நீலகிரி

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் மக்கள் வழக்கறிஞர் தோழர் வாஞ்சிநாதன் அவர்களுக்கு எதிராக தொடுத்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரியும், நீதிமன்ற தீர்ப்புகளை மக்கள் விமர்சிக்கின்ற உரிமை மக்களுக்கு இருக்கிறது என்கின்ற கோரிக்கை வலியுறுத்தியும் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு கையெழுத்து மனு கொடுக்கும் போராட்டம் மக்கள் அதிகாரம் அமைப்பால் இன்று அறிவிக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக இன்று (28.07.2025) காலை நீலகிரி மாவட்டம் மக்கள் அதிகாரம் சார்பாக கோத்தகிரி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் முன்னாள் …
வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் பிரச்சனையின் தீவிரத்தை விளக்கி கூறி கையெழுத்து பெறப்பட்டது.
மேலும் கோத்தகிரி பகுதியில் காய்கறி மார்க்கெட், பேருந்து நிறுத்தம் மற்றும் ஜீப் ஸ்டான்ட் ஆகிய பகுதியில் உள்ள மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.
சில வழக்கறிஞர்களை தவிர பெரும்பாலான வழக்கறிஞர்கள் நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதனின் இந்த செயலை கண்டித்து கையெழுத்திட்டனர்.
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திரும்ப பெரும் வரையிலும் எமது போராட்டம் தொடரும்.

விழுப்புரம்.

வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு மிரட்டல் விடுத்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது விசாரணை நடத்த வேண்டும் மற்றும் வாஞ்சிநாதன் பக்கம் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற வடிவில், நீதிபதியின் ஒரு சார்பு நிலையை விளக்கிய பிரசுரத்தை விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில் இன்று (28-07-2025) காலை போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் மக்கள் அதிகாரம் சார்பாக வழங்கப்பட்டது.

கடலூரில் ஆர்ப்பாட்டம்
மக்கள் வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு துணை நிற்போம்!
கடலூரில் நீதிமன்றத்தின் முன்பாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.
மக்கள் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதான அவதூறு பொய் வழக்கை திரும்பப் பெற கோரி கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் முன்பு இன்று (28.07.2025) காலை வழக்கறிஞர்கள் பெருந்திரளாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
சென்னை
சென்னை குறளகம் அருகே மக்கள் அதிகாரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
திறந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பகிரங்கமாக மிரட்டிய நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு விடப்பட்ட மிரட்டல் அல்ல சமூக நீதிக்கும் சமூக செயற்பாட்டாளருக்கு விடப்பட்டுள்ள மிரட்டல்!
நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனின் நடவடிக்கைகளை கண்டிப்போம் களமிறங்குவோம்!
மேலும் ஜி ஆர் சுவாமி நாதனை கண்டித்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் வழக்கறிஞர்கள் சங்கம், ஜனநாயக அமைப்புகள் என இன்று தமிழக முழுக்க பல இடங்களில் போராட்டங்களை நடத்துகின்றன.
சென்னை மாநகர மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் இன்று (28/07/2025) காலை 11 மணி அளவில் குரளகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர செயலாளர் தோழர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here