புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ராஜூ அவர்களிடம் தரக்குறைவாக நடந்துகொண்ட நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அந்த ஊடகவியலாளரைக் கடுமையாகத் தாக்கியுள்ள அக்கட்சியினரையும் தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புதுச்சேரி காவல்துறையை வலியிறுத்துகிறது.

புதுச்சேரியில் இன்று காலை (23-11-2025) நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி செய்தியாளர் திரு. ராஜு, திரு. சீமான் அவர்களிடம் SIR (Special Intensive Revision)ஐ தேர்தல் ஆணையம் தானே நடத்துகிறது, அதில் மாநில அரசைக் குறை சொல்லமுடியுமா? என்று கேட்டுள்ளார். அதற்கு அச்செய்தியாளரை ஒருமையில் பேசி, மிகவும் தரம் தாழ்ந்து மிரட்டிய சீமானை தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

படிக்க:

 மாடு மேய்க்கும் போராட்டம் நடத்திய கோமாளி சீமான்!

 சீமான் முன் வைப்பது தமிழ் தேசியமா?

தமிழ் ஊடகவியலாளர்களைத் தொடர்ந்து பல்வேறு பிரஸ் மீட்களில் ஒருமையில் பேசுவதையும் வசைபாடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ள திரு. சீமான், இந்த நிகழ்விலும் கேள்வி எழுப்பிய ஒரு ஊடகவியலாளரை மூர்க்கமாகக் கையாண்ட போதும், உடனிருந்த ஊடகவியலாளர்கள் தமது கண்டனத்தைப் பதிவு செய்யாதிருந்தது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் பேசுவதை அப்படியே கேட்டுக் கொண்டு நிற்க அது செய்தியாளர் சந்திப்பா? கதாகாலட்சேபமா? எதிர் கேள்விகளும் குறுக்குக் கேள்விகளும் விளக்கமும் கேட்கவே கூடாது என்றால் அது செய்தியாளர் சந்திப்பே கிடையாதே?

மேலும் செய்தியாளர் சந்திப்பு முடிந்ததும் ஊடகவியலாளர் திரு. ராஜூவை நாம் தமிழர் கட்சியினர் கழுத்தை நெறித்துத் தாக்க முயன்றனர் என்பது இன்னும் அதிர்ச்சியளிக்கிறது. பட்டப் பகலில் மக்கள் மத்தியில் இப்படி ஒரு கொடூரத்தை அரங்கேற்ற அவர்களுக்கு எங்கிருந்து துணிவு வருகிறது? உடனடியாகப் புதுச்சேரி காவல்துறையினர் சீமான் உள்ளிட்டோர் மீது கொலை மிரட்டல் புகாரில் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், காலம் தாழ்த்தாமல் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். #tndju

தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம்
– tndjumail@gmail

1 COMMENT

  1. திரள் நிதிக் கொள்ளையன்; கோயபலஸ்சை மிஞ்சிய புளுகன்; பாலியல் பொறுக்கி; சங்கி என்றால் ‘நண்பன்’ ‘தோழன்’ என்று புது வியாக்கியானம் கொடுத்து காவியில் கரைந்தவன்; செப்பிடு வித்தைப் பேச்சுக்காரன்…. இவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊடகவியலாளர்கள் ஊதி பெருக்குவதை நிறுத்திக் கொள்வதே சாலச் சிறந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here