நீயா? நானா? நாய்கள் ஜாக்கிரதை!

நீயா? நானா? நாய்கள் ஜாக்கிரதை!
நாய்களும் பூனைகளும் வளர்ப்பது பிரச்சினை இல்லை. அவை சமூக சூழலில் பிறரை என்ன செய்கிறது என்கிற பார்வையில் நமக்கு எந்தளவுக்கு சமூக சிந்தை இருக்கிறது என்பதுதான் கேள்வி.

நீயா? நானா? நாய்கள் ஜாக்கிரதை!

மீப காலத்தில் அரசியல் ரீதியாக முன்வைக்கப்படுவயன் வழியாக பல கற்பிதங்கள் உடைந்து தவிடு பொடியாகின்றன.

முற்றும் துறந்த துறவி என்பவன்தான் மனைவியை கொன்று புதைத்தவனாக இருக்கிறான். மனதை சாந்தப்படுத்தும் என யோகாவை முன் நிறுத்துபவன்தான் கடும் முன் கோபியாக இருக்கிறான். சைவ உணவு உண்ணுபவன்தான் சிறிதும் சகிப்புத்தன்மை இன்றி மூர்க்கனாக இருக்கிறான். சாமியார் என்பவன்தான் புதைக்கப்பட்ட பிணத்தை தோண்டி எடுத்து வல்லுறவு செய்ய வேண்டும் என்கிறான். இந்த வகையில் சமீபத்தில் அம்பலமாகி இருப்பவர்கள்தான் நாய் பிரியர்கள். அல்லது so called காருண்யம் மிக்கவர்கள்.

இன்றைய நீயா நானா நிகழ்ச்சி அதற்கு உதாரணம்.

நாய் பிரியர்களின் மனநிலை எந்த அளவுக்கு குரூரமாக இருக்கிறது என்பதை நிகழ்ச்சி பட்டவர்த்தனமாக காட்டியது.

அடிப்படையில் தெருநாய்களின் தொல்லையால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்றுதான் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டதே தவிர, கொல்ல வேண்டும் என சொல்லவில்லை.

ஆனால் அத்தகைக கருத்தை உச்சநீதிமன்றம் வெளியிட்டதில் இருந்து, ‘நாய்களை அரசு பிடித்து சென்று கொன்று விடும்’ என்கிற ஐயத்தை விதித்து, உச்சநீதிமன்ற கருத்துக்கு எதிராக ஊர்வலங்களை எல்லாம் நடத்தினார்கள் நாய் ஆர்வலர்கள். இந்த ஊர்வலத்தில் நம் சமூகங்களை சார்ந்த குப்பனும் சுப்பனும் பங்குபெறவில்லை. அவர்களின் உயிர்நேயம் என்பது விளம்பரம் தேடாதது. அவர்களின் நாய் வீட்டுக்குள் கிடக்கும். வீட்டுக்கு வெளியே நாய் வீடு என ஒன்று அமைக்கப்பட்டு தனியாக இருக்காது.

நாய் பற்றில் இருக்கும் சமூகரீதியிலான பார்வையை சற்று விரித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

‘Single ஆக இருக்கும் நான், என் நான்கு நாய்களை தான் குழந்தைகளாக பார்க்கிறேன்’ என்கிற வாக்கியத்தில் சக மனிதர்கள் மீதான அலட்சியமும் அவநம்பிக்கையும் பொதிந்திருப்பதில் இருந்து இப்பிரச்சினையை அணுகும்போது இன்னும் பல விஷயங்கள் தெளிவாகும்.

இன்றைய சமூகத்தின் தனிமை, தனிமனிதவாதம், கார்ப்பரேட் சிந்தை யாவும் சக மனிதர்களின் மீதான நேயத்தை அழித்து பிறர் மீதான அவமதிப்பை உருவாக்குகிறது. குறிப்பாக பார்ப்பனியம் கோலோச்சும் இந்தியா மாதிரியான சமூகத்தில் இந்தப் போக்கு, மனிதநேயத்தை உயிர்நேயத்தைக் கொண்டு substitute செய்கிறது.

எனவே இயந்திர மனம் படைத்த நவதாராள கால மனிதர்களுக்கு பரிவை நிரூபிக்க உயிர்நேயத்தையும் தன்னை முன்னிறுத்திக் கொண்டு, தன்னலமாக செயல்பட மனித வெறுப்பையும் அழகாக கலந்து ருசியுடன் தருகிறது இன்றைய பார்ப்பனிய-கார்ப்பரேட் உலகம்.

நாய்களும் பூனைகளும் வளர்ப்பது பிரச்சினை இல்லை. அவை சமூக சூழலில் பிறரை என்ன செய்கிறது என்கிற பார்வையில் நமக்கு எந்தளவுக்கு சமூக சிந்தை இருக்கிறது என்பதுதான் கேள்வி.

செல்லப் பிராணியில் இரு வகை சமூகங்கள் ஈடுபடுகிறது. உழைக்கும் சமூகம், மேட்டுக்குடி சமூகம்!

உழைக்கும் சமூகம் வளர்ப்பு பிராணியை சக உயிராக பாவிக்கிறது. மேட்டுக்குடி சமூகம் வளர்ப்பு பிராணியை கைப்பாவையாக பாவிக்கிறது. சொல்லப் போனால் மேட்டுக்குடி சமூகம் மிதமிஞ்சிப் போய் வளர்ப்பு பிராணியை தன் Symbol of Misanthropy ஆக பாவிக்கிறார்கள்.

Misanthropy என்பது மனித சமூகம் மீது கொண்டிருக்கும் அவநம்பிக்கை மற்றும் எதிர்ப்புணர்வு.

ஒரு சகமனிதனின் இயல்பான எதிர் உணர்வு வெளிப்பாட்டை கூட கையாள தயங்கும் தக்கையான மனிதர்களுக்கு, எந்த எதிர்ப்புமின்றி காலுக்கடியில் சுற்றி வரும் வளர்ப்பு பிராணிகள் நன்றியுணர்வு ஆணவ மகுடமாக இருக்கிறது.

படிக்க:

வீடுகளில் மட்டுமல்ல, தெருக்களிலும் நாய்கள் ஜாக்கிரதை!

நீயா நானா: கேள்விகளுக்கு அஞ்சும் தற்குறி‌ சங்கி கும்பல் விவாதத்தைத் தடை செய்கிறது!

கோபி ஒரு முக்கியமான கேள்வி கேட்டார். Boat Club, Harrington Road போன்ற மேட்டுக்குடி சாலைகளில் தெருநாய்களை பார்க்க முடியாது. உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் அதிகமாக தெருநாய்களை பார்க்க முடியும். ஏன்?

பரவலாக எல்லா மக்களும் நாய்கள் மீது பரிவு காட்டுகின்றனர் எனினும் ஒரு சிறு சூட்சுமம் இருக்கிறது. மேட்டுக்குடிகள் பரிவு காட்டினாலும் தங்களின் தெருக்களில் நாய்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்கின்றனர். அரசுக்கோ மாநகராட்சிக்கோ தொடர்பு கொண்டு நாய்களை அப்புறப்படுத்தி விடுவார்கள். ஆனால் உழைக்கும் மக்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் நாய்களை அப்புறப்படுத்த மட்டும் அந்த மேட்டுக்குடியினர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். பரிவு, உயிர்நேயம் என என்ன சொன்னாலும் இது எதுவும் அவர்கள் வசிக்கும் பகுதி அல்லது தெரு நாய்களிடம் அவர்களுக்கு இருக்காது.

உழைக்கும் மக்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் நாய்களுக்குதான் அவர்கள் வாதாடுவார்கள். அதாவது உழைக்கும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நாய்கள் திரிவதை உறுதி செய்கிறார்கள். உழைக்கும் மக்களும் அவர்தம் வசிப்பிடங்களும் சிக்கல் நிறைந்ததாக இருத்தி வைப்பது இவர்களின் நோக்கமாக இருக்கிறது.

மறுபக்கத்தில், உழைக்கும் மக்கள் மீதான தங்களின் சுரண்டலை இத்தகைய selective கரிசனம் கொண்டு அவர்கள் போக்கிக் கொள்ளும் உத்தியும் உண்டு. அதாவது தெருநாய்களின் மீது அவர்கள், அநாதரவான மக்களுக்கு காட்ட வேண்டிய பரிவை காட்டி சமன்படுத்திக் கொள்கிறார்கள். அதனால்தான் நாய்களை குறிக்கும்போது கூட “உங்க நாய், எங்க நாய்”, “உங்க தெரு நாய், எங்க தெரு நாய்” போன்ற வாக்கியங்களை உதிர்க்கிறார்கள்.

அடிப்படையில் இந்த நகரத்தில் இருக்கும் உழைக்கும் மக்கள், இவர்கள் வீட்டு நாயைப் போல், இவர்களின் தயவை வேண்டியபடி இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்கிறார்கள்.

உளவியலாகவும் சமூகவியலாகவும் செல்லப்பிராணி வளர்த்தலுக்கென ஒரு வரலாறு இருக்கிறது. அந்த வரலாற்றின்பால் இருந்து காருண்யம் பேசுபவர்களுக்கு மனிதநேயமே பிரதானமாக இருக்க முடியும். மனிதரை நிராகரித்து ஜீவகாருண்யம் பேசுபவர்கள் செயற்கையானவர்கள். இயற்கையானவர்கள் அல்ல.

தெருநாய்களை ஷெல்டர்களுக்கு அரசு கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து இந்த குதி குதிக்கும் இதே மேன்மக்கள்தான், பசுக்களை காக்க கோசாலைகளை அரசு கட்ட வேண்டுமென போராடுவார்கள். ஆனால் இவர்கள் எவரும் வீட்டில் மாடுகள் வளர்க்க மாட்டார்கள்.

Hypocrisy என ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு. அதை தன் வாழ்வியலாக கொண்டவர்கள் இவர்கள்.

முகநூல் பதிவு: ராஜசங்கீதன்

1 COMMENT

  1. நாய் பற்றாளர்கள் பார்பன மேட்டுக்குடி வர்க்க பிரிவாக இருக்கின்றனர்.
    மனிதர்கள் பற்றியோ மனித நேயம் பற்றியோ? சாதி ஆணவ படுகொலைகள் பற்றி மத ரீதியான படுகொலை பற்றியோ? குரல் கொடுப்போம் பொதுவில் போராடுவோம் இல்லை.
    மேலும் இவர்கள் வசிக்கும் தெருவில் தெரு நாய்கள் இரவு நேரத்தில் மொத்தமாக கொலைத்தால் இவர்கள் ஒருநாள் தாக்கு பிடிப்பார்களா?
    நாய் மலம் கழித்தால் சகித்துகொள்வார்களா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here