
நெல்லையில் சாதீய ஆணவத்தால் கூலிப்படை துணையோடு கொல்லப்பட்ட மென் பொறியாளர் கவின், யுனிவர்சிட்டி கோல்ட் மெடலிஸ்ட், மாதம் 2 லட்சத்திற்கும் மேல் சம்பளம்.
அப்பா சந்திரசேகர் நிலக்கிழார் (விவசாயி), அம்மா செல்வி ஆசிரியை. தாத்தா செல்லத்துரை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர். ஆறுமுகமங்கலம் எனும் சிறிய தாமிரபரணி பாசனத்தை நம்பி விவசாயம் செய்கின்ற கிராமம்.
அவர் பேசிப் பழகிய பெண்ணின் தாயும், தந்தையும் போலீஸ்.
பெண் தனியார் மருத்துவமனையில் சித்த மருத்துவர். பெண்ணின் தாயார் கிருஷ்ணகுமாரி மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் படை 9 ஆம் அணியில் சார்பு ஆய்வாளர். பெண்ணின் தந்தை சரவணன் ராஜபாளையத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 11 ஆம் அணி சார்பு ஆய்வாளர்.
கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள பெண்ணின் தம்பி, சுர்ஜித் என்ன படித்துள்ளார், என்ன வேலை தகவல் தெரியவில்லை.
படிப்பிலும், பொருளாதார வசதியிலும், மாத வருமானத்திலும் கொலையான கவின் குடும்பம் ஒசத்தியாகத்தான் இருக்கிறார்கள். சுர்ஜித் குடும்பத்தை விட.
நெல்லையில் வீணாகப் பேசும் வறட்டு சாதீய வெறிக்கு சுர்ஜித் அடிமையாகி, தனது அக்காவின் பேச்சு நட்பா, காதலா என்று கூட சிந்திக்கும் மனநிலை கூட இல்லாமல், சமூக ஊடகங்களின் சாதீய போதையால்
இரண்டு குடும்பத்தின் வாழ்க்கையைக் கெடுத்து விட்டார்.
இது தனிநபர் பிரச்சனையல்ல.
சோத்துக்கு வழியில்லாமல் சாதீயப் பெருமை பேசித்திரியும் சமூகத்தின் குற்றம்.
திருநெல்வேலி தீண்டாமை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் நியமிக்காமல், சாதி ஆதிக்க மனோபாவ ஊழியர்களை அந்த நீதிமன்றத்தில் பணிபுரிய வைத்துள்ள நீதித்துறையின் குற்றம்.
எல்லாப் பிரச்சனைகளையும் சட்டம் ஒழுங்கு அடிப்படையில் மட்டுமே பார்க்கும், வாட்ஸ்அப் குழுக்களில் சாதி சார்ந்து இயங்கும் காவல்துறையின் குற்றம்.
நன்றி
– கப்பிகுளம் ஜெ.பிரபாகர்
முகநூல் பதிவு







ஐ.டி.ஊழியர் கவின் ஆவண படுகொலை சமூகத்தில் சாதி தீண்டாமையால் படுகொலை செய்வது ஒரு இழிவான செயல் ஆகும் இந்த செயலில் ஈடுபடும் ஆதிக்க சாதி வெறியர்களால் நடத்தப்படும் படுகொலை ஆதிக்க சாதி சங்கங்களை தடைசெய்ய மத்திய மாநில அரசுகள் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் சாதி தீண்டாமைக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் ஆவணபடுகொலை செய்ய தூண்டும் RSS.BJP. சங்கிகளுக்கு பாடை கட்டுவோம்!