திருச்சி மூன்று கல்லூரி மாணவர்களை உள்ளடக்கிய சமூக நல விடுதியில் மாணவர்களின் அடிப்படை உரிமைகளுக்காக திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து போராட்டம் நடத்தப்பட்டது.


இப்போராட்டத்தை தலைமை ஏற்ற RSYF திருச்சி அமைப்பாளர் தோழர் பார்த்தசாரதி மற்றும் தோழர் கதிரவன் முன்னின்று நடத்தினர். மேலும் விடுதி கல்லூரி மாணவர்கள் உணரப்பூர்வமாக விடுதி அடிப்படை கோரிக்கையை முன்வைத்து போராடினர் ‌.

RSYF மனு கடிதம் தொடர்பாக:

எமது அமைப்பு தமிழகத்தில் மாணவர்கள், பேராசிரியர்களுக்கு கல்வி உரிமைக்காகவும் அவர்கள் தங்கி இருக்கும் விடுதிகளில் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் உரிமைகளுக்காகவும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் கருத்தரங்கம் போன்றவை நடத்தி வருகிறோம். அந்த வகையில் எமது அமைப்பு திருச்சி சட்டக் கல்லூரி மற்றும் தந்தை பெரியார் EVR அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் எமது மாணவர் அமைப்பு செயல்படுகிறது. அதில் படிக்கக்கூடிய மாணவர்கள் கிராப்பட்டி பகுதியில் சமூகநீதி மாணவர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். அந்த மாணவர்கள் தினந்தோறும் சொல்ல முடியாத அளவுக்கு வேதனைகளும், சிரமங்களுக்கு ஆளாகி அவர்களை வஞ்சிக்கும் வகையில் பல்வேறு சம்பவங்கள் நடைபெறுவதை எமது அமைப்புக்கு புகாராக தெரிவித்தனர்.

படிக்க:

 அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகள் ‘தத்தெடுக்கும் திட்டத்தை’ உடனே நிறுத்து! | புமாஇமு

அந்த வகையில் மேற்கண்ட விடுதியில் மாணவர்களுக்கு தரமான உணவு மூன்று வேளையும் வழங்கப்படுவதில்லை. உணவில் காய்கறிகள், எண்ணெய்,பருப்பு போன்றவை உரிய தர அளவுடன் சேர்த்து முறையாக சமைத்து மாணவர்களுக்கு வழங்காமல் சுவையின்றி உப்பு அதிகமாக போடுவதும் அல்லது போடாமல் விடுவதும் பல நாட்கள் உணவை சமைத்து வழங்குகின்றனர். இதனால் பல மாணவர்கள் சத்தாக சாப்பிட்டு படிப்பதற்கு கவனம் செலுத்தாமல் சோர்வின்றி பல நாட்கள் இருக்கின்றனர். சிலர் சாப்பிடாமல் பட்டினி கிடக்கின்றனர். உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது.

அடுத்ததாக மாணவர்கள் பயன்படுத்தும் விடுதி கழிவறை பல நாட்களாக சுகாதாரம் இன்றி துர்நாற்றம் அடித்து செல்ல முடியாத அளவுக்கு மிக மோசமாக இருக்கின்றன.

இதனால் பல மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு அவதிக்குள்ளாகினர்.

மாணவர்கள் விடுதியில் உள்ள புத்தக நூலகத்தில் இரவு நேரத்தில் படிப்பதற்கு சென்றால் அங்கே சமையல் தொழிலாளிகள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆகையால் எங்களால் மின்விளக்கு பயன்படுத்த முடியாமல் படிக்க முடியாமல் உள்ளது. நூலகத்தை எங்களுக்கு படிப்பதற்கு ஏற்பாடு செய்து தருவதும் சமையல் தொழிலாளிகளுக்கு போதுமான ஓய்வறைகள் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மாணவர்களுக்கு மாதாந்திர பராமரிப்புத் தொகையாக எண்ணெய், சோப்பு,போன்ற உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்களுக்கு அரசு தரப்பில் மாதம் 600 ரூபாய் மாணவருக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதை தற்போது ஆறு மாத காலமாகவும் சில ஆண்டுகளாக கொடுக்காமல் மாணவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதை உடனடியாக சரி செய்து மாதம் உரிய தேதியில் எங்களுக்கு மாணவர் நிதியை பெற்று தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோல கல்லூரி விடுமுறை நாட்களில் மாணவர்கள் ஊருக்கு செல்லாமல் விடுதிகளில் தங்கி படிக்க வேண்டிய சூழல் இருப்பதால் அவர்களுக்கு உணவு சமைத்து கொடுப்பதில்லை, மாறாக விடுமுறை அன்று விடுதியில் யாரும் மாணவர்கள் இருக்க வேண்டாம் என கூறுகின்றனர். உணவு கொடுக்க முடியாது என்றும் தெரிவிக்கின்றனர். இது மாணவர் உரிமையை மறுக்கின்ற போக்கு என்பதையும் அவர்களை பட்டினி போட்டு வஞ்சிக்கின்ற போக்கு என்பதை தெரியப்படுத்தி கொள்கிறோம். உடனடியாக இந்த நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறோம்.

மேற்கண்ட குறைபாடுகள் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் அவ்வப்போது சரி செய்வதும் பிறகு பழையபடி மீண்டும் அதே குறைபாடுகள் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஆகவே இந்த குறைபாட்டை முழுமையாக சரி செய்து தொடர்ச்சி கொடுக்கவும் வாரம் ஒருமுறை அதிகாரிகள் மாணவர்கள் விடுதியில் குறிப்பாக காஜாமலை கிராப்பட்டி சமூகநீதி மாணவர் விடுதியில் ஆய்வு செய்து மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்து மாணவர் நலன்களில் அக்கறையுடன் செயல்பட வேண்டுமென புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
என்ற கோரிக்கைகளோடு மனு கொடுத்து போராட்டம் நடத்தப்பட்டது.

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
திருச்சி மாவட்டம் 9788808110

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here