உத்திரப்பிரதேசம்:
பதினாறு வயது முஸ்லிம் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த சங்கிகளைக் காப்பாற்றும் உ.பி. பாஜக அரசு!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரில் கன்வார் யாத்திரை சென்ற இந்துமத வெறியர்கள் மூன்று பேர் ஜூலை 28 அன்று 16 வயது முஸ்லிம் சிறுமியை அடித்து மிரட்டி தங்களின் பிறப்புறுப்பை காட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். இந்த சம்பவத்திற்குள் செல்லும் முன் கன்வார் யாத்திரை என்பது என்ன என்பதை பற்றி சுருக்கமாக பார்த்து விடுவோம்.
டெல்லி, உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள இந்துக்கள் கால் நடையாக சென்று கங்கை நதியில் இருந்து நீரை எடுத்து வந்து தங்கள் பகுதியில் உள்ள கோவிலில் சிவன் சிலையின் மீது ஊற்றி வழிபடும் நிகழ்வுக்கு பெயர் தான் கன்வார் யாத்திரை. இந்த யாத்திரை இந்த மாதம் ஜூலை 11 இல் இருந்து ஜூலை 23ஆம் தேதி வரை நடைபெறுகிற்றது. சமீப காலமாக கோடிக்கணக்கான மக்கள் இந்த யாத்திரையில் ஈடுபடுகின்றனர்.
இந்த யாத்திரையில் சென்ற இந்து மத வெறியர்கள் மூன்று பேர் வாரணாசி நகரில் ரஜதலாபாத் பகுதியில் உள்ள ராணி பஜாரில் காலணிகள் விற்கும் கடைக்குள் புகுந்து அறுவெறுக்கத் தக்க வகையில் ஆபாசமாக பேசி அங்கு இருந்த 16 வயது இஸ்லாமிய சிறுமியை ஆபாசமாக தடவியுள்ளனர். அந்த சிறுமி இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கத்திக் கூச்சலிட்டு இவர்களிடம் இருந்து விடுபடுவதற்கு போராடும் பொழுது அடித்து, மிரட்டி, தங்களின் பிறப்புறுப்பை காட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் அந்த சிறுமி அவர்களிடம் இருந்து தப்பித்து தனது வீட்டை நோக்கி கடை வீதி வழியே ஓடிய பொழுது இந்த வெறியர்களும் தங்கள் கைகளில் தடிகளுடன் துரத்திக் கொண்டு சென்றுள்ளனர்.
அதிர்ச்சி அடைந்த சிறுமி கடைவீதி வழியே ஓடி வருவதும் அந்த சிறுமியை இந்து மத வெறியர்கள் துரத்தி வருவதும் தெளிவாக சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காணொளிகள் வெளிவந்துள்ளன.
ஓடி வந்த அந்தச் சிறுமி தனது வீட்டிற்குள் சென்ற பொழுது துரத்தி வந்த இந்து மத வெறியர்களில் ஒரு வெறியன் அந்த சிறுமியின் வீட்டிற்குள்ளே சென்று அந்த சிறுமியை பிடிக்க முயன்றுள்ளான்.
மன அதிர்ச்சி அடைந்த நிலையில் ஓடி வரும் சிறுமியை இந்து மத வெறியர்கள் துரத்தி வந்ததைக் பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் அந்த மூன்று பேரையும் பிடித்து நைய புடைத்துள்ளனர்.
இதன் பிறகு அந்தப் பகுதியில் இருக்கும் ஒட்டுமொத்த இந்து மத வெறி அமைப்புகளைச் சேர்ந்த அனைவரும், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இந்துமத வெறியர்களை காப்பாற்ற அங்கு ஒன்று கூடி விட்டனர். இஸ்லாமியர்கள் வாழும் அந்தப் பகுதியில் மக்கள் கூட்டத்தை அலை கடலென திரட்டி
ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கடைவீதியில் நிறுத்தி கடைவீதியையே ஸ்தம்பிக்கச் செய்துவிட்டனர். கைகளில் இரும்பு ராடுகளையும் தடிகளையும் ஏந்திய படி இந்து மத வெறியர்கள் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று முழக்கம் இட்டுள்ளனர்.
பிறகு காவல்துறை வந்துள்ளது. பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இந்துமத வெறியர்களை கைது செய்வதற்கு பதிலாக, இவர்களால் பாதிப்பிற்குள்ளான 16 வயது சிறுமியின் வீட்டில் உள்ளவர்களையும் அவர்களது உறவினர்களையும் அதுவும் 80 வயதுடைய இதய நோயாளியையும் கைது செய்து அழைத்துச் சென்று விட்டனர்.
இப்படி கைது செய்யப்பட்ட இஸ்லாமியர்கள் மீது 191(2): கலவரத்தில் ஈடுபடுதல் (Rioting)
115(2): வேறொருவருக்கு தெரிந்தே காயம் ஏற்படுத்துதல் (Voluntarily causing hurt)
181(1): ஆபத்தான ஆயுதங்களால் அல்லது முறைகளால் பெரிய காயம் ஏற்படுத்துதல் (Grievous hurt with dangerous weapons)
309: குற்ற நிகழ்ச்சியின் போது வன்முறை அல்லது அதற்கான மிரட்டலில் ஈடுபட்டது (Violence or threat during crime)
333: காயம் ஏற்படுத்தும் நோக்குடன் வீடுகற்கும் நுழைதல் (House-trespass with intent to hurt/assault)
351(2): தாக்குதல் மற்றும் குற்றச்சாட்டுகள் மற்றும் மிரட்டல் (Assault, criminal intimidation)
352: அமைதி குலைவு ஏற்படுத்தும் நோக்கத்துடன் கொச்சைப்படுத்துவது(Intentional insult to provoke breach of peace)
ஆகிய பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தனையும் செய்தவர்கள் இந்து மத வெறியர்கள். இவர்கள் சிறுமியை துரத்தி வரும் காணொளி ஆதாரம் இருந்த பொழுதும் இந்து மத வெறியர்கள் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லை. ஆனால் இஸ்லாமியர்கள் மீது வழக்கு பாய்கிறது. இதுதான் பாஜகவின் ராம ராஜ்ஜியம். அப்பாவி மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
அப்பாவி மக்கள் இதைவிட ஆச்சரியப்படத் தக்க ஒன்று உள்ளது. சிறுமியை விரட்டி வந்த இந்துமத வெறியர்களை தடுத்து சிறுமியை காப்பாற்ற இஸ்லாமியர்கள் சிலர் முயன்றனர். அந்த இஸ்லாமியர்கள் மீது அப்பாவி கன்வார் யாத்திரிகர்களை (அதாவது சிறுமியை துரத்தி வந்த அப்பாவி இந்துமத வெறியர்களை) மதமாற்றம் செய்வதற்கு முயற்சித்ததாக, “உத்தரப்பிரதேச சட்டவிரோத மதமாற்றத் தடைச் சட்டம் 2021” கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
படிக்க:
♦ கன்வார் யாத்திரை மூலம் இஸ்லாமிய மத வெறுப்பை வளர்க்கும் பாஜக அரசுகள்!
இந்தப் பகுதியில் உள்ள சில இந்துக்கள் இஸ்லாமிய சிறுமிக்கு இந்துமத வெறியர்கள் கொடுத்த தொல்லைகள் குறித்து பிறருக்கு எடுத்துக் கூறிவந்த நிலையில் அவர்களை இந்துமத வெறியர்கள் மிரட்டி பேசவிடாமல் செய்துள்ளனர். இவ்வளவு மதவெறி பிடித்த இடத்தில் இருக்கும் இந்துக்களில் சிலர் இப்படி நியாயத்திற்காக பேச முனைந்தது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
சிறுமியின் நியாயத்திற்காக பேசும் இஸ்லாமியர்களை இந்து மத வெறியர்களுக்கு எதிராக பேசக்கூடாது என்று காவல்துறையினர் மிரட்டி வருகின்றனர். கடைவீதியில் உள்ள பிற கடை உரிமையாளர்களையும் போனில் அழைத்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக யாரேனும் பேசினால் அவர்களின் கடைகள் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்படும் என்று மிரட்டி வருகின்றனர். ஒரு புல்டோசரை உண்மையாகவே தெருவின் முனையில் கொண்டு வந்து நிறுத்தி தாங்கள் சொல்வதை செய்வோம் என்பதை உத்தரப் பிரதேச காவல்துறையினர் அனைவருக்கும் உணர்த்திய வண்ணம் இருக்கின்றனர்.
இந்துமத வெறி அமைப்பைச் சேர்ந்தவர்கள் அந்தப் பகுதியை (ராஜதலாபாத் பகுதியை) சுற்றி வந்த வண்ணம் இருக்கின்றனர்.
மக்களிடையே இந்து இஸ்லாமியர் என்ற பிரிவினை ஏற்படுத்தி மக்களை மதரீதியாக மோத விடுவது பாஜக ஆர் எஸ் எஸ் பாசிஸ்டுகளின் வழக்கமாக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மனுதர்மத்தின் ஆட்சியை கொண்டு வரவேண்டும் என்றும் இந்தராஷ்டரத்தை – ராமராஜியத்தை அமைத்து பார்ப்பன, மேல் சாதியினருக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் சொர்க்கமாக இருக்கும்படியான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும் ஆர் எஸ் எஸ் பாஜக பாசிஸ்டுகள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு சொர்க்கம் அமைக்கப்பட்டால், உழைக்கும் மக்களான தொழிலாளர்கள் – விவசாயிகளுக்கும் சூத்திர – பஞ்சம சாதியை சேர்ந்தவர்களுக்கும் அது நரகமாகத்தான் இருக்கும்.
இந்தியா முழுவதும் அவர்களின் ராமராஜ்ஜியம் வரவேண்டுமா? அல்லது பாஜக ஆர் எஸ் எஸ் இன் ஆதிக்கம் வீழ்ந்து இந்தியாவில் ஜனநாயகம் மலர வேண்டுமா? என்பதை, அப்பாவி இந்துக்களே, முடிவு செய்யுங்கள்.
— குமரன்
செய்தி ஆதாரம்: Thewire







ஒரு மாநிலத்தில் இப்படி எல்லாம கொடுமை நடைபெறும் என்று சொல்லும் அளவிற்கு பாசிச சங்பரிவார் காவி கூட்டம் அந்த அப்பாவி 16 வயது இஸ்லாமிய சிறுமிமீது
பாலியல் துன்புறுத்தலை மேற்கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னால் அடிவயிறு எரிகிறது. ஓட ஓட விரட்டிச் சென்று அந்தச் சிறுமியை மரண பீதிக்கு உட்படுத்தி விட்டு, சி சி டி வி கேமராக்கள் அனைத்தும் இதற்கு ஆதாரங்களாக இருந்தும் பாதிக்கப்பட்ட சிறுமியின்குடும்பத்தினர் மீதே
பல்வேறு பிரிவுகளில் ‘சாமியார்’ யோகி ஆதித்யநாத்தின் காவல்துறை வழக்குத் தொடாத்தா, விதிகளில் புல்டோசரை நிறுத்தி பீதியூட்டியும், சிறுமியை காப்பாற்ற முடிந்த இஸ்லாமியர்கள் மீது மதமாற்ம் செய்யும் முற்பட்டார்கள் என்ற பொய்க்குற்றம் சுமத்தி சயராட்டம் போடுகிறார்கள் என்று சொன்னால் இது நாடா? சுடுகாடா? எனப் புரியவில்லை ன. Wire-ல் வெளியான ஆதாரங்களைக் கொண்டு தோழர் குமரன் பிரச்சனைகளின் துயரத்தை அனைவரும் ஆழமாக புரியும் வண்ணம் அம்பலப்படுத்தியுள்ளார். சிறப்பு. கார்ப்பரேட் கவிப் பாசிசத்தை முறியடிக்க அகில இந்திய
அளவில் ஜனநாயக சக்திகளும், புரட்சிகர இயக்கங்களும் மக்களை அணி திரட்டும் பணியில் இறங்கி வீதி போராட்டங்கள் மூலமே அவர்களை நிர்மூலமாக்க முடியும்.
தவிர பாராளுமன்ற போலி ஜனநாயகம் மூலம் அவர்களை முறியடிப்பது என்பது சாத்தியப்பாடற்றது என்பதுதான் வட மாநிலங்களில் அன்றாடம் நடைபெறும் கொடூர நிகழ்வுகளின் மூலம் நாம் உணர்ந்து கொள்ளலாம்.
எனது பின்னூட்டத்தில் எழுத்துப் பிழைகள் உள்ளன எனக் கருதுகிறேன். அதற்காக வருந்துகிறேன். சரி செய்து படித்துக் கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
கட்டுரையின் 2-வது பத்தி கீழிருந்து மேல்
3-வது வரி. ‘நடைபெற்றது’ எனத் திருத்தம் மேற்கொள்ளவும்.