NDLF முகநூல் பக்கம் முடக்கம்! கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்!
Information Technology (intermediate guidelines and digital media ethics code) rules 2021 கொண்டுவரப்பட்ட திருத்தம் சமூக வலைதளங்களில் முற்போக்காளர்களின் கருத்துச் சுதந்திரத்தை தடுத்து நிறுத்துகிறது.

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் சமூக வலைதளமாக பத்தாண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த NDLF முகநூல் பக்கம் மெட்டா (Meta) நிறுவனத்தால்  எந்தவித அறிவிப்பும் இன்றி முடக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் அதிகாரம் ஊடகம் வன்மையாக கண்டிக்கிறது.

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தொழிற்சங்கம், 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் மீதான முதலாளித்துவ அடக்குமுறைக்கு எதிராக, பல்வேறு அரசின் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடி வரும் புரட்சிகர தொழிற்சங்கமாகும்.

வளர்ந்துவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புஜதொமு சமூக வலைதளங்களின் மூலம் புரட்சிகர கருத்துக்களையும் சமூக மாற்றத்திற்கான அவசியத்தையும் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், சிறு குறு வணிகர்கள் மீதான ஒன்றிய பாசிச அரசின் தாக்குதலையும் உடனுக்குடன் அம்பலப்படுத்தி இ போஸ்டர், மீம்ஸ் வீடியோக்களை பதிவேற்றி வந்தது.

புரட்சிகர ஜனநாயக சக்திகளின் பேராதரவுடன் 19,000 followers களுடன், மாதம் 20 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களையும் பெற்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் பேசும் தளமாக முன்னேறி வந்தது.

சமீப காலமாக NDLF  முகநூல் பக்கத்தில் போடப்படும் பதிவுகள் மீது, சங்பரிவார் கும்பல் கமெண்ட் பாக்ஸில்  நேர்மையான விவாதங்களை, கருத்துக்களை முன் வைக்காமல் மோசமான கொச்சையான கமெண்ட் செய்வதுடன் ரிப்போர்ட் அடிக்கவும் செய்தார்கள். அவை எல்லாவற்றையும் எதிர்கொண்டு NDLF முகநூல் பக்கம் இயங்கி வந்தது.

கடைசியாக பிப்ரவரி 12ஆம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை ஒட்டி போடப்பட்ட நேரலை(Live) பல்லாயிரம் மக்களை சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது. இப்படியாக தொடர்ந்து மக்களை பாதிக்கும் பிரச்சினைகளை சமூக வலைதளம் மூலம் பல லட்சம் மக்களுக்கு கொண்டு சென்ற NDLFன் முகநூல் பக்கம் திட்டமிட்டு கார்ப்பரேட் – காவி பாசிச கும்பலால் தற்போது முடக்கப்பட்டுள்ளது, நீக்கப்பட்டுள்ளது.

முடக்குவதற்கு அவர்கள் சொல்லும் காரணம் ஜனநாயக விரோதமானது. அதாவது பாசிச கும்பலை அம்பலப்படுத்தும் பதிவுகளை community standard guideline ஐ மீறியதாக கூறி முடக்கி இருக்கிறார்கள். அதே நேரத்தில் AI மூலம் பரப்பப்படும் வெறுப்பு பேச்சுக்கள், ஆபாச காணொளிகள் எவ்வித இடையூறும் இல்லாமல் கோடி மீடியாக்களாலும், கார்ப்பரேட் நிறுவனங்களாலும் ஒளிபரப்பப்படுகின்றது.

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் Facebook  community standards அடிப்படையில் வெறுப்பு பேச்சு, தவறான தகவல், வன்முறை தூண்டுதல், போலி கணக்குகள் இவற்றுக்கு எதிராக அரசின் உத்தரவின்றி சுயேச்சையாகவும் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், இந்தியாவில் செயல்படும் Facebook காவி பாசிச கும்பலுக்கு ஆதரவாக  community standard-ஐ பயன்படுத்திக் கொள்கிறது.  கருத்து சுதந்திரத்தை கழுவில் ஏற்றுகிறது.

படிக்க:

 மக்கள் அதிகாரம் முகநூல் முடக்கம், பாசிசத்திற்கு எதிரான எமது போராட்டம் தொடரும்!

♦ கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை இறுக்கும் அரசுகள்!!

Information Technology (intermediate guidelines and digital media ethics code) rules 2021 கொண்டுவரப்பட்ட திருத்தம் சமூக வலைதளங்களில் முற்போக்காளர்களின் கருத்துச் சுதந்திரத்தை தடுத்து நிறுத்துகிறது.

ஜனநாயகத்தின்  நான்காவது தூணாக பார்க்கப்படும் Media (ஊடகம்) இந்தியாவில் காவி பாசிச கும்பலின் கட்டுப்பாட்டில் சென்று விட்டது. மோடி அரசின் சாதனை என பொய்யை பரப்பும் கோடி மீடியாக்கள், பெரும்பாலான நேரங்களில் சங்பரிவார் கும்பலின் புகழ் பாடுவதையே முழுநேர வேலையாக கொண்டு செயல்படுகிறது. இதற்கு கட்டுப்படாமல் பாசிச மோடியின் மக்கள் விரோத திட்டங்களையும், காவி பயங்கரவாதத்தையும் அம்பலப்படுத்தும் செய்தி சேனல்கள் இணையதளங்கள் ரெய்டுகள் மூலம் மிரட்டப்படுகின்றன. சில சமயங்களில் முடக்கப்படுகின்றன. செய்திகள் தணிக்கை செய்யப்படுகின்றன.

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்திக் கொண்டு சுயமாக செயல்படும் youtube, முகநூல் பக்கங்கள் பாசிச சட்டங்களை பயன்படுத்தி செயல்பட விடாமல் தடுக்கப்படுகின்றன. பாசிஸ்டுகளுக்கு எதிராக பேசக்கூடாது, எழுதக்கூடாது, பதிவுகள் போடக்கூடாது என கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் பாசிச கும்பலுக்கு புரட்சியாளர்கள் அஞ்சப்போவதில்லை. NDLF முகநூல் பக்கம் முடக்கப்பட்டதை கண்டிப்போம். தொடர்ந்து கார்ப்பரேட் காவி பாசிச எதிர்ப்பில் களமாடும் புரட்சிகர தொழிற்சங்கத்திற்கு நமது ஆதரவை உறுதி செய்வோம்.

மக்கள் அதிகாரம் 
ஆசிரியர் குழு

1 COMMENT

  1. ஊடக சுதந்திரத்தை காத்திட ஊக்கம் பெற்று போராடவோம் !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here