சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று (03/12/2025)காலை 10 மணி அளவில் முழுநாள் போராட்டமாக பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம், தமிழ்நாடு பார்வையற்றோர் கைப்பந்து சங்கம், பார்வையற்றோர் ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு பார்வையற்ற இயக்கம் ஒருங்கிணைப்பில் தற்போது தமிழ்நாட்டில் ஆளும்கட்சியாக இருக்கின்ற திராவிடர் முன்னேற்ற கழகம் 2021 சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் அறிக்கையில் அரசு வேலை வாய்ப்புகளில் உள்ள 4 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. அதன் அடிப்படையில் அந்த வாக்குறுதி நிறைவேற்ற வேண்டுமென நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையற்றோர் போராட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து புமாஇமு சார்பில் தோழர் மணியரசன் மாநில செயற்குழு உறுப்பினர் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

சங்கத்தின் சார்பான செய்தி சிறப்பு ஆள்சேர்ப்பு அரசாணை (அ.நி.எண் 20):
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 17 ஏப்ரல் 2023 ஆண்டு சட்டப்பேரவையில், மாற்றுத்திறனாளிக்கான 4 சதவீத இட ஒதுக்கீடு முறையாக கணக்கிடப்பட்டு சிறப்பு ஆட்சேர்ப்பு (Special Recruitment Drive) மூலம் பணி நியமனம் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக 24 ஜூலை 2023 அன்று அரசாணை எண் 20 வெளியிடப்பட்டது.
இந்த அரசாணையின்படி அனைத்து அரசு துறைகளிலும் உள்ள A,B,C,D தொகுதிகளின் மொத்த பணியாளர்களை கணக்கில் கொண்டு 4% இட ஒதுக்கீட்டை வழங்கிட ஓராண்டிற்குள் சிறப்பு ஆட்சேர்ப்பு நடத்தி பணியிடங்களை நிரப்பவும், தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் மாற்றுத் திறனாளிகளை வரன் முறைப்படுத்தவும் (அரசாணை 151 படி) உத்தரவிடப்பட்டது.
அரசின் காலதாமதமும் போராட்டமும்:
அரசாணை 20 வெளியிடப்பட்டு ஆறு மாதங்கள் கடந்தும் பணி வாய்ப்பு தொடர்பாக எவ்வித அறிவிப்பும் வெளியாகததால் 12 பிப்ரவரி 2024 முதல் 27 பிப்ரவரி 2024 வரை கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டோம்.

அப்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வழங்கிய அறிக்கை மற்றும் அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் அரசு இதுவரை மொத்தம் 2010 பணியிடங்களை கண்டறிந்துள்ளதாகவும், கண்டறியும் பணி நிறைவடைந்தவுடன் ஜூலை 2024 இல் சிறப்பு ஆட்சேர்ப்பு நடத்தப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக் கொண்டோம்.
துரோக அரசாணை அ.நி.எண்.24:
அரசாணை 20 வெளியிடப்பட்டு இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையில், பணி நியமனமோ, தொகுப்பூதியத்தில் உள்ளவர்களுக்கு பணி நிரந்தரமோ வழங்கப்படவில்லை. மாறாக 31 அக்டோபர் 2025 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண் 24 மூலம் மாண்புமிகு தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்தது அரசாணை 20 மற்றும் 151 போராட்டத்தின் போது வழங்கிய வாக்குறுதிகள் என அனைத்தையும் பொய்யாக்கி எங்களை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது தமிழக அரசு.
தற்போதைய கோரிக்கை:
மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையை பாதிக்கும் இந்த அரசாணை எண் 24-ஐ உடனடியாக ரத்து செய்து அரசாணை எண் 20-ல் குறிப்பிட்டுள்ளபடி சிறப்பு ஆட்சேர்ப்பு நடத்தி மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டி நாங்கள் கூடி கொண்டாட வேண்டிய இந்நாளில் வீதியில் நின்று நீதிக்காக மண்றாடிக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள இந்த அநீதியை வென்றெடுக்க தாங்கள் ஒவ்வொருவரும் இந்த அறப்போராட்டத்தில் கரம் கோர்க்க வேண்டுமென்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:
தோழர் மணியரசன் மாநில செயற்குழு உறுப்பினர்
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி, சென்னை.
9788149252







இத்தகவல் மட்டும் அல்ல; மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் போராட்டத்தில் தோழர் மணியரசன் சுருக்கமாக பேசினாலும் நறுக்குத் தெரித்தாற் போல் பேசினார். தோழருக்கு வாழ்த்துக்கள்.