சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு!

சோவியத் யூனியனில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி – (போல்ஷ் விக்குகளுடைய கட்சி) – பெருமை மிக்க நீண்ட நெடும் பாதையில் முன்னேறி வந்திருக்கிறது. 1880 ம் ஆண்டிற்குப்பின் ரஷ்யாவில் ஆங்காங்கே தோன்றிய சின்னஞ் சிறு மார்க்ஸிய வட்டங்களிலிருந்தும், குழுக்களிலிருந்தும் தொடங்கி முன்னேறி, இன்றைக்கு உலகில் முதன் முதலில் நிறுவப்பட்ட தொழிலாளர், விவசாயிகளுடைய தனியொரு அரசாங்கத்தை நடத்தும் போல்ஷ்விக்குகளுடைய மகத்தான கட்சியாக, அது வளர்ந்தோங்கியிருக்கிறது.

புரட்சிக் காலத்திற்கு முன்பு ரஷ்யாவில் இயங்கிவந்த தொழிலாளி வர்க்க இயக்கத்தை ஆதாரமாகக் கொண்டு, அந்தக் கட்சி வளர்ந்தது. தொழிலாளிவர்க்க இயக்கத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, அவ்வர்க்கத்திற்கு சோசலிச விழிப்பை உண்டாக்கி உணர்ச்சியூட்டிவந்த மார்க்ஸிய வட்டங்களிலிருந்தும், குழுக்களிலிருந்தும் அது உதய மாயிற்று.

மார்க்ஸிஸமும், லெனினிஸமும் போதிக்கும் புரட்சிகரமான போதனைகளையே அது எப்போதும் வழிகாட்டியாகக் கொண்டு முன்னேறிவந்திருக்கிறது. ஏகாதிபத்தியம், ஏகாதிபத்திய யுத்தங்கள், தொழிலாளர் புரட்சிகள் ஆகிய புதிய காட்சிகள் உலகிலே தென்பட்ட சகாப்தத்தில் – புதிய நிலைமைகள் ஏற்பட்ட சகாப்தத்தில் – மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோருடைய போதனைகளை அதனுடைய தலைவர்கள் மேலும் ஒருபடி வளர்த்தார்கள்; புதியதோர் நிலைக்கு அவற்றை உயர்த்தினார்கள்.

தொழிலாளி வர்க்க இயக்கத்திலே இடம் பெற்றிருந்த சோசலிசப் புரட்சிக்காரர்கள், (இவர்களுக்கு முன்பு இவர்களுடைய மூதாதையர்களான நரோத்ணிக்குகள்), மென்ஷ்விக்குகள், அராஜகவாதிகள், பலதிறப்பட்ட போக்குகளையுடைய சகல முதலாளித்துவ தேசியவாதிகள் ஆகியோருடைய மத்தியதர வர்க்கக் கட்சிகளையும் கட்சிக்குள்ளேயே இடம் பெற்றிருந்த டிராட்ஸ்கீயவாதிகள், புக்காரினியர்கள், தேசிய வாதத்தில் சறுக்கிச் செல்கிறவர்கள் முதலிய சகலவிதமான மென்ஷ்விக் சந்தர்ப்பவாதப் போக்குகளையும் லெனினிஸத்திற்கு நேர் விரோதமான இதர குழுக்களையும் எதிர்த்து அடிப்படையான தத்துவங்களை நிலைநாட்டுவதற்காக நடத்தப்பட்ட போராட்டத்தில் சோவியத் ஒன்றியத்திலுள்ள கம்யூனிஸ்டு கட்சி வளர்ந்து வலுவடைந்தது.

தொழிலாளி வர்க்கத்திற்கும், பாடுபடும் சகல மக்களுக்கும் விரோதிகளாக முளைத்த எல்லோரையும் எதிர்த்து நிலச்சுவான்தார்கள், முதலாளிகள், குலாக்குகள், சீர்குலைவுகாரர்கள், உளவாளிகள் முதலிய அனைவரையும் எதிர்த்து – நாலாபுறங்களிலுமுள்ள முதலாளித்துவ அரசாங்கங்களின் சகல கைக்கூலிகளையும் எதிர்த்து -நடத்தப்பட்ட புரட்சிகரமான போராட்டத்திலேயே சோவியத் ஒன்றியத்திலுள்ள கம்யூனிஸ்ட் கட்சி வலுவடைந்து பதம்பட்டது.

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் சரித்திரம் மூன்று புரட்சிகளுடைய  சரித்திரமாகும்; (1) 1905 ல் நடந்த முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி; (2) 1917, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் சரித்திரம் மூன்று புரட்சிகளுடைய பிப்ரவரியில் நடந்த முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி; (3)1917, அக்டோபரில் நடந்த சோசலிசப் புரட்சி. சோவியத் கம்யூனிஸ்டு கட்சியின் சரித்திரம் ஜார் ஆட்சியின் வீழ்ச்சி சரித்திரமாகும்; நிலச்சுவான்தார்கள், முதலாளிகள் ஆகியோரின் ஆதிக்கம் அடியோடு வீழ்த்தப்பட்டதன் சரித்திரமாகும்; உள்நாட்டு யுத்தத்தின்போது அந்நிய நாட்டினர் ஆயுதபாணிகளாய் படையெடுத்துத் தலையிட்டதைத் தவிடுபொடியாக்கிய வரலாறாகும்; நம் நாட்டில் சோவியத் அரசாங்கமும், சோசலிச சமூகமும் நிர்மாணிக்கப் பட்டதைக் கூறும் சரித்திரமாகும்.

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் சரித்திரத்தை ஆழ்ந்து படிப்பதனால் நாம் நன்மை அடைகிறோம். சோசலிசத்திற்காக நம் நாட்டுத் தொழிலாளர்களும், விவசாயிகளும் தொடுத்த போராட்டத்தில் கிடைத்த அனுபவங்கள் முழுக்க நமக்குக் கிடைக்கின்றன.

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் சரித்திரத்தை – அதாவது, மார்க்ஸிசம், லெனினிஸம் ஆகியவற்றின் விரோதிகள் யாவரையும் எதிர்த்து நமது கட்சி நடத்திய போராட்டத்தின் சரித்திரத்தை-பாட்டாளி மக்களுடைய விரோதிகள் அனைவரையும் எதிர்த்து நமது கட்சி நடத்திய போராட்டத்தின் சரித்திரத்தை நாம் படிப்பது, போல்ஷ் விஸத்தில் பூரண அறிவு பெறுவதற்கு உதவிசெய்கிறது, முழு விழிப்புடன் அரசியலில் நாம் நடந்துகொள்ளும் தன்மையை அது கூர்மைப்படுத்துகிறது. போல்ஷ்விக் கட்சியின் வீரம் செறிந்த சரித்திரத்தைப் பயில்வது, நமக்கு சமூக வளர்ச்சியின் சட்டதிட்டங்களைப் பற்றிய அறிவையும், அரசியல் போராட்டங்களின் விதி முறைகளைப் பற்றிய அறிவையும், புரட்சியைத் தூண்டி இயக்கும் சக்திகளைப் பற்றிய விஷய அறிவையும் அளிக்கிறது.

லெனின் – ஸ்டாலினுடைய கட்சியின் மகத்தான நோக்கம் இறுதியில் நிச்சயம் வெற்றி பெறும் என்ற உறுதியை-உலகம் முழுவதும் கம்யூனிஸம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றியடையும் என்ற நம்பிக்கையை சரித்திரத்தைப் பயில்வது பலப்படுத்தும்.

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் (போல்ஷ்விக் கட்சியின்) வரலாற்றை இந்தப் புத்தகம் சுருங்கக்கூறி விளங்க வைக்கிறது.

நூல் கிடைக்கும் இடம்

கீழைக்காற்று வெளியீட்டகம்
தொடர்புக்கு: +91 89256 48977

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here