். போரில் அடிபட்ட பாதிக்கப்பட்ட குழந்தைகள் எப்படி சிகிச்சை பெறுகின்றனர் என்ற வடிவத்தில் மருத்துவ கட்டுப்போட்டு குழந்தைகள் இருந்தார் போல் மடியில் ஏந்தி பேரணியில் வந்தனர்.
மேலும் பொதுக்கூட்டத்தில் பேசியவர்கள் ஒன்றிய மோடி அரசு இஸ்ரேலுடனான இராணுவ ஆயுதங்கள் வியாபார உறவை நிறுத்த வேண்டும் என்றும், பாலஸ்தீன விடுதலை ஆதரிக்க வேண்டும் என்றும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டம் நாம் ஒவ்வொரு மனிதரும் மனிதநேயத்தை நேசிக்கக் கூடிய அனைவரும் போராட வேண்டும் என்றும், காஸாவின் விடுதலைக்கு குரல் கொடுக்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தனர்.
தகவல்
மா.மணியரசன்
மாநில செயற்குழு உறுப்பினர்,
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி