தமிழர்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் மோடி&கோ!
ஆட்சி செய்பவர்கள் தொழில்துறை, விவசாயத்துறையில் வளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தால் அவர்கள் தமிழ்நாட்டிற்கு அல்லது தென் மாநிலங்களுக்கோ செல்ல வேண்டிய அவசியம் இருந்திருக்காது. இதனை உணர்ந்து பாஜகவிடம் கேள்வி எழுப்புவார்களேயானால் பீகார் மட்டுமல்ல இந்தியாவே பாசிஸ்டுகளுக்கு எதிராக கிளர்ந்தெழும்.

பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மோடி கர்நாடகா, தெலுங்கானா, காங்கிரஸ் தலைவர்கள் பீகார் மக்களை அவதூறு செய்கின்றனர். தமிழ்நாட்டில் கடினமாக உழைக்கும் பீகார் மக்களை திமுக துன்புறுத்துகிறது என்று பொய்யை பேசி உள்ளார். இது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களை இழிவு படுத்துவதும், பிளவுபடுத்தும் அரசியல் செய்வதும் பாஜகவுக்கு புதிதல்ல என்றாலும் இப்படியான பேச்சுக்கள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள இனவெறியர்களை தூண்டிவிட்டு பீகார் மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளார் பாசிச மோடி.

ஒடிசா தேர்தலின் போது “பூரி ஜெகநாதர் கோவிலின் கருவறை சாவி தமிழ்நாட்டில் உள்ளது” என வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பிரதமர் மோடி. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா  “தமிழன் ஒடிசாவை ஆளலாமா?” என்று பிளவுபடுத்தும் அரசியல் செய்தார். இந்த பிரிவினைவாதம் கை கொடுத்ததன் விளைவு தான், ஒடிசாவில் பாஜக  ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. அதே பார்முலாவை தற்போது பீகாரில் கையாளுகிறார்கள்.

தமிழ்நாட்டில் சங்பரிவார் அடிபொடிகள் திமுகவை தானே மோடி கூறினார், நீங்கள் ஏன் தமிழர்களை என திசை திருப்பி இருக்கிறீர்கள், என முட்டு கொடுக்கிறார்கள். மோடி பேசியதை புரிந்து கொள்ளாத அளவிற்கு தமிழ்நாட்டில் உள்ள மக்கள் தற்குறிகள் இல்லை. பாஜகவின் வெறுப்பு அரசியலை மக்கள் நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்கள். பீகார், ஒடிசாவில் தமிழனை எதிரியாக சித்தரிப்பவர்கள் தமிழ்நாட்டிற்குள்  தெலுங்கர்களை எதிரியாக சித்தரிப்பார்கள்.

ஆர் எஸ் எஸ் – பாஜகவின் மைய அரசியலே பிளவுபடுத்தும் அரசியல் தான். அதனை இடத்திற்கு ஏற்றார் போல் மாற்றி பேசுவார்கள். இந்துவுக்கு எதிராக இஸ்லாமியர்களை எதிரியாக சித்தரிப்பது, மேற்குவங்கம் என்றால் வங்காள முஸ்லிம்களை எதிரியாக்குவது இப்படி மாநிலத்திற்கு ஏற்ப வெறுப்பு அரசியல் பேசியே ஆட்சியை தக்க வைப்பதும், மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றுவதும் பாஜகவின் வேலை திட்டம்.

“வந்தாரை வாழவைக்கும் தமிழகம்” என தமிழ்நாட்டைக் கூறுவார்கள். தமிழ்நாட்டில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிழைப்பிற்காக தினந்தோறும் வந்து கொண்டிருக்கிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்களை போல் தமிழ்நாட்டில் மத கலவரங்கள் நடப்பது கிடையாது. மத நல்லிணக்கம் மட்டுமல்ல சமூக நல்லிணக்கமும் பேணும் மாநிலமாகவே தமிழ்நாடு உள்ளது. உழைக்கும் மக்களை சாதி, மத, இனரீதியாக பிளவுபடுத்தும், பிரித்துப் பார்க்கும் பிற்போக்கு மனநிலை தமிழ்நாட்டில் குறைவு. ஆகையால் தான் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் விரும்புகிறார்கள். மேலும் தாங்கள் விரும்பும் உணவை உண்ணும் உரிமையும், கோவிலுக்குள் சாதிவேறுபாடின்றி நுழையும் சுதந்திரம் அவர்களுக்கு உண்டு.

படிக்க:

 ஒடிசாவின் நவீன் பட்நாயக் தோல்வியும்!  பாசிச பாஜகவின் மோசடியா(மா)ன வெற்றியும்!

 தமிழ் பாடும் ‘தருமி’யே போற்றி! (மோடியை திட்டுவதை கைவிட்டு புகழ்ச்சி அகவல் பாடிய நண்பர்களுக்கு வாழ்த்துகள்)

பீகார் மக்கள் விழித்துக் கொண்டார்களானால் மோடி பீகாருக்கு உள்ளேயே நுழைய முடியாது. தற்போது பீகாரில் ஆட்சியில் இருப்பது பாஜக கூட்டணி அரசுதான். ஆட்சி செய்பவர்கள் தொழில்துறை, விவசாயத்துறையில் வளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தால் அவர்கள் தமிழ்நாட்டிற்கு அல்லது தென் மாநிலங்களுக்கோ செல்ல வேண்டிய அவசியம் இருந்திருக்காது. இதனை உணர்ந்து பாஜகவிடம் கேள்வி எழுப்புவார்களேயானால் பீகார் மட்டுமல்ல இந்தியாவே பாசிஸ்டுகளுக்கு எதிராக கிளர்ந்தெழும்.

2023 எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில் “ஒரு கோடி குடும்பங்கள் ஒரு நாளைக்கு ரூ.200 அல்லது அதற்கும் குறைவான வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வருவதாக” புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. வறுமை, வேலையின்மையில் முன்னிலையில் உள்ள மாநிலமாக பீகார் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மோடி ஆட்சியை தாங்கிப் பிடிக்கும் நிதிஷ்குமார் தான் பீகார் முதலமைச்சராக உள்ளார். ஆனாலும் ஒரு முன்னேற்றமும் இல்லை.

பீகார் இந்தியாவின் மிகவும் வறுமையான மாநிலங்களில் ஒன்று. பல தரவுகள் (NITI Aayog’s Multidimensional Poverty Index 2023) படி, பீகாரில் சுமார் 33% மக்கள் வறுமையிலுள்ளனர், இது தேசிய சராசரியான 11–12% ஐ விட மூன்று மடங்கு அதிகம். வேலையின்மையால் படித்த இளைஞர்கள் வேலைத்தேடி தென்மாநிலங்களை நோக்கி புலம்பெயர்ந்து வருகிறார்கள்.

சாலைகள், மின்சாரம், குடிநீர், மருத்துவம் போன்ற துறைகளில் இன்னும் பின்தங்கியுள்ளது. கிராமப்புறங்களில் பல இடங்களில் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளன. ஊழல், நிர்வாக சோம்பேறித்தனம், அரசியல் நிலைத்தன்மை குறைபாடு போன்றவை பீகாரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளன.

பீகாரின் வளர்ச்சியை சொல்லி ஓட்டுக் கேட்க ஒன்றுமில்லை.  SIR மூலம் தனக்கு எதிரானவர்களின் வாக்குரிமையை பறித்தும் நிலைமை பாஜகவுக்கு எதிராக இருப்பதால்  தான் கேவலமான முறையில் மக்களை பிளவுப்படுத்தும் அரசியலை மோடி பேசுகிறார்.

தமிழ்நாடு தெலுங்கானா கர்நாடகா இந்த மூன்று மாநிலங்களிலும் திமுக மற்றும் காங்கிரசின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது ஆந்திராவில் பாஜக கூட்டணி ஆட்சி. ஆகையால் தான் 3 மாநிலங்களை மட்டும் குறிப்பிட்டு வெறுப்பு அரசியல் செய்வது மூலம் பீகார் மக்களின் ஓட்டை அறுவடை செய்யலாமென திட்டமிட்டுகிறார்கள். ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் அதிலிருந்து தப்பிப்பதற்கு சங் பரிவார் கும்பலுக்கு வெறுப்பு அரசியல் தேவைப்படுகிறது.

தமிழ்நாட்டைப் பற்றியும் தமிழர்களைப் பற்றியும் பீகார் மக்கள் நன்கறிவார்கள். வெளிமாநிலத்தவராக இருந்தாலும் சகோதரத்துவத்துடன் பழகும் பண்பை முற்போக்கு அரசியலின் விளைவால் தமிழகம் பெற்றுள்ளது. ஆகையால்  மோடியின் இந்த வெறுப்பு அரசியல் பீகார் மக்களிடம் எடுபடாது. பீகார் மட்டுமல்ல இந்தியாவிலிருந்தே விரட்டியடிக்கப்பட வேண்டிய கட்சிதான் பாஜக.

  • நலன்

4 COMMENTS

  1. பாசிஸ்டுகள் தங்களின் அரசியல் சுய லாபத்திற்காக படும் பாதக செயலையும் செய்வார்கள் என்பதை தான் ஒவ்வொரு தேர்தலும்,மோடி அரசின் சட்ட திருத்தங்களும் நமக்கு உணர்த்துகிறது.
    பாஜக ஒரு தேர்தல் கட்சி அல்ல அது ஆர் எஸ் எஸ் கொலைவெறி படையாகும் இவை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்.

  2. மோடி & கோ-வின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி அம்பலப்படுத்தி தோழர் நலன் எழுதிய கட்டுரை சிறப்பு. வாழ்த்துக்கள்.

    ஆர் எஸ் எஸ் பாஜக இந்துத்துவ சங்பரிவார்
    கும்பல் மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை முன்னிறுத்தி செயல்படும் அரசியல் நோக்கம் ஏதுமற்ற, மதவெறி -சாதிவெறி – கார்ப்பரேட் நலவெறி கொள்கைகளை மட்டுமே தன்னகத்தே கொண்டு செயல்படும் கும்பலாக சீரழிந்து விட்டார்கள். மோடி அமித்ஷா மட்டுமல்ல;
    ஒன்றிய கல்வி அமைச்சர் கொழுப்பெடுத்த தர்மேந்திர பிரதான் ஒருமுறை (பாராளுமன்ற விவாதத்தில் தமிழக எம்பிக்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை
    அடுக்கிய பொழுது) ‘தமிழர்கள் எப்பொழுதுமே நாகரிகம் அற்றவர்கள்’ என்ற கடும் சொற்களை பயன்படுத்தியதும், அதற்கு தமிழக எம்பிக்கள் கடுமையான கண்டனம் தெரிவித்த பின்பு மன்னிப்பு கோரியதும் நாம் அறிந்ததே. இவ்வாறாக அங்கிங்கெனாதபடி – தலை குப்புற நின்று பார்த்தாலும் தமிழ்நாட்டில் தடம் பதிக்க இயலாத காரணத்தினால் வாய்க்கு வந்த வசவுகளை சங்கிக் கூட்டம்தொடர்ந்து கொட்டிக் கொண்டே இருக்கிறது. கட்டுரையாளர் குறிப்பிட்டுச் சொன்னதைப் போல தமிழிசை, நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை
    போன்றவர்கள் எல்லாம் பிரதமர் திமுகவினுடைய பீகார் விரோத செயல்களை தான் கண்டனம் செய்தாரேயொழிய ஒட்டுமொத்த தமிழர்களையும் இழிவுபடுத்தவில்லை என்பதாக துளியும் வெட்கமின்றி மோடிக்கு முட்டுக் கொடுக்கிறார்கள்.

    ஆனால் மோடி தமிழ்நாட்டுக்கு வந்து விட்டால் தமிழில் வணக்கம் கூறுவதும், பாரதியாரின் கவிதைகளில் இரண்டு வரிகளை ‘தக்கர பொக்கர’ என்று உளறுவதும், திருக்குறளில் ஒரு வரியை தட்டுத்தடுமாறி உளறிக் கொட்டுவதும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு பாடம் எடுப்பதும், தமிழ்நாட்டு பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டு அணிந்து
    சிறப்பான வேடம் பூணுவதும் நாம் அறிந்ததே.

    நானே சில கட்டுமானப்பணி பீகார் தொழிலாளர்களுடன், வணிக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுடன் விருப்பத்துடன் பேசி இருக்கின்றேன். அவர்கள் கண்ணீர் மல்க நிரம்ப கூறுகிறார்கள். ‘தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு தான் நாங்கள் எங்கள் வாழ்க்கையில் இந்த அளவிற்காவது உயர்வினை எட்ட முடிந்திருக்கிறது; எங்களால் கூடுதலாகவே மிச்சப்படுத்தி பீகாரில் இருக்கும் எங்கள் குடும்பத்தினருக்கு மாதம்தோறும் தொகை அனுப்ப முடிகிறது; குடும்பத்துடன் இங்கே வசிக்கும் நாங்களும் கல்வி மருத்துவம் உட்பட சகல வழிகளிலும் சிறந்த வசதிகளை
    பெற்று சிறப்புற வாழ்கிறோம். பீகாரில் எங்களுக்கு வாரத்திற்கு இரண்டு நாள் அல்லது மூன்று நாட்கள் தான் அதுவும் நாள் ஒன்றுக்கு 200 அல்லது 300 ரூபாய் அளவில்
    ஊதியத்துடன் வாழ்ந்து வந்தோம். இப்பொழுது தமிழ்நாட்டுக்கு வந்த பிறகுதான் நாள்தோறும் ஒரு நாள் விடாமல் தலா ரூபாய் 1000 சம்பாதிக்கிறோம். கூடுதலான உழைப்பினைச் செலுத்துகின்ற பொழுது ரூ.200 முதல் ரூ.300 கூடுதலாகப் பெறுகிறோம். எனவே எங்களைப் பொருத்தமட்டில் பீகார் வாழ்க்கையை விட
    தமிழ்நாட்டில் நாங்கள் வாழ்வது என்பது ஏதோ வெளிநாட்டில் நல்ல நிலையில் சம்பாதிக்கின்றோம் என்ற மன நிலையில் தான் வாழ்கிறோம்; பீகாரில் எங்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைத்திருந்தால் நாங்கள் எதற்காக ஆயிரம் இரண்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து உழைக்க வேண்டும்?
    எனவே, மோடி ஏதாவது உளறுவது எந்த வகையிலும் நியாயம் அல்ல; நாங்கள் எந்த துன்ப துயரங்களுக்கும் ஆளாகாமல் நிம்மதியாக வாழ்வதை அவர்கள் கெடுக்கப் பார்க்கிறார்கள்…’ என்பதாக மனம் திறந்து பேசுகிறார்கள்.

    இவை யாவும் உண்மையும் கூட. நிலைமைகள் இவ்வாறு இருக்கின்ற பொழுது, மோடி அண்ட் கோ இந்த அளவிற்கு பொய்யையும், புனைச்சுருட்டையும் பரப்புவதும், அதற்கு தமிழ்நாட்டு அல்லக்கைகள் முட்டுக்கொடுத்து நிற்பதும் வன்மையாக கண்டனத்திற்குரியது. இவ்விதமான தரம் தாழ்ந்த செய்கைகளை
    உடையோருக்கு எதிராக கட்சி பேதமின்றி ஒன்றிணைவதும் அவர்கள் பின்னால் தமிழக மக்கள் அணி திரண்டு அவர்களை முறியடிக்க வேண்டியதும் அனைவரது கடமையும் ஆகும். தமிழ்நாட்டில் காவிக் கூட்டம் அல்லது அவர்களின் எடுபிடிக கூட்டம் எக்காலத்திலும்தமிழ் மண்ணில் தடம் பதிக்க அனுமதிக்கவே கூடாது என்ற வைராக்கியத்தை தமிழ் மக்கள் என்றும் மனதில் நிறுத்தி கடமையாற்றிட வேண்டும்.

  3. மோடி & கோ-வின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி அம்பலப்படுத்தி தோழர் நலன் எழுதிய கட்டுரை சிறப்பு. வாழ்த்துக்கள்.

  4. பீகார் மக்களிடம் தமிழகத்தில் உள்ள பீகார் தொழிலாளர்களை இழிவு படுத்துவதாகவும் கொடுமைப்படுத்துவதாகவும் கேவலம் தேர்தல் ஆதாயத்திற்காக அப்பட்டமாக ஒரு பொய்யை சொல்லி பீகார் மக்களிடம் வன்முறையை தூண்டும் அளவிற்கு ஒரு நாட்டின் பிரதமர் பேசுவது என்பது வெட்கக்கேடானது இந்த வெட்கக்கேடான வார்த்தைகளையும் பயன்படுத்தி மக்களை பிளவுபடுத்துவதில் ஆர் எஸ் எஸ் பி ஜே பி சங் பரிவாரக் கும்பல் கைதேர்ந்த கலையாக செயல்படுகிறார்கள் ஒடிசா மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பூரி ஜெகநாதர் கோயிலில் கருவறை சாவி தமிழகத்தில் உள்ளது என அப்பட்டமாக ஒரு பொய்யை சொல்லி வாக்கு சேகரித்தார் அமித்ஷா இப்படிப்பட்ட இழிவான பிறவிகள் தான் நம் நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிறார்கள் உடைக்கும் மக்களாகிய நாம் தமிழகத்தில் இருக்கும் வட மாநில தொழிலாளர்களை சகோதர சகோதரிகளாகவும் மத நல்லிணக்கத்தோடு ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இந்த ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக நாட்டின் பிரதமர் மோடி பேசுவது என்பது அயோக்கியத்தனம் தமிழக மக்கள் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்துக்கு ஓட்டுப் பொறுக்க மோடி வரும்பொழுது துரத்தி அடிக்க தயாராக இருக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here