ந்திய மக்களின் உழைப்பையும் செல்வத்தையும் பறித்து அதானி, அம்பானி போன்ற முதலாளிகளின் கைகளில் கொடுப்பதை பாசிச பிஜேபி அரசு  தனது முதன்மையான கடமையாக செய்து கொண்டிருக்கிறது.

இப்பொழுது, பொதுத்துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் (LIC) உள்ள பணத்தை எடுத்து கடன் சுமையில் சிக்கி இருக்கும் கௌதம் அதானியின் நிறுவனத்தில் ரூ.48,284.62 கோடி முதலீடு செய்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் கொடுத்த எழுத்துப்பூர்வ பதிலின் மூலம் இந்த விவரம் நாட்டு மக்களுக்கு தெரிய வந்துள்ளது.

அதேசமயம் எல்ஐசி நிறுவனம் எந்தெந்த தனியார் நிறுவனங்களில் எவ்வளவு முதலீடு செய்துள்ளது என்ற முழுமையான பட்டியலை வெளியிட முடியாது; அப்படி வெளியிடுவது எல்.ஐ.சி -ன் நிதி நலன்களை, வணிக நலன்களை பாதிக்கும் என்று (அதாவது எல்ஐசிக்கு பாதிப்பு ஏற்படும் என்று) நிர்மலா சீதாராமன் மறுத்துள்ளார்.

எல்.ஐ.சி யின் பணத்தை எடுத்து அதானிக்கு கறி விருந்து படைக்கும் பாஜக அரசு!

இந்த விபரங்களை வெளியிட்டால் மக்களின் சொத்தான எல்ஐசி -ன் பணத்தை எப்படி பாஜக அரசு வாரி கொடுத்துக்  கார்ப்பரேட்டுகளுக்கு கறிவிருந்து வைக்கிறது என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள் என்பதால்தான் நிர்மலா சீதாராமன் இந்த விவரங்களை வெளியிட மறுத்துள்ளார்.

பாஜக அரசு எல்ஐசியின் பணத்தை எடுத்து கார்ப்பரேட்டுகளுக்கு கொடுப்பதால் பாதிப்பு இல்லையாம்; ஆனால் இந்த விவரத்தை வெளியிட்டால் தான்  எல்ஐசி -க்கு பாதிப்பு என்று கூறுகிறார்.

இந்த பாசிச கும்பல் ஒன்றியத்தில் ஆட்சியில் அமர்ந்து கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்து கொண்டிருக்கும்; அதை எவரும் கேள்வி கேட்கக் கூடாது என்ற திமிருடன் இந்த பதில் அளிக்கப்பட்டுள்ளது.

பாசிச பாஜக நாட்டு மக்களின் நன்மைக்காகத்தான் உழைத்துக் கொண்டிருப்பதாக நம்பும் அப்பாவிகள் இனியாவது சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கார்ப்பரேட்டுகளுக்கு மக்களின் பணத்தை இப்படி வாரி வழங்குவதால் பாஜக -விற்கு என்ன லாபம்? என்ற கேள்வி அப்பாவிகள் மனதில் எழக்கூடும். ஒரு உதாரணத்தின் மூலமாக இதற்கான பதிலை அவர்களுக்கு தரலாம்.

பிப்ரவரி 29, 2024 அன்று மூன்று செமிகண்டக்டர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக அனுமதி அளித்து, அந்த அறிவிப்பை நரேந்திர மோடி அரசு வெளியிட்டது.  அதில் ஒரு தொழிற்சாலை குஜராத்திலும் மற்றொன்று அசாமிலும் டாட்டா குழுமத்தால் நிறுவப்பட உள்ளது. இந்த இரண்டு மாநிலத்திலும் பிஜேபி தான் ஆட்சியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க:

 எல்ஐசி: மக்கள் சேமிப்பு பணத்தை சூறையாடிய அதானி கும்பல்!
 ஆயுஷ்மான் பாரத் திட்டம்; மோடி அரசுக்கு கிறுக்கு பிடித்துள்ளதா?

இந்த இரண்டு மாநிலங்களில் செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை அமைப்பதற்கான மானிய தொகையாக ரூ. 44,203 கோடியை டாட்டா நிறுவனத்திற்கு கொடுப்பதாக பாசிச பாஜக அரசு அறிவித்துள்ளது. இப்படி அறிவித்தவுடன் டாட்டா குழுமம்  நன்கொடையாக ரூ.757 கோடியை பாரதிய ஜனதா கட்சிக்கு (டாட்டா குழுமத்தால் வழி நடத்தப்படும்  Progressive Electoral Trust மூலம்) கொடுத்துள்ளது. இது பாரதிய ஜனதா கட்சி 2024-25 ஆம் ஆண்டில் பெற்ற மொத்த நன்கொடையில் 83% ஆகும். இப்படி, பாரதிய ஜனதா கட்சி நன்கொடை வசூலில் இவ்வளவு பெரிய பங்களிப்பை வழங்கி (பாஜக அரசின் மூலம் ரூ. 44,203 கோடி மானியத்தை பெறுவதற்கான நன்றியை) பாஜக -விற்கு டாட்டா குழுமம் தெரிவித்துள்ளது.

இதைப் போன்றே இப்பொழுது LIC மூலம், மக்களின் பணத்தை எடுத்து, நட்டத்தில் இயங்கும் அதானியின் நிறுவனத்தில் ரூ 48,284.62 கோடி முதலீடு செய்துள்ளது பாசிச பாஜக அரசு. இதற்கான நன்றியை அதானி நிறுவனம் எப்படி, எந்த அளவிற்கு பாஜகவிற்கு தெரிவிக்கவுள்ளது? என்பது வருங்காலத்தில் நாட்டு மக்களுக்கு தெரிய வரலாம்.

கார்ப்பரேட் கம்பெனிகள் அரசின் மானியத்தை அல்லது அரசின் முதலீட்டை பெற்றுக்கொண்டு இயங்கும் பொழுது பல்வேறு  பொய்க் கணக்குகளை எழுதி (திருடி) ஆயிரக்கணக்கான கோடிகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதும்  அதை வெளிநாடுகளில் இருந்து முதலீடுகள் என்ற பெயரில் அதே கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்றுக் கொள்வதும் ஏற்கனவே அம்பலத்திற்கு வந்துள்ளது.

இப்படி மக்களின் பணத்தை கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளின் சொத்துக்களை பெருக்குவதற்கான அனைத்து உதவிகளையும் பாசிச பாஜக அரசு செய்து வருகிறது. இப்படிப்பட்ட தில்லுமுல்லுகள் மூலமாகத்தான் உலகப் பணக்காரர்கள் வரிசையில் அம்பானி, அதானி வகையறாக்கள் இடம்பெற முடிகிறது.

வாழ்க கார்ப்பரேட்டுகளின் கொள்ளை! வீழ்க அப்பாவி உழைக்கும் மக்களின் வாழ்க்கை!! என்பது தான் பாஜகவின் முதமையான கொள்கை. அதற்கு உட்பட்டு பார்ப்பன மேலாதிக்கத்தை கொண்ட இந்துராஷ்டத்தை அமைக்க வேண்டும் என்பதை திட்டமாக கொண்டு பாசிச பாஜக வெறியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. இதைப் புரிந்து கொண்டு கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்துவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

  •  குமரன்

1 COMMENT

  1. நாட்டின் வளங்களையும் மக்களின் சொத்துகளையும் எண்ணில் அடங்க வகையில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு படையல் வைக்கும் வேலையை தான் பாசிச மோடி அரசு கடந்த 10 ஆண்டுகளாக செய்து வருகிறது.
    இதில் மிகவும் கீழ்த்தரமான மாமா வேலை போல் ஒப்பந்தம் தருகிறேன் அதற்கு நீ தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை கொடு என கேடு கெட்ட வேலையை செய்து வருகிறது.
    இதற்கு மக்கள் தான் முடிவுரை எழுத வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here