டந்த நவம்பர் 24 அன்று ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகரப்புற விவகார அமைச்சகம் கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்துக்கான அனுமதி மறுத்துள்ளது. அதற்குக் காரணமாக 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும்‌ நகரங்களுக்குத்தான் மெட்ரோ ரயில் சேவை வழங்க முடியும். ஆனால் கோவை மற்றும் மதுரை நகரங்களில் முறையே 15.84 லட்சம் மற்றும் 14.7 லட்சம் மக்கள்தான் வசிக்கிறார்கள் என்ற 2017-ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் கொள்கை அடிப்படையில் மறுத்துள்ளதாகத் தெரிவித்தது.

பார்ப்பன-பனியா கும்பலுக்கு தமிழ்நாடு, தமிழர்கள் மீதான வன்மம் உலகறிந்தது என்றாலும் ஒன்றியத்தில் ஆர்எஸ்எஸ்-பாஜக பாசிஸ்டுகள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய GST இழப்பை கொடுக்காமல் இருப்பது, GST பங்கீட்டுத் தொகையைக் குறைத்து வழங்குவது, கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்தி வைப்பது, பேரிடர் நிவாரண நிதியை தர மறுப்பது என்று பல்வேறு வழிகள் தங்களது வன்மத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.

கடந்த 15 வருடங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நிறுத்தி வைத்திருக்கும் இந்த பாசிஸ்டுகள் கடைசியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை அடிப்படையில் மேற்கண்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி மறுத்துள்ளனர். அது மட்டுமல்லாமல் கோவை, மதுரையை விட மக்கள் தொகை குறைவான தாங்கள் ஆளும் மாநிலங்களில் உள்ள நகரங்களுக்கு குறிப்பாக உத்தர பிரதேசத்தின் கான்பூர், லக்னோ, ஆக்ரா, குஜராத்தில் உள்ள சூரத், மத்திய பிரதேசத்தில் உள்ள போபால், இந்தூர் ஆகிய நகரங்களில் 20 இலட்சம் மக்கள் தொகை என்ற விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு இந்த இரண்டாம் அடுக்கு நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளனர். தேர்தலில் வெல்வதற்காக நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மெட்ரோ ரயில் திட்டங்கள் கடுமையான நட்டத்தில் இயங்கி வருவதாக தற்போது செய்திகள் வருகின்றன. இதில் குறிப்பாக உத்திரப்பிரதேசத்தின் UPMRC நிறுவனமானது ஆண்டுதோறும் 1700 கோடிகள் நஷ்டத்தை சந்தித்து வருவதாக CAG அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. இதில் இன்னும் கொடுமையாக வாரநாட்களில் peak hour நேரத்தில் கூட வெறும் 30 பேருடன் கான்பூரின் மெட்ரோ ரயில் இயங்கி வருவது சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.

படிக்க:

 வட மாநில தொழிலாளர்களின் ரயில் பயணங்களும் அவர்கள் படும் துயரங்களும்!

 கோவையில் இனி காசுக்கே தண்ணீர்! வானதி சீனிவாசன் முன்னெடுக்கும் தண்ணீர் விற்பனை ATM!

ஆனால் தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் தொழில் நகரமான கோவைக்கும், கோவில் நகரமான மதுரைக்கும் காலாவதியாகிப்போன புள்ளிவிவரத்தின் அடிப்படையில் மெட்ரோ ரயிலை மறுப்பதன் மூலம் தங்களுக்கு ஓட்டு போடாத, தங்களை அங்கீகரிக்காத தமிழக மக்கள் மீது பாசிஸ்டுகள் கொண்டுள்ள வன்மம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது.

கோவையை மையமாகக் கொண்டுள்ள கொங்கு மண்டலத்திலும், மதுரையை மையமாகக் கொண்டுள்ள தென்மாவட்டங்களிலும் அதிக சட்டமன்ற உறுப்பினர்களை அதிமுகவுக்குக் கொடுத்துள்ள அம்மாவட்ட மக்களை பொருளாதார ரீதியில் மிகப்பெரும் பாய்ச்சலுக்குக் கொண்டு போகும் மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி மறுத்து துரோகமிழைக்கும் பாசிச கும்பலுடன் கூட்டணி சேர்ந்துள்ள அதிமுக அடிமைகள் இதற்கும் திமுக-வை குறை சொல்லிக்கொண்டு தங்கள் எஜமானர்களின் காலடியைச் சுற்றி வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தங்கள் காலடியின் கீழ் அடிமைகளாக உழல வேண்டும், தங்கள் மேலாதிக்கத்தை எதிர்க்கும் மக்கள் நாசமாய்ப் போகவேண்டும் என்ற பாசிஸ்டுகளின் எண்ணத்தையே கோவை தெற்கு தொகுதி பாசிச பாஜக எம்எல்ஏவான வானதி சீனிவாசன், “2026-ல் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்தால் கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் கொண்டு வரப்படும்.” என்று வெளிப்படுத்தியிருக்கிறார். நாளை இதே கும்பல்தான் ஓட்டு கேட்டு மக்களிடம் வரப்போகிறார்கள். அவர்களின் சட்டையைப்பிடித்து கேள்விகேட்டு விரட்டியடிக்கும் வகையில் மக்களைத் தயார் செய்வோம்.

  • ஜூலியஸ்

1 COMMENT

  1. சட்டையைப் பிடித்து மட்டுமல்ல கன்னத்தில் அறைந்து கேள்வி கேட்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here