மார்ச் 4-ஆம் தேதி அன்று உலக ரவுடி அமெரிக்கா, யூத இனவெறி  இஸ்ரேலே ஈரான் மீதான போரை நிறுத்து! ஏகாதிபத்திய எண்ணெய்வளக்  கொள்ளைக்காக ஈரான் உள்ளிட்ட உலக மக்களை கொள்ளாதே!

என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னை

சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை மாவட்ட செயலாளர் தோழர் ஆனந்தன் தலைமை தாங்கினார். கண்டன உரையாக மனிதநேய மக்கள் கட்சி தோழர் யாக்கூப், மக்கள் அதிகாரம் மாநில தலைமை குழு உறுப்பினர் தோழர் சி ராஜு, புஜதொமு மாநில இணைச்செயலாளர் தோழர் மா.சி.சுரேஷ்குமார்,  ஊடகவியலாளர் தோழர் இந்திரா குமார் தேரடி, தந்தை பெரியார் திராவிட கழகம் தோழர் ஆவடி நாகராசன், புமாஇமு மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் மணியரசன், AICCTU தலைவர் தோழர் A.S.குமார் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை  நிகழ்த்தினார்கள். இறுதியாக திருவள்ளூர் மாவட்ட செயலாளர் திரு பெரியசாமி நன்றி உரையாற்றினார்.

ஈரான் மீதான் போரை நிறுத்து | மக்கள் அதிகாரம் கண்டன ஆர்ப்பாட்டம்

அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து  ஈரான் உச்சபட்ச தலைவரை கொல்லப்பட்டது. ஈரான் பள்ளி கட்டிடம் மற்றும் மருத்துவமனை மீது குறி வைத்து தாக்குதலை நடத்தியதில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் போர் வெறி பிடித்த அமெரிக்காவால் பச்சை படுகொலை செய்யப்பட்டனர் இது மட்டுமல்லாமல் ஈரான்  அலுவலகங்களை குறிவைத்து பேட்டை ரவுடி இஸ்ரேல் அரசு ராணுவ தாக்குதல் நடித்து வருகிறது இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும்  மக்களின் அன்றாட அத்தியாவசிய பொருட்களின் விலை கூடும்

ஈரான் மீதான இன அழிப்பு போரை திட்டமிட்டு நடத்தி வருகிறது   ஈரானில் தனக்கு சாதகமான ஒரு பொம்மை ஆட்சியை நிறுவி தனக்கு தேவையான எண்ணெய் வயல்களையும் இயற்கை வளங்களையும் கொள்ளை அடிக்க ஏகாதிபத்திய உலகப் போரை நடத்தி உழைக்கும் மக்களை பச்சப்படுகொலை செய்து வருகிறது டிரம்ப் அரசு. ஏகாதிபத்தியத்தை விழித்த ஒடுக்கப்பட்ட நாடுகளின் உலக தொழிலாளர்கள் அனைவரும் ஏகாதிபத்திய நிதி ஆதிக்க கும்பலின் லாப வெறிக்கு முடிவு கட்ட வேண்டும்.

வர்க்க அரங்குகள் ம.க.இ.க. பு.மா.இ.மு .பு.ஜ.தொ.மு தோழர்கள் மற்றும் கடலூர், கள்ளக்குறிச்சி, சென்னை, திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

திருச்சி

திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்கா இஸ்ரேலை அம்பலப்படுத்தியும் இந்திய அரசின் கள்ள மவுனத்தை கேள்வி எழுப்பியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மகஇக மாநில பொதுச்செயலாளர் தோழர் கோவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழாதன், மக்கள் அதிகாரத்தின் மாநில பொதுச் செயலாளர் செழியன் ஆகியோர் உரையாற்றினர்.

ஈரான் மீதான் போரை நிறுத்து | மக்கள் அதிகாரம் கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டத்தை தலைமை தாங்கி திருச்சி மாவட்ட செயலாளர் தோழர் கார்க்கி பேசினார். மாவட்ட குழு உறுப்பினர் தோழர் ராஜா, புஜதொமு மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா ஆகியோரும் கண்டன உரையாற்றினர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை சீர்காழியில் நீதிக்கான மக்கள் இயக்கம் சார்பாக அமெரிக்கா – இஸ்ரேலை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் வி.வி.மு பங்கேற்றது.

நீலகிரி

கோத்தகிரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் தலைமையில் முற்போக்கு மக்கள் மேடை அமைப்பும் கலந்து கொண்டது. ஈரான் போரை நிறுத்த வலியுறுத்தி கலந்து கொண்டவர்கள் கண்டன உரையாற்றினார்கள். மேலும் அமெரிக்க பொருள்களை புறக்கணிக்கவும் கோரிக்கை விடுத்தார்கள்.

ஈரான் மீதான் போரை நிறுத்து | மக்கள் அதிகாரம் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்திற்கு நீலகிரி மக்கள் அதிகாரம் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தோழர் ரவி, தோழர் ராஜா, சி.பி.ஐ (எம்) தோழர் ரமேஷ், விசிக தோழர் மன்னரசன், புஜதொமு தோழர் புவனேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். மாநில தலைமை குழு உறுப்பினர் தோழர் ஆனந்தராஜ் மற்றும் மாவட்ட செயலாளர் தோழர் வெங்கடேஷ் ஆகியோரும் கண்டன உரை நிகழ்த்தினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் நன்றி உரையாற்றினார்.

கோவை

கோவையில் இன்று மாலை ஸ்டேட் பேங்க் சாலையில் உள்ள BSNL அலுவலகம் அருகில் கோவை மாவட்ட மக்கள் அதிகாரம் செய்தி தொடர்பாளர் தோழர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில், புரட்சிகர முழக்கங்களுடன் வழக்கறிஞர் தோழர்.மகேஷ் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தோழர். ஃபெரோஸ்பாபு, CPI-ML Liberation, தோழர். அபுதாஹிர், மாவட்ட செயலாளர், SDPI கட்சி, தோழர். கணேஷ், மாவட்ட துணை செயலாளர், மக்கள் அதிகாரம், தோழர். சரவணகுமார், மாவட்ட பொருளாளர், மக்கள் அதிகாரம்,
ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஈரான் மீதான் போரை நிறுத்து | மக்கள் அதிகாரம் கண்டன ஆர்ப்பாட்டம்
இறுதியாக உறுப்பினர், மக்கள் அதிகாரம் மாவட்ட செயற்குழு தோழர்.சீனிவாசன்,நன்றியுரையாற்றி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here